Friday, February 18, 2011

"கவுரவ" விரிவுரையாளர்களை வைத்து "கேவல" அரசியல் நடத்தும் ஜெ

"அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை தொடர்ந்து, கருணாநிதி வஞ்சித்து வருவதை பார்க்கும் போது, "சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்ற பழமொழி நினைவிற்கு வருவதோடு, கருணாநிதியிடம் அரசியல் காழ்ப்புணர்ச்சி மேலோங்கி நிற்பதும் தெளிவாகிறது. அனுபவம் வாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிதாக ஆசிரியர்களை நியமிக்கபோவதாக தி.மு.க., அரசு அறிவித்துள்ளது மிகுந்த வேதனையளிக்கும் செயல். கவுரவ விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர், 35 வயதை கடந்தவர்கள். இந்த வருமானத்தை நம்பி, திருமணம் செய்து குடும்பத்துடன் வசிக்கின்றனர்"

இதை சொன்னது யாருன்னு ரொம்ப யுகிக்க வேண்டாம்.. இதை சொன்னது சாட்சாத் ஜெயலலிதாவே தான்.. அதாவது அந்த அம்மாவுக்கு வீட்டுக்கு அனுப்புறதுண்ணா என்னவென்றே தெரியாதாம்.. இது வரைக்கும் யாரு வயத்துலையும் அடிச்சதே இல்லையாம்.

இந்த அம்மா ஆட்சி செய்த லட்சணம் தான் ஊருக்கே தெரியுமே..இது ஆட்சியிலே யாரை எல்லாம் பணி நிரந்தரம் ஆக்கிசுண்ணு கொஞ்சம் கேட்டு சொன்னா பரவாயில்லை.

எல்லாரையும் வீட்டுக்கு அனுப்புறதும், அப்புறம் டெஸ்மா, எஸ்மா அப்புறம் வேறு ஏதேதோ மா மட்டுமே தெரியும் இந்த அம்மாவுக்கு.. இப்போ தேர்தல் வர போகுது அப்படிண்ணு ஒரே காரணத்திற்காக யாரு எல்லாம் போராட்டம் நடத்துறாங்களோ அவங்களுக்கு ஆட்சியில வந்தவுடன் அனைத்தையும் செயிது கிழித்து விடுவேன்னு சவுடால் உட்டுட்டு திரியுது இந்த அம்மா.

போன பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் அப்படின்னு ஒரே காரணத்திற்காக தனி ஈழம் வாங்கி தருவேண்ணு சொன்ன இந்த அம்மாவால ஒரு இழவும் வாங்க முடியாது என்பதே நிதர்சன உண்மை.  எப்படியாவது , பொய்யையும் பித்தலாட்டத்தையும் செய்து , யாராரு என்னென்ன போராட்டம் நடத்துறங்களோ அவங்களுக்கு வலிய சென்று ஆதரவு தெரிவிக்கிறதே பொழுது போக்காக நடக்குது.இந்த விரிவுரையாளர்களுக்கும் , அரசியல் காழ்புணர்ச்ச்கிக்கும் என்ன சம்மந்தம்.?

ஆனா நம்ம நாட்டு மக்களும் கில்லாடிங்க தான்.. நேரம் பாத்து ஒவ்வொருத்தரா கோரிக்கைகளை (உக்காந்து யோசிப்பாங்களோ?) வைத்து தேர்தல் நெருங்குற சமயம் பாத்து போராட்டம் நடத்துனா தான் கேக்குறது கிடைக்கும்ணு  கௌதாரி கோழி பண்ணை முதலாளி முதல் கௌரவ விரிவுரையாளர்கள் வரை ஆளாளுக்கு கொடியையும் பேனரையும் எடுத்துட்டு கிளம்பிட்டாயிங்க..

