வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Thursday, March 31, 2011

தேர்தல் களத்தில் சரியும் விஜயகாந்தின் விக்கெட்டுகள்!!


விக்கெட் # 1 : அண்ணாவின் ஆவி

பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றுதல் காரணமாக அண்ணா பெயர் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதால்தான், அவர் பெயரிலான கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளேன் என்றார் விஜயகாந்த்.

அண்ணாவின் ஆவி சொல்லிச்சு, அண்ணாவின் ஆயா சொல்லிச்சுன்னு எப்போ சொன்னாரோ அப்போதே ஒபனிங்க் விக்கெட் காலி.. ஆவியில இட்லி சுட்டு வியாபாரம் செஞ்சு பொழப்பு நடத்தும் முனியம்மாவையே நம்பலாம்.. ஆனா குடி போதையில ஆவிக்கிட்டே பேசிகிட்டு இருக்கும் மந்திரவாத சூனியக்காரர்களை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள், குறிப்பாக இஸ்லாமிய சமயத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலானோர் ஆவிகள் பேர் சொல்லி திரியும் பாவிகளை நம்புவதில்லை.

விக்கெட் # 2: வடிவேலு பிரச்சாரம்

எந்நேரமும் தண்ணியில மிதக்குறவன் பேரு இல்லை கேப்டன் என்பது போன்ற அரும்பெரும் கருத்துக்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வடிவேலு செல்லுமிடமெல்லாம் ஏக ரெஸ்பான்ஸ் வாங்கி மக்களை சிந்திக்க வைத்திருக்கிறார் . இதனால் இவருடைய ரெண்டாவது விக்கெட் காலி.


வடிவேலுவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல போவதில்லை என்று சொன்ன விஜயகாந்த் , வடிவேலுவை இப்படியே பந்து வீச விட்டால் எல்லாரையும் க்ளீன் போல்ட் ஆக்கி விடுவார் என்று பயந்து வடிவேலுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது மட்டுமின்றி , வடிவேலு பந்தை மட்டுமே எதிர்கொள்ள சிங்கமுத்துவை பேடு கட்டி அனுப்பி இருக்கிறார்கள்.


விக்கெட் # 3: (வேட்பாளரை) ஹிட் விக்கெட்

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதை அந்த வேட்பாளர் திருத்தியதால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்து உதைத்தார்.

 மக்களுக்கு சேவை (??) செய்வதர்காக பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் தன்னுடைய அடவடித்தனங்களையும், கை கால்களையும் குறைந்தது பொது இடங்களிலாவது அடக்கி வைக்க வேண்டும்.. அட நீங்க கதவை சாத்திகிட்டு பண்ருட்டிய எந்த மாதிரி திட்டினாலோ அல்லது மச்சான் சுதீஸை கட்டி வச்சி அடிச்சாலோ யாருக்கும் தெரியாது , யாரும் கேட்கவும் மாட்டார்கள்.. ஆனா பொது இடத்துல அதுவும் உங்க கட்சி வேட்பாளரையே கும்மு கும்முன்னு கும்முனா பொது ஜனத்துக்கு கண்டிப்பா உங்க மேல நல்ல ஒரு அபிப்ராயம் வராது..


விக்கெட் # 4: விருத்தாச்சலம் மக்கள்

நீங்க இந்த முறை விருத்தாச்சலத்தில் ஏன் போட்டி இடவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்க்கு அங்குள்ள மக்கள் சரி இல்லையென்று சொன்ன போது விழுந்தது நாலாவது விக்கெட்.

ஆட்டம் நடக்கும் போது பொதுவா பேட்ஸ்மேன் அவுட் ஆகுறதுக்கு ஏகப்பட்ட காரணம் இருக்கலாம் , ஆனா பார்வையாளார் (விருத்தாச்சலம் தொகுதி மக்கள்)  சரி இல்லைன்னு சொல்லுறது எல்லாம் ரொம்ப ஓவர். அதுபோல உங்களால் நிருபர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் ஒழுங்கா சிந்திச்சு பேச தெரியல!

 விக்கெட் # 5: சக (அ.தி.மு.க) வீரர்களிடம் சண்டை!

கூட்டணி கட்சின்னு நெனச்சி அ.தி.மு.க தொண்டர்கள் நீங்க பிரச்சாரம் பண்ண வந்த போது ஏதோ அவங்களோட கட்சி கொடியையும் சேர்த்து கொண்டு வந்திருக்காங்க.. ஆனா நீங்க அ.தி.மு.க ர.ர.க்களிடம் கொடியை இறக்குங்க இறக்குங்கன்னு சத்தம் போட்டு கத்தி இருக்கீங்க அதுவும் மைக்குல.கூட்டணி கட்சிகாரன் எப்படி உங்களுக்கு பிரச்சாரம் பண்ணுவான்.. அதுனால கழண்டது விக்கெட் நம்பர் 5.

