Saturday, December 25, 2010

மன்மதன் எய்த அம்பு.. வேண்டாம் இந்த வம்பு.


படத்துக்கான டைட்டிலை வச்சிட்டு அதை நியாயபடுத்த ரொம்பவே சிரம பட்டு கதாபாத்திரங்களின் பெயர்களை தேடி பிடித்து வைத்திருக்கிற மாதிரி நினைக்க தோணுது அந்த பெயர்கள்.. மன்னாரும் அப்புறம் அம்புஜாக்சியும்..
மன்னருக்கும், மதனகோபாலுக்கும், அம்புஜாக்ஷிக்கும் நடக்கும் சம்பவம் தான் இந்த மன்மதன் அம்பு.


படத்தை பத்தி சொல்லணும்னா , இந்த கதைய நம்ம விசுவிடமோ அல்லது S.V.சேகரிடமோ கொடுத்திருந்தால் எட்டுக்கு எட்டு அங்குலம் உள்ள இரண்டு நாடக அரங்கத்தை வைத்தே கதையை நன்றாக நகர்த்தி இருப்பாங்களோன்னு தோணுது. அந்த அளவுக்கு தான் இந்த படத்தோட திரைக்கதையோட வையிட்டே இருக்கு.

திரைதுறையிலே Operator, போஸ்டர் ஒட்டுறவன் வேலையை தவிர எல்லாத்திலேயும் மூக்கை நுழைக்க ஆசை படுகிற கமலின் ஈடுப்பாட்டை நாம் பாராட்டியே ஆக வேண்டும் ஆனால் இந்த படத்தோட திரை கதையை கிரேசி மோகனிடம் கொடுத்திருந்தால் இன்னும் நல்லா வந்திருக்கலாம்.

படத்தின் முதல் பாதி பார்க்க ஓரளவுக்கு நல்லாவே வந்திருக்கு... ஆனால் அதே எதிர்பார்ப்போட இரண்டாவது பாதியும் இருக்கும்னு எதிர் பாத்தீங்கன்னா ஏமாற்றமே மிஞ்சும்.. கதையை எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம நம்ம கமலும் , டைரக்டர் K.S.ரவிகுமாரும் முழிக்கிறது படத்தை பாக்க வருகிர பாமரனுக்கும் தெரியும் படியா அப்பட்டமா தெரியுது. அவ்வளவு சொதப்பல்கள் காமடி எங்கிற பேரில்..பம்மல் கே சம்மந்தம் , பஞ்ச தந்திரம் மாதிரி ஆரம்பம் முதல் கடைசி வரை கதாபாத்திரங்களை காமடியாக கொண்டு சென்ற இந்த ஜோடி இங்கே கோட்டை விட்டுருக்கிறார்கள்.படத்தில் கடைசி அரை மணி நேரம் என்ன நடக்குதுங்கிறதே தெரியல..

இந்த கதையை எடுக்க எதற்கு பிரான்ஸ், ஸ்பெயின் , இத்தாலி எல்லாம் போனாங்கன்னே தெரியலே.. யார் காசா இருந்தா என்ன, இப்படியா காசை கரியாக்குவது.. அந்த காசு ஸ்பெக்ட்ரம் மூலமா வந்த காசா இல்லையான்னு CBI விசாரிச்சதுக்கு அப்புறமாத்தானே தெரியும்..அந்த காசு ஒரு வேளை Hard Earned Money(?)யா இருந்தா , இந்த K.S. ரவிக்குமார் ரொம்ப தான் ஊதாரித்தனமா செலவு செய்திருக்க கூடாது.. அல்லது வெளிநாட்டு அழகையும், Luxury கப்பலின் அழகையும் தமிழனுக்கு இலவசமா காமிக்கனும்னு நினைதிருந்தாலும் அதிலும் ஏமாற்றமே.. ஒளிப்பதிவாளர் Manush Nandan புதிய வரா இருந்தாலும் , ஐரோப்பிய நாடுகளின் அழகை காமிக்க ரொம்பவே சிரம பட்டாலும் அந்த ஊர்களின் அழகையும் அப்புறம் Luxury கப்பல் MSC-Splendida வின் அழகையும் இன்னும் நல்லாவே காமிராவில் படம் பிடித்து காமிச்சிருக்கலாம்.ஏதோ அவங்க மட்டும் enjoy பண்ண படம் எடுக்க ஐரோப்பிய நாடுகளுக்கு போனது மாதிரி தெரியுது.