அது போக இந்த அம்மா புதிய சட்ட சபைக்குள்ளேயே காலடி எடுத்து வைக்க மாட்டாங்களாம் காரணம் அதை கலைஞர் கட்டி தொலைச்சிப்புட்டாராம்.. பதவி பறி போயிடுங்கிறதுனால ஆறு மாசத்துக்கு ஒரு தடவை பழைய சட்ட சபைக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டுட்டு அலவன்சை வாங்கிட்டு நடைய கட்டுறது தான் இந்த அம்மாவோட வாடிக்கை.ஆனா இப்போ அதுக்கும் போக மாட்டாங்களாம், இருந்தாலும் பதவியும் போகக் கூடாது.யோசிச்சி பாத்துட்டு அந்த அம்மா ஒரு லீவு லெட்டர் எழுதிச்சே பாருங்க.
"As im suffering from fever and head-ache. Im unable to attend the classes today.So kindly grant me two days leave only" அப்படின்னு சின்ன பசங்க ஸ்கூலுக்கு போகாம கட் அடிச்சி கல்யாண விட்டுக்கு போயிட்டு மறு நாளு இப்படி தான் லீவு லெட்டர் கொடுப்பாங்க.அதே மாதிரி லெட்டர் எழுதி பன்னீர் செல்வத்துக்கிட்டே கொடுத்து அனுப்பி புதிய சட்ட சபைக்கு போகாம எப்புடியோ பதவியையும் காப்பாத்திடிச்சு. அதை விட கொடுமை என்ன அப்படிண்ணா அந்த லீவு லெட்டரையே சாக்கா வச்சு தனி நீதி மன்றத்துக்கும் போகாம டிமிக்கி குடுத்துடிச்சி.

கலைஞர் கட்டிட்டாரு அப்படிண்ணு சட்டசபைக்கு போக மாட்டிங்கண்ணா , நீங்க சென்னையில இருக்குற மேம்பாலங்களையும் யூஸ் பண்ண கூடாது.. அண்ணா மேம்பாலம் உட்படசென்னையில இருக்குற அனேக பாலங்களும் கலைஞர் ஆட்சியில கட்டப்பட்டது தான். ஆனா நீங்க அது மேல போகாம கீழே இறங்கி நடந்தா போறீங்க?
"அப்புடி கீழே இறங்கி நடந்து போனா உடம்புல உள்ள கொழுப்பாவது கொஞ்சம் கொறயுமில்ல"







Tuesday, February 15, 2011

DRDO-வின் கொசுவை கொல்லும் நவீன இயந்திரமும் , ISRO- வின் தொடரும் SORROW வும்.

தலைப்பை பார்த்து நான் ஏதோ வடிவேலு படத்துல வரக்கூடிய காமெடிய பண்ணுறேண்ணு தயவு செயிது நின்ச்சிராதிங்கப்பு.நம்ம வடிவேலு கொசுவை கொல்லும் நவீன இயந்திரத்தை , செய்முறை விளக்கங்களுடன் ரோட்டோரமா நின்னு வித்துக்கிட்டு இருப்பாரு,அதை சிங்கமுத்துவிடம் கேட்லாகை வச்சி செய்து காட்டி அடிவாங்குவது காமெடி.. ஆனா நான் இங்கே சொல்ல வந்தது அந்த நவீன இயந்திரத்தை பத்தி அல்ல.

நான் இஙகே சொல்ல வந்தது Defence Research and Development Organisation(DRDO) சமீபத்துல கண்டு பிடிச்சிருக்கிற நவீன கொசுவை கொல்லும் வெப்பனை பத்தி..

இது வரைக்கும் மிஸ்ஸைலையும் , ராணுவத் தளவாடங்களையும் மட்டுமே செஞ்சி செஞ்சி அலுத்து போன நம்ம DRDO ஒரு சேஞ்சுக்காக மக்களோட பழைய பரம எதிரியான மலேரியாவை பரப்பும் கொசுக்கிட்டேருந்து மக்களை காப்பாத்துறதுக்கு   ஒரு கிரீமை கண்டு பிடிச்சுருக்காங்க... இந்த கிரீமோட பேரு 'Maxo Military' and 'Maxo Safe & Soft Wipes'.