மக்களிடமும் தெய்வத்துடனும் தான் கூட்டணின்னு சொன்ன காலம் மலையேறி போயி , இப்போதைக்கு தனியா நின்னா ரெண்டு பேராலையும் போனியாக முடியாதுன்னு நெனச்சு தானே ரெண்டு பேரும் சேந்து மட்டைய எடுதுட்டு வந்தீங்க.. அதுனால ஓட்டு வாங்கணும்னா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஓடுனா தானெய்யா ரன் கிடைக்கும்..நீங்க தனியா ஒரு பேட்டை மட்டும் வச்சிகிட்டு ஓடுனீங்கன்னா   எப்பிடி ரன்(ஓட்டு) கிடைக்கும்,
 
 விக்கெட் # 6:  முன்னுக்கு பின் முரணாக பேசி செய்யும் பிரச்சாரம்

பிரச்சாரம் செய்ய போகும் போது வாயில் வந்ததை எல்லாம் உளற கூடாது.. அப்படி தான் மகாபாரதத்துல ஒரு கதைன்னு ஆரம்பிச்சி , கதை என்னான்னு கூட தெரியாம உதவியாளர் கிட்டே புக்கை எடுத்து கேட்டு விட்டு ,, அந்த புக்கை ரெண்டு தடவை புரட்டி விட்டு அடுத்த பேச்சு பேச உங்க பாட்டுக்கு போயிட்டீங்க..மக்கள் அந்த கதை என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு மண்டைய ஒடச்சதுதான் மிச்சம்.. உங்களுக்கே நல்ல தெரியும் உங்க பொது அறிவு கொஞ்சம் இல்ல ரொம்பவே வீக்குன்னு.. நீங்க பேசுறது உங்க்ளுக்கும் புரியல அதை கேக்குறவனுக்கும் புரியல.. விக்கெட் நம்பர் 6 காலி.

இப்புடியே உங்க மெயின் பேட்ஸ்மென் எல்லாம் காலி ஆகிட்டாங்க. இப்போதைக்கு இருக்கிறது டெயில் என்டர்ஸ் மட்டும் தான்.. அவங்களை மட்டும் வச்சு உங்களால அஞ்சு ரண்ணாவது எடுக்க முடியுமாங்கிறது தான் டவுட்டு.. ஆனா உங்க வெற்றி இலக்கோ டக்ளஸ் லூயிஸ் முறைப்படி 41 ரன்.. கரை சேருரது கொஞ்சம் கஸ்டம் தான்..


Wednesday, March 30, 2011

கொட்டுவதற்கு ஒரு மொட்டை இலவசம்!!

தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை, மக்கள் முன்னிலையில் சரமாரியாக விஜயகாந்த் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால், சோ கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள்.


இதுகுறித்து அவர் கருத்து கூறுகையில், "எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க", என்றார்.

ஆகையால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் உங்களுக்கு சோ வை அடிக்கவோ அல்லது மொட்டை மண்டையில் கொட்டவோ ஆசை இருந்தால் எங்கள் இ.கு.க கட்சி கிளை அலுவலகங்களில் வினியோகிக்கும் விண்ணப்ப படிவத்தை வாங்கி நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைத்தால் சோவை நடு ரோட்டில் வைத்து அதுவும் தேக்குமூக்கா (அவிங்க ஒரிஜினல் கட்சி பேரு வாயில நுழையாதுல்ல) பிரச்சார வண்டியின் மேல நிற்க வைத்து அடிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்..உங்கள விண்ணப்ப படிவங்களுக்கு முந்துங்கள்.. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இச்சலுகை. தட்கல் வசதியும் உண்டு..

நீங்கள் நல்லநேரம் சதிஷ்குமார் போன்ற ஜோசிய ஏமாற்று பேர்வழிகளிடம் வாங்கிய  ஏதாவது பெரிய சைஸ் உள்ள ராசி(??) கல் மோதிரம் வைத்திருந்தால் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


நாட்டு மக்களே நீங்கள்  சொ(ட்டை) மண்டையில் கொட்டுவதை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்.

இப்படிக்கு
இ.கு.க கட்சி தலைமை கழக மனமகிழ் மன்ற குழுSaturday, March 26, 2011

விஜயகாந்தை துரத்திய அண்ணாவின் ஆவி!