அப்புறம் இது ஒரு தமிழ் படமா, மலையாள படமா அல்லது ஆங்கில படமாண்ணே தெரியல.. கமல் தமிழில் கவிதை எல்லாம் சொல்லி இருக்கிறதை பாத்தா இது தமிழ் படம் மாதிரி தான்.. ஆனால் கமல், மாதவன் மற்றும் சிலரை தவிர வேறு கதாபாத்திரங்கள் எல்லாமே பக்கத்து மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய பட்டு , அவர்கள் மொழியிலேயே நடிக்க வைக்க செய்திருக்கிறார்கள்... நம்ம மாதவன் அது தாங்க நம்ம மதன் அவரு ஒரு வியாபர காந்தம், எப்ப பாத்தாலும் இங்க்லிஷ் தான் பேசுராரு அதுவும் தண்ணியிலேயே..இது தமிழ் படமா இருந்தாலும் கண்டிப்பா நிறய இடத்தில் தமிழிலேயே சப்-டைட்டிலெ போட வேண்டி இருக்கு.மாதவன் யார் கூட பேசினாலும் ஆங்கிலம், Producer கதாபாத்திரங்கள் குஞ்சனும், மஞ்சு பிள்ளையும் மலையாளம்...கமலும் , திரிஷாவும் தான் எப்பவாவது தமிழில் பேசுறாங்க..அப்புறம் நம்ம சங்கீதாவும்..

கமல், மாதவன், த்ரிஷா மற்றும் சங்கீதா நடிப்பில் அவரவர் திறமையை நன்றாகவே காட்டி இருக்கிறார்கள்.. கமல் மற்றும் மாதவன் கூட்டணி அன்பே சிவம் மாதிரி நல்லவே workout ஆகியிருக்கு.. அதாங்க chemistry ன்னு சொல்லுவாங்களே அந்த கண்றாவி தான்..
அதே நேரம் சில கேரக்டர்கள் எதற்க்கு வந்தாங்கன்னெ தெரியல..உஷா உதுப்,ஒவியா மற்றும் சில பேர்கள்... மாதவனுக்கு முறை பெண்ணாக வரும் களவானியில் கலக்கிய ஓவியாவிற்க்கு மாதவனுக்கு ஒரு தடவை பஜ்ஜி செய்து கொடுக்கும் பாத்திரமாக முடிந்து விடுகிறது அவளின் கதாபாத்திரம்.. மலையாள காமெடி நடிகர்களான குஞ்சன் மற்றும் மஞ்சு பிள்ளை தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாகவே செய்திருக்கிறார்கள்..

ஆனா ஒண்ணுங்க, நம்ம கமல் திரையுலகில் நடிகைகள் எங்கெங்கே என்னென்ன எல்லாம் செய்யிவாங்கன்னு மாதவனை வச்சு அப்படியே புட்டு புட்டு வக்கிறாரு.. அந்த கேரவன் வண்டி உட்பட.

ரமேஷ் அரவிந்துக்கும் , கமலுக்கும் அப்படி என்ன உறவோ. அவர் இல்லாம நம்ம கமல் படமே எடுக்க மாட்டாரா? அவருக்கு கொடுப்பதற்காகவே கேன்சர் நோயாளி கேரக்டர்..

நீல வானம் பாட்டு அருமை .. அதை எடுத்திருக்கிற விதமும் கூட.. காட்சிகளை பின்னோக்கி ஓட விட்டுருக்கிறார்கள்.. ஆனால் பாட்டு மட்டும் முன்னோக்கி ஓடி இருக்கு நல்ல வேளை..

கமல் இந்த படத்திலும் பாகிஸ்தானையும், லஸ்கர் இ தோய்யிபாவையும் விட்டு வைக்க வில்லை.. விஜயகாந்த் , அர்ஜுனுக்கு அப்புறம் கமலாலும் அவர்கள் இல்லாமல் படம் எடுக்க முடிய வில்லை பாவம்.. அவரோட வெளிநாட்டு மனைவியை காஷ்மீரில் லஸ்கர் இ தோய்யிபாவிடம் இருந்து தான் காப்பாத்துறாரு.. அப்புறம் அதே மனைவியை கொடைகானனில் ஒரு விபத்தில் பலி கொடுக்கிறார். உபயம்: காரில் வைத்து நடக்கும் த்ரிஷா மற்றும் மாதவனின் சண்டை.

கமல் கவிதை திறனுக்கு ஒரு சபாஷ்.. த்ரிஷாவையும் கவிதையை தமிழில் பேச வைத்திருக்கிறார்.. கவிதையில் வரலட்சுமி விரதத்தை மையமாக வைத்து சாடியிருப்பது யாரையோ?
ஒரு நாடக மேடையில் வைத்து நடத்த வேண்டிய கதையை பிரமாண்டம் எங்கிற பேர்வழியில், ஊரு எல்லாம் சுற்றி எடுத்து முடித்திருக்கிறார்கள்.. மன்னிக்கவும் , முடிக்க கஷ்ட பட்டிருக்கிறார்கள்..

மன்மதன் விட்ட அம்பு.. ஆனால் இலக்கை அடையும் முன் சற்று முனை மழுங்கி போய் விட்டது..