இந்த கிரீமை உடம்புல பூசிட்டீங்க அப்படின்னா இது பரப்பக்கூடிய மணம் , இந்த அரசியல்வியாதிங்க மக்களையும் , நீதியையும் ஏமாத்துற மாதிரி அந்த கொசுவையே ஏமாத்துறது மட்டுமில்லாம , கிரீமோட molecules அந்த கொசுவோட sensory mechanism துலேயே புகுந்து அந்த கொசுவை குழப்பி நம்மள அது கடிக்க விடாம பண்ணிருமாம்.. என்ன ஒரு ஏமாற்று வித்தை..பக்கத்துல இருக்கிற மனுசனோட இரத்த வாடையே தெரியாத படி இந்த ஜெல் அந்த கொசுவை அநியாயமா ஏமாத்திப்புடுமாம்..


இந்த ஜெல்லை நம்ம ஆர்மி காரங்க காட்டுக்குள்ளே போகும்போது  கொசுகிட்டேயிருந்து அவங்கள காப்பாத்திக்க தடவிக்க போறாங்களாம்.. எல்லாம் சரி, தப்பு செய்யுறவனும் , நாட்டுக்கு கேடு பண்ணுறவ்னும் ஊருக்குள்ளே Tortoise ,  ALL-OUT போட்டு சுத்திகிட்டு இருக்கும்போது இவனுங்க யார புடிக்க காட்டுக்கு போறானுங்க , அதுவும் இந்த கிரீம வேற தடவிக்கிட்டு  ??
DRDO ஆயுதம் ஆய்தமா செஞ்சி செஞ்சி வச்சிருந்தாலும் , அதை எப்போ பயன்படுதுவாங்கண்ணே தெரியாது.. அதுனால தொழிலை மாத்தி நாலு காசு சம்பாதிக்கலாம்ணு முடிவு செஞ்சுட்டாங்களோ என்னமோ. வெளி சந்தையில mosquito repellent ஜெல்   36 ரூபாயா இருந்தாலும் நம்ம DRDO  தயாரிக்கிற இந்த ஜெல் வெறும் 3 ரூபாயிக்கு கிடைக்குமாம்.

ஏதோ ஒரு வ்ழியா நம்ம DRDO தொழிலை மாத்தி அவங்களுக்கு தெரிஞ்ச குடிசை தொழில் செய்யிர லெவலுக்கு வந்துட்டாங்க நல்ல விசயம் தான்.. ஆனா இந்த ISRO?

அவங்க கடைசியா விட்ட 7 GSLV ராக்கெட்டுல ரெண்டு மட்டும் ஏதோ வெற்றி கிடைச்சிருக்கு, மூணு ராக்கெட் கிளம்புன வேகத்துலயே புஸ்வானம் ஆகிடிச்சு..  ரெண்டு தடவை அனுப்புனதுலே பாதி வெற்றிண்ணு சொல்லிக்கிறாங்க.

10 ஜூலை 2006ம் தேதி  GSLV-F02 வை  அனுப்பினா அது ஒரே நிமிடத்துல ராக்கெட்டும் சாட்டிலைட்டும் மொத்தமா வங்க கடலில விழுந்துடிச்சு.

02 செப்டம்பர் 2007 ஆம் தேதி  GSLV-F04 வை  அனுப்பினா அது அவிங்க சொல் பேச்சு கேட்காம அதிகபிறசங்கித்தனமா ஆர்பிட்டையும் தாண்டி போயிடிச்சு.

15 ஏப்பிரல் 2010 ஆம் தேதி  GSLV-D3 வை  அனுப்பினா அது சொங்கி ஆகி ஆர்பிட்டுக்கு பக்கத்துலே கூட போகாமா புஸ் ஆகிடிச்சு..

25 டிசம்பர் 2010 ஆம் தேதி  GSLV-F06  வை  அனுப்பினா அது சொல் பேச்சு கேட்காம கண்ட்ரோலும் போனதுனால நம்ம ஆளுங்களே அதை அழிச்சிட்டாங்க..இப்புடி போவுது நம்ம ஆளுங்க உடுற ராக்கட்டோட கதை.இவனுங்களை ஒழுங்கா டெஸ்ட் பண்ணாம அவசர கதியில யாரு ராக்கட் அனுப்ப சொன்னது..