செய்தி:

அண்ணாவின் ஆவி கூறியதால்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக விஜயகாந்த் கூறினார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே, திறந்த வேன் மூலம் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய விஜயகாந்த், நான் ஏற்கனவே கூறிவந்ததைப் போலவே, மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்துள்ளேன் என்றார்.

பொன்னேரி தொகுதியில் பேசிய விஜயகாந்த், நான் சிறு வயது முதலே எம்.ஜி.ஆர். மீது பற்று உள்ளவன். அவர் ஒவ்வொரு படத்திலும் எந்தெந்த மாதிரி உடை உடுத்தி நடித்தார் .உடை உடுத்தி நடித்தார் என்பது கூடஎனக்குத் தெரியும். அ.தி.மு.க.வுடன் விஜயகாந்த் ஏன் கூட்டு சேர்ந்தார் என்று நீங்கள் நினைத்து இருக்கலாம்.பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றுதல் காரணமாக அண்ணா பெயர் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதால்தான், அவர் பெயரிலான கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளேன் என்றார்.

விசாரித்து அறிந்த உண்மை:

ஒரு நாள் நமது விஜய காந்த் அவர்கள் வழக்கம்போல தண்ணிய போட்டுகிட்டு படுத்திருக்காரு.. மணி சரியா ஒரு பனிரெண்டு இருக்கும் ஒரு குள்ளமான ஒரு உருவம் தோன்றி ரமணா, தம்பி ரமணா அப்படின்னு ரெண்டு தடவை கூப்பிட்டிருக்கு... நாம தான் அந்த படத்தை நடிச்சி முடிச்சிட்டோமே , முருகதாஸ் ஏதோ காமெடி பண்ணுராருன்னு நெனச்சி போர்வைய இழுத்தி போத்திகிட்டு தூங்கி இருக்காரு.. அந்த உருவத்துக்கு வந்தது பாருங்க கோபம், திரும்பவும் தம்பி விஜயராஜ், விஜயராஜ்ன்னு ரெண்டு தடவை கூப்பிட்டு இருக்கு.. நம்ம விசயகாந்துக்கு ஒரே ஆச்சர்யம்.. நம்ம ஒரிஜினல் பேரை வச்சி  கூப்பிடுறது யாருன்னு நெனச்சி யாரப்பு நீயின்னு கேட்டுருக்காரு..

அதுக்கு அந்த உருவம் நான் தாண்டா உங்களோட அண்ணா அப்படின்னு சொல்லி இருக்கு.. உடனே இவரு அப்புடி எல்லாம் இருக்க சான்ஸ் இல்லயேன்னு வடிவேலு ஸ்டைலுல யோசிச்சிருக்காரு.. நமக்கு கூட பொறந்த அண்ணா யாருமே இல்லையேன்னு நெனச்சவரு அவரோட நைனா  அழகர்சாமியையே ஒரு நிமிசம் சந்தேகபட்டுருக்காரு..உடனே சுதாரிச்ச அந்த உருவம் , அட மடையா நான் உனக்கு மட்டும் அண்ணா இல்லைடா இந்தா ஊருக்கே அண்ணா அப்படின்னு சொல்லிடிச்சி.

நான் நடிச்ச படம் தான் எங்கள் அண்ணா , நீ என்னையே கலாய்க்கிறியான்னு திருப்பி கேட்டுருக்காரு..அடே நான் நீ நடிச்ச படம் இல்லடா, நான் அண்ணாதுரை , பொறந்து வளந்தது காஞ்சி புரதுலேன்னு மொத்த பயோடேட்டாவும் அந்த உருவம் கொடுத்த பிறகு தான் ஓ அவரா நீங்கன்னு திருப்பி கேட்டுருக்காரு..

கேட்டுட்டு என்னை எதுக்கு இப்போ கூப்பிட்டீங்கன்னு கேக்க அந்த உருவம் சொல்லிச்சாம்.. நீ தான் இனிமே இந்த தமிழ் நாட்டையே முடிஞ்சா உலகத்தையே காப்பாத்தணும்னு சொல்லிச்சாம்..இவருக்கு ஒரே குசி தான் போங்க..இருந்தாலும் உன்னால தனியா நின்னு தமிழகத்தை தூக்கி பிடிக்க முடியாது , கொஞ்சம் ஓவர் வெயிட்டா இருக்கும் , நீ வேற எந்நேரமும் தண்ணிய போட்டுட்டு இருக்குறதுனால நாடி நரம்பு கொஞ்சம் இல்ல ரொம்பவே வீக்கா இருக்கு, அதுனால ஒரு ஆள துணைக்கு கூப்பிட்டு தமிழகத்தை தூக்கி உன் முதுகுல வச்சிகோண்ணு சொல்லிச்சாம்..

நான் யாரை துணைக்கு கூப்பிடறதுன்னு இவர் திருப்பி கேக்க, நீ பண்ருட்டி எழுதி கொடுக்குறத வாசிச்சி வாசிச்சியே பழகிட்டதுனால உன்னால சுயமா சிந்திக்கவே முடியல,,அதுக்கும் நான் தான் உதவி செய்யணுமா அப்டின்னு அந்த ஆவி கேட்டுட்டு உனக்கு நான் ஒரு க்ளு தாரேன், அதை வச்சி கண்டு பிடின்னு சொல்லிச்சாம்.. நான் ஒரு சின்ன க்ளுவை வச்சி பாகிஸ்தான் தீவிரவாதியையே புடிச்சவன் சொல்லு அந்த க்ளுவைன்னு இவரு கேட்க.. என்னோட பேரு இருக்குற கட்சி காரங்கள துணைக்கு கூப்பிடுண்ணு சொல்ல இவருக்கு ஒரே கொயப்பம்..  

உடனே இவரு அடடே நம்ம எம்.ஜி.அர்.அண்ணா.தி.மு.க வான்னு கேட்க அது இல்லைன்னு சொல்லிடிச்சு.

அடடா இது ரொம்ம்ப கஸ்டமான க்ளூவா இருக்கே , வேறு ஏதாவது க்ளு சொல்லி கேக்க உடனே அந்த உருவம் சொல்லிச்சாம் அந்த கட்சி தலைவி எப்போதுமே ரெஸ்ட் எடுத்துட்டு மலை பிரதேசங்களில் தங்கி இருப்பாங்க நீ போயி கண்டு புடின்னு சொல்லிட்ட்டு மறஞ்சி போயிடிச்சு..

இவரு காலைல எழுந்து பல்லு கூட வெளக்காம பண்ருட்டிக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்துட்டு ஆழ்ந்த சிந்தனையில மூழ்கின சமயம் பண்ருட்டி திரும்ப போண் செய்ய இவரு முழு கதையும் சொல்லிட்டாரு.. அவர் உடனே நாம வேணும்ணா கழக கார்பரேட் அக்கவுண்ட்ல ரூம் போட்டு யோசிப்போமாண்ணு கேட்க அவரு கண்ணு இன்னும் செவந்திருச்சி.

அப்புடியே அந்த நாளும் ஓடிப்போக திரும்பவும் அதே பனிரெண்டு மணி, அதே கனவு, அதே உருவம், அதே குரல்.. என்ன அப்பு யாருன்னு கண்டுபுடிச்சியான்னு கேக்க இவரு மண்டைய ஆட்டி இல்லைன்னு சொல்ல , ஷ்ஷப்பான்னு சொல்லிட்டு, சரி இன்னொரு க்ளு சொல்லுறேங்கேளுன்னு , அவங்கள அரஸ்ட் பண்ணினப்ப மூனு பேர உயிரோட எரிச்சிருக்காங்கண்ணு சொல்ல நம்ம விஜயகாந்த் டக்குன்னு கரக்ட் எனக்கு தெரியும், இதே காட்சி ரமணா படத்துலேயும் வந்திருக்குன்னு யோசிச்சிட்டு ஓ அ.தி.மு.க வான்னு கேக்க அட கூறு கெட்ட கூபேன்னு சொல்லி ஆமாம் அவங்க தான் , அவங்க எத்தனை சீட் கொடுத்தாலும் வாங்கிருன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம்..இதுனால தான் அவரு போயஸ் கார்டன் போயி உடன்பாடு போட்டிருக்காரு..
ஒரு நாள் அன்னிக்கு அவர் தண்ணிய போடாம படுத்துருக்காரு, அதே உருவம் திரும்பவும் வந்துருக்கு... அதே குரல்.. இவர் முழிச்சி பாத்தப்போ பக்கத்து வீட்டு கார் டிரைவர் அண்ணாதுரை நின்னுகிட்டு இருந்திருக்கானாம்.. அவன் விஜயகாந்துகிட்டே மாட்டினதுனால ஊர விட்டே போயிட்டானாம்,, 

தற்போதைய செய்தி : பக்கத்து வீட்டு ஓணர் டிரைவர் வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருக்காரு  .


Wednesday, March 23, 2011

கூட்டணி டென்ஷனை அடிதடியுடன் 'கொண்டாடிய' விஜய காந்த்

கூட்டணித் தலைமை கொடுத்த பெரும் டென்ஷனால் ஏகமாக பதறிப் போன விஜய காந்த் , அந்த டென்ஷனை தனது கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டியிடமும் , மச்சானிடமும் கடுமையாக காட்டியதால் கட்சியினர் ஆடிப் போய் விட்டனராம்.


சும்மாவே இந்த தலைவர் கடுமையான டென்ஷனானவர். சாதாரண விஷயத்திற்குக் கூட கடுமையாக கோபப்படுவார். இந்த நிலையில் முதல் முறையாக கூட்டணிக்குள் புகுந்த நேரமோ என்னவோ, கூட்டணியின் ஆரம்பத்திலேயே பெரும் பூகம்பம் வெடித்தது இவரை கடும் பதட்டத்தில் ஆழ்த்தி விட்டதாம்.

அதுவும் டிவியில் கூட்டணித் தலைமையின் வேட்பாளர் பட்டியலை பார்த்ததும் பதறிப் போய் விட்டாராம். கோபம் அதிகமாகியதால் அவர் கடும் பதட்டமடைந்து விட்டாராம்.

உடனே அருகில் இருந்த அந்த பன்ருட்டியாரை, இந்த வார்த்தைதான் என்று இல்லாமல் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி தாறுமாறாக திட்டித் தீர்த்து விட்டாராம். இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த அத்தனை பெயரையும் கெடுத்து விட்டீர்களே என்று ஒருமையில் திட்டித் தீர்த்தாராம். அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் பல நல்ல வார்த்தைகளாம்.

அருகில் இருந்த மச்சான் சுதீஸ் சமாதானப்படுத்த முயன்றபோது பளாரென ஒரு அறை விட்டு ஓரமாப் போ என்று கத்தி விட்டாராம். இந்த கடும் கோபத்தால் பிளட் பிரஷர் அதிகமாகி டாக்டரைப் பார்த்து மருந்து வாங்கிக் கொடுத்துள்ளனராம் குடும்பத்தினர்.

கூட்டணிக்குக் கூட்டிப் போய் தனது பெயரை கெடுத்து விட்டாரே என்ற கோபத்தில்தான் அவர் எளிதாக வென்றிருக்கக் கூடிய தொகுதியைக் கொடுக்காமல், சென்னைக்கு அருகே படு கஷ்டமான தொகுதியைக் கொடுத்து விட்டாராம் விஜய காந்த் . மேலும் வேட்பாளர் பட்டியலில் கடைசிப் பெயராகத்தான் அந்த பன்ருட்டி  பெயரைப் போட்டும் டென்ஷனாக்கியுள்ளார்.

ஐ.நா. சபைக்கெல்லாம் போய் வந்தவராச்சே பன்ருட்டி . மிக மிகப் பெரிய தலைவர்களுடன் எல்லாம் பழகிய பழகி , எம். ஜி, ஆரையே ஏமாத்தியவராச்சே  அவரை இப்படியெல்லாமா திட்டுவார் இவர் என்று அரசியல் வட்டாரத்தில் பரிதாப கேள்விகள் எழுந்துள்ளன.

நன்றி : தட்ஸ்தமிழ்

Monday, March 21, 2011

குடித்தவருக்கும், ஊத்தி கொடுத்தவருக்கும் உள்ள ஒற்றுமை.


 • ரெண்டு பேருக்கும் சொந்தமா பேச தெரியாது.
 • யாராவது எழுதி கொடுக்கிற அறிக்கையை வெளியிடுவாங்க.. சில நேரங்களில் அதை படிச்சும் பாப்பாங்க.
 • அவர்களை அழிப்போம்னு ஒரு வார்த்தையாவது அவங்களோட  அறிக்கைல இல்லாம இருக்காது.
 • அறிக்கை மட்டும் விடுவாங்க, போராட்டம் பண்ணுறது கட்சி காரன் மட்டும் தான், அதுவும் வீடியோ எடுத உடன் கலைஞ்சி போயிருவாங்க.
 • இவருக்கு தோழன் இப்ராகிம் ராவுத்தர் (இப்போ எங்கே இருக்காரோ) , அம்மாவுக்கு தோழி சசிகலா..
 • இவரு சூட்டிங் இல்லாம ப்ரீயா இருந்தா அறிக்கை விடுவாரு, அவங்க கோட நாடுல ஓய்வு எடுத்துட்டு இருந்தா அறிக்கை விடுவாங்க.
 • ரெண்டு பேரு பேருலையும் புரட்சி இருக்கு (என்ன புரட்சி செய்தாங்கண்ணு கேககாதீங்க ப்ளீஸ்)
 • MGR பேரு சொல்லாம கட்சி நடத்த முடியாது.
 • ரெண்டு பேரோட கட்சியிலையும் எம்.ஜி.யாரை ஏமாத்தினவங்க இருக்காங்க , பண்ட்ருட்டி இங்கே , அம்மா அங்கே.
 • பக்கத்து மாநிலத்துல பொறந்து , தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் உயிரயே(??) கொடுப்பாங்க.ரெண்டு பேருக்கும் தாய் மொழி தமிழ் கிடையாது.
 • அரசியல் வியாதியா நடிக்காம , நடிச்சு அரசியல்வியாதி ஆனாவங்க.
 • இவரு 2001 ல கலைமாமணி , அவங்க 1972 லேயே கலைமாமணி .
 • இவரு 2011 லேயும் , அவங்க 1991 லேயும் படிக்காமலேயே ரெண்டு பேரும் டாக்டர் பட்டம் வாங்கி இருக்காங்க.
 • ரெண்டு பேரும் சந்தன கடத்தல் மன்னனை புடிச்சி அழிச்சிருக்காங்க.. அவரு அழிச்சது வீரபத்திரனை, இவங்க அழிச்சது வீரப்பனை.
 • இவருக்கு கண்ணு மட்டும் சிவப்பு, அவங்களோ அப்படி ஒரு சிவப்பு.
 • மண்டபத்தை இடிச்சதுனால இவருக்கு கோபம், சட்டசபையில இவரை இடுச்சதுனால இவங்களுக்கு கோபம்.
 • இவர் பிரேமலதாவுக்கு அடங்கி போவாரு, இவங்க சசிகலாவுக்கு அடங்கி போவாங்க.
 • இவரு கட்சி காரங்களை  பச்சை பச்சையா தான் பேசுவாரு..இவங்க எப்ப்வுமே பசசை (கலரு கலரு) தான்.
 • இவருக்கு பேருல விஜயம் இருக்கு, அவங்களுக்கு பேருல ஜெயம் இருக்கு.
மொத்ததில இவங்க ரெண்டு பேரு கைல தான் தமிழ் நாட்டோட தலை விதியே இருக்கு.


பார்பனிய திமிர் பிடித்த தினமலர்(ம்)Latest Newsதி.மு.க.,வை திணறடித்த காங்., மேலிடம்: அரசியல் களத்தில் அரங்கேறிய அடேங்கப்பா பின்னணி


தி.மு.க.,வை காங்., காலில் விழவைத்த ஜெ., ராஜதந்திரம்!

காங்கிரசுக்கு 63 சீட் ஒதுக்க சம்மதித்தது தி.மு.க.,: நீண்ட கெஞ்சலுக்குப் பின் காங்., ஒப்புதல்


ஜப்பானை புரட்டி போட்டது; தி.மு.க.,வை கலங்கடித்தது

காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க., கைவிடாதது ஏன்? டில்லி சென்ற பின் ஞானோதயம்


நீங்க மேலே பார்த்து எல்லாம் தினமல(ம்) பத்திரிக்கையில்  தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போது வந்த தலைப்புகள் மற்றும் வைகோவை கேவலப்படுத்தி வந்த தலைப்புகள்.


நீங்கள் கீழே பார்ப்பது அ.தி.மு.க தன்னிச்சையாக 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து அதனால் ஏற்பட்ட அனைத்து விதமான குழப்பங்களுக்கும் மிக சாதாரணமாக செய்தியை வெளி இடுவதற்க்கு அந்த பத்திரிக்கை இட்ட தலைப்பு.

அ.தி.மு.க., கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி: ம.தி.மு.க., - கம்யூ., கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி: 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க., லிஸ்ட்

அ.தி.மு.க., அணியை உடைக்க திட்டம்: வேட்பாளர் அறிவிப்பு பின்னணியில் பரபரப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் மீண்டும் உடன்பாடு : அனைவரையும் சமாதானப்படுத்தினார் ஜெ.,

 
அந்த தலைப்பை இட்டது மட்டுமல்லாது அந்த பிரச்சினைக்கு அம்மா காரணம் இல்லைன்னு அவங்களே டிடக்டிவ் வச்சி பாத்து , பிரச்சினைக்கெல்லாம் சசிகலா குடும்பத்தை சார்ந்த மன்னார்குடி வகையறாக்கள் தான் காரணம் அப்படின்னு கழக கொ . ப. செ கணக்கா தன்னிலை விளக்கமும் கொடுத்திருக்கிறது இந்த தினமலம்.


இது பற்றி விசாரித்த போது, கூட்டணி கட்சி தொகுதி தவிர, மற்ற இடங்களுக்கான பட்டியலை ஜெயலலிதா தயாரித்தார்; பல தொகுதி, வேட்பாளர் பெயர்களை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிவும் செய்துவிட்டார்; விருப்ப மனு தாக்கல், புகார்கள் அடிப்படையில் சில தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டாலும், இறுதிப் பட்டியலை ஜெயலலிதா தயாரித்து, திருப்தி அடைந்தார் என, தெரிந்தது. ஆனால், நேற்று முன்தினம் மாலை இப்பட்டியலை ஜெயலலிதா வெளியிடவில்லை; அவரது தோழி சசிகலா வெளியிட்டார். அப்பட்டியலில், சசிகலாவுக்கு வேண்டியவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
வெளியிடப்பட்ட 160 பேர் பட்டியலில், 70 முதல் 75 தொகுதிகள், சசிகலாவுக்கு சாதகமானவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. இதை நேற்று முன்தினம் மாலை, பட்டியல் அறிவிக்கப்படும் முன், கவனித்த ஜெ., பலரது பெயர், தொகுதி மாறியிருப்பது குறித்து அதிர்ச்சி அடைந்தார். மிகக் கோபமாக இது பற்றி ஜெ., கேட்டபோது, ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் தெரிவித்து, பட்டியலை மாற்ற இயலாதபடி, சசிகலா மற்றும் அவருடன் இருந்தவர்கள் பிடிவாதம் பிடித்தனர். ஒரு கட்டத்தில், "எப்படியும் செய்யுங்கள்' என, பட்டியலை தூக்கி வீசிவிட்டு ஜெயலலிதா தன் அறைக்கு சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து, தன் உதவியாளர் தவிர அவர், யாரையும் சந்திக்கவில்லை. கூட்டணி கட்சியினரின் அழைப்பு வந்த போது கூட, "இப்போதைக்கு பேச வாய்ப்பில்லை' எனக் கூறி ஜெயலலிதா தவிர்த்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள பட்டியல், சசிகலாவின் குழுமத்தினரை பலப்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தும் வகையிலும் இருப்பதாக, அ.தி.மு.க.,வினரே கருதுகின்றனர். பட்டியலும், தொகுதியும் மாற்றப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, கூட்டணி கட்சியினரிடையே ஏற்பட்ட அதிருப்தியும், நேற்று மதியம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனால், கூட்டணியை திருப்திபடுத்தும் விதத்தில், தொகுதிப் பங்கீடு பற்றி ஜெயலலிதா விரைவில் முடிவு அறிவிப்பார் என, அ.தி.மு.க., பிரமுகர்கள் தெரிவித்தனர்.

  
  இந்த தினமலம் தி.மு.க கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த போது வைத்த தலைப்புக்கள். டமால், டுமீல்.

தி.மு.க கூட்டணியில் ஏதாவது ஏடாகூடம் நடக்காதா, அதை வைத்து நாலு நல்ல காசு பாக்கலாம்ணு காத்துகிட்டு இருந்தாலும் பரவாயில்லை.. வைகோ தேர்தலில் போட்டி இட மாட்டோமென்று அறிவித்ததற்கு அவரை "ஓட்டம்" என்று கேலி செய்து தனது பார்பன திமிரை காட்டி இருக்கிறது.. அவர் என்ன  தாலிகட்டிக் கொள்ள மேடையில் காத்திருந்த மணமகளை ஏமாற்றிவிட்டு ஓடிய மணமகன் மாதிரியான காரியத்தையா செய்தார்?   

பொண்ணு நடத்தை கெட்ட அடங்காபிடாரி, பஜாரியா இருக்காண்ணு தெரிஞ்சா என்ன பண்ணுறது?? மணமகன் தாலியை கட்டுவதற்குள் ஓடி விடுவது தானே நல்லது.

ஜெயலலிதா பொடா சட்டத்தில் தன்னை கைது செய்து சிறையில் அடைத்த போது...தினமலர் ஒரு செய்தி வெளியிட்டது..அதில் வைகோ பற்றிய பயோடேட்டாவும் ஒன்று..அதில் இவருக்கு பிடித்த உணவு அசைவம் என எழுதிவிட்டு அதன் கீழேயே,சிறையில் வாரம் இரண்டு முறை மட்டன் வழங்கப்படுகிறது ..வைகோவிற்கு பிரச்சனை இல்லை என நக்கலாக எழுதி இருந்தார்களாம்..அதை படித்துவிட்டு,சிறையில் இருந்த ஒன்றரை வருடகாலம் அசைவத்தை தொடாமலேயே இருந்திருக்கிறார் இந்த வைகோ.

தினமலர் இப்போது மட்டுமல்ல எப்போதுமே பார்பனியர்களை முன்னிலை படுத்துவதற்காக மீதி உள்ள அனைவரையும் கேவலமாக சித்தரிப்பதையே தொழிலாக செய்து வருகிறது. தினமலருக்கும் சரி, அரசியல் மாமாக்கள் சுப்புரமணிய சாமிக்கும் சரி, மொட்டை தலை  சோ(மாரி)க்கும் சரி இந்த தமிழர்களையோ, இலங்கை தமிழர்களையோ கண்டாலே ஆகாது. இவ்வளவு பேச்சு பேசும் சாமியும் , சோ(மாரி)யும் இலங்கை தமிழர்களை காப்பதற்கு இதுவரை ஒரு துரும்பை கூட நகர்த்தி போட்டது கிடையாது.. இந்த இருவரும் தான் இப்போதைக்கு அம்மாவை ஆட்டுவிக்கும் பார்ப்பனிய குல சூரர்கள். இவர்களின் பேச்சை கேட்டு தான் அம்மா எல்லா முடிவுகளையும் எடுக்கும்..இதற்காக இந்த தினமலமும் சேர்ந்து ஒத்தூதிக்கொண்டிருக்கிறது.

குலம் குலத்தோடு, மலம் மலத்தோடு.

 

Sunday, March 20, 2011

தேர்தல் ஆணையத்தின் கேணைத்தனம்.

இந்த தேர்தல் வந்தாலும் வந்துச்சு.. இந்த தேர்தல் ஆணையத்தோட அக்கப்போர் தாங்க முடியல..

தெரியாம தான் கேக்குறேன்.. இவ்வளவு நாளும் சும்மா இருந்துட்டு , தேர்தல் அறிவிச்ச உடனே தான் கட்சி காரங்க கட்டு கட்டா காசு எடுத்துட்டு போவாங்களா?? அப்படி எடுத்துட்டு போனா அவங்கள மாதிரி கேணபயலுக ஊருலேயே இருக்க மாட்டாங்க. காசு எடுத்துட்டு போனா அவங்கள மடக்கி  புடிக்க ரெடியா இருக்காங்க இந்த ஆணைய பைத்தியக்காரபயபுள்ளைங்க!

இந்த டிசம்பர் ஆறு அன்னைக்கு ரெயில் , பஸ்ல ஏறி பயணிங்களோட பொட்டிய தொறந்து அவங்க வச்சிருக்கிற அண்டர்வேரை வரைக்கும் அவுத்து பாத்துட்டு ஒண்ணும் இல்லைண்ணு போவாங்களே அது மாதிரி.. குண்டு வைக்கணும்ணா டிசம்பர் ஆறு அன்னிக்கு வச்சா தான் வெடிக்குமா , அதுக்கு முன்னாடி வச்சா ஒண்ணும் பிரச்சினை இல்ல்லயா??


ஆனா இதுல கஷ்டபடுரவைங்க யாருன்னா அப்பாவி வியாபாரிங்க தான். ஒரு லட்சம் ரூபாயியும், பத்து புடவையும் வச்சிருந்தாலே அவங்கள புடிச்சி கேள்வி மேல கேள்வி கேட்டு கொலையா கொல்லுராயிங்க.. இப்போ  ஒரு லட்ச ரூபாயிங்கிறது எல்லாம் ஒரு காசா ?

நம்ம நாட்டுல உள்ள எந்த ஆணையமா இருந்தாலும் சரி, ஆட்சியாளர்களா இருந்தாலும் சரி, அவங்களோட எந்த சட்ட திட்டமும் வச்சா குடிமி, செரச்சா மொட்டை அப்படிங்கிற மாதிரி தான் இருக்கு. ஓவரா கன்ட்ரோல் பண்ணுரேன் பேர்வழின்னு டார்ச்சர் கொடுப்பாங்க , அப்படி இல்லைன்னா எதுவுமே கண்டுக்க மாட்டாங்க..

வாக்காளனுக்கு கொடுக்கப்பட வேண்டிய காசு எப்பவோ அந்தந்த ஊரு போயி