எனக்கு ஒண்ணு மட்டும் புரியவே இல்லை.. அது எப்புடி ISRO சேர்மேன் மட்டும் 1994 ல இருந்தே மலையாளிகளா இருக்காங்க.கஸ்தூரி ரங்கனில் தொடங்கி இப்போது இருக்கிற ராதாகிருஷ்ணன் வரைக்கும் கேரளத்துலே பிறந்தவைங்க.
ISRO சேர்மேன் ஆகணும்ணா கேரளாவில் பிறந்திருக்க வேண்டுமென்பதும் எழுதப்படாத தகுதியா இருக்குமோ. ISROவை கேரளாவின் தறவாட்டு (அதாங்க குடும்ப சொத்து) சொத்தாகவே ஆக்கிட்டாங்களா? இதுக்கும் ராக்கட் புஸ்வானம் ஆகுறதுக்கும் ஒரு முடிச்சி போட நான் விரும்பல..ஆனா  இந்தியாவில இவங்கள விட்டா தகுதியான் ஆளே கிடையாதா ?

இது இப்புடி போகுதுண்ணா நம்ம நாட்டோட வெளி உறவு செயலாளராக இருக்கணும்ணாலும் மலையாளிங்கிற தகுதி தேவைப்படுது.MK நாராயணனில் தொடங்கி இப்போது உள்ள நிருபமா ராவ் வரைக்கும் கேரளவாசிகள். அவங்களை தான் இலங்கைக்கு அனுப்பி தமிழனுக்காக பேச சொல்லுவாங்க..

கேரளாவை சேர்ந்த வயலார் ரவி தான்  Minister of Overseas Indian Affairs and Minister of Civil Aviation.AK அந்தோணி தான் Minister of Defence.

இப்படியாக வெளிநாட்டு சமாச்சாரம் ஆனாலும் சரி, விண்வெளி சமாச்சாரம் ஆனாலும் சரி அதுல மலையாளிங்களை தான் உயர்பதவியிலே போடுறாங்களே அது ஏண்ணு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா. அவனுங்களோட முப்பாட்டனா இருப்பாரோ இந்த ஆரியபட்டா? 


இப்படியே போனா DRDO கொசு மருந்து கண்டுபிடிச்ச மாதிரி , ISRO வும் உடுற ராக்கட்டு தான் வேலைக்காகல அதுனால கெட்டு போகாத கப்பை கிழங்கும், தென்னங்கள்ளையும் கண்டு பிடிச்சி பாக்கட்டுல அடச்சி விக்க போறாங்க.

தவறேதேனும் இருந்தால் மன்னிக்கவும், நானும் மலையாள கரை வாசி தான்.. உங்கள் பொன்னான கமெண்டுகள் ப்ளீஸ்..

"செட்டன்மாரே கொரச்சி கொமென்ட அடிசிட்டு போகு"










Tuesday, February 1, 2011

உலக கோப்பையும் , இந்தியாவை உசுப்பேத்தலும்.

கடந்த பத்து வருசமா எப்போ உலக கோப்பை கிரிக்கெட் நடந்தாலும் , இந்தியா தான் கோப்பையை வெல்லும்னு கோப்பைய செய்யிறதுக்கு முன்னாடியே எல்லாரும் சொல்லுறது தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கு..

இந்தியா தான் கோப்பையை வெல்லும்னு , தென் ஆப்ப்ரிக்கா கேப்டன் ஸ்மித் மட்டுமல்ல , துனுஷியா கால்பந்து கேப்டன் கரிம் ஹக்குயி வரைக்கும் சொல்லுறதுல இருந்து இதுலே ஏதோ உட்குத்து இருக்குமோண்ணு தோணுது..

நம்ம ஆளுங்க தெறமசாலிங்க தான்.. ஆனா புலிகேசி மாதிரி ஓவறா அவனுங்களை  புகழ்ந்தா கோட்டை விடுறதுலையும் நம்ம ஆளுங்க கெட்டிகார பயபுள்ளைங்க..

இவிங்க தான் Upper Dog (அதாங்க Under Dog க்கு opposite) ண்ணு ஓவரா சீன போடும் போதே இந்த பயலுக ஜாக்கிரதையா இருக்கணும்.இவங்கள இப்புடி உசுப்பேத்தினா , மெத்தனமா களத்துக்கு வருவயிங்க  ஈசியா அவனுங்கள அடிசிபுடலாம்ணு ஆப்பிரிக்கா கண்டத்துல மட்டுமில்லாம ஆஸ்திரேலியா கண்டத்துலயும் கூட கங்கணம் கட்டிடு கதய உட்டுட்டு திரியிராணுங்க இந்த சூனா பானாக்கள்..

சேவாக்கு புரட்டி புரட்டி அடிப்பாரு,
யுவராஜு அடிச்சு அடிச்சு புரட்டுவாரு,
சச்சின் நெறய சாதனைகளை செய்வாரு,அவர வீழ்த்துரது ரொம்ப குஸ்டமப்பா,
பதான் எதிரிங்கள பதம் பாப்பாரு...
ரையினா ரெயின் வந்தா கூட வின் பண்ண வச்சுருவாரு,
தோணி தான் இந்தியா உலக கப் வாங்குறதுக்கு உதவுற தோணி,
விராட் கோழிய கிரவுண்ட  விட்டு விரட்டுறதுல நெறய சிக்கல்

அப்ப்டி இப்படிண்ணு ஏகத்துக்கு புள்டப் மற்றும் ஓப்பணிங்  சாங் போடாத கொறயா புகழ்ந்துட்டு திரியுறானுங்க.. நாம தான் சாக்கிறதயா இருக்கோணும்..

நம்ம் ஆளுங்க போன உலக கோப்பை போட்டிக்கு West Indies போனப்ப , இவிங்க கோப்பயோட தான் வருவாயிங்கண்ணு எல்லாரும் உசுப்பேத்தினாயிங்க..அத நம்பி நான் கூட 100$ கொடுத்து StarHub Cricket Package Subscribe பண்ணி ,  காசையும் இழந்து , உறக்கத்தையும் இழந்தது வேறு கதை.

நம்ம ஆளுங்க முதல் ரவுண்டிலேயே பங்க்ளாதேஷிடம் மண்டி இட்ட பிறகும், ரெண்டாவது போட்டியிலே அடிச்சானுங்க பாருங்க 413 ரன்.. ஆனா அடி வாங்கினது யாரு தெரியுமா பெர்முடாஸ்..அவங்க நாட்டோட அளவே பத்து கிரிக்கெட் கிரவுன்டு அளவுக்கு தான் இருக்கும்.. தாயில்லா புள்ளய போட்டு இந்த அடி ஈவு இரக்கம் இல்ல்லாம அடிச்சிட்டு , அப்புறம் அவங்க இலங்கையை ஜெயிக்க மாட்டாங்களாண்ணு நப்பாசயோட ஊருக்கும் கிளம்பி வராமா , அடுத்த ரவுண்டுக்கு போக ஆசை பட்டு , அவிங்க ஆடுற மேட்சை வெட்கமே இல்லாம West Indies  ல் 5 ஸ்டார்  ஹோட்டலில் உட்காந்து பாத்த கதையும் உண்டு. 


இன்னுமாட நம்மள இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு.. பக்கி பயபுள்ளைங்க இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே கப்பை ஜெயிக்கிறதென்ன , அடுத்த ரவுண்டு தாண்ட விட மாட்றாங்கன்னு கைப்புள்ள லெவலுக்கு ஆங்க்க்க்க்க்க்க்க் வைக்கிறதும் காதுல விழுது.

நீங்க தீயா எறங்கி வேல செய்து , உலக கோப்பை வின்னரா ஆகணும்டா ஆகணும்னு நாங்களும் எதிர் பாக்குறோமுங்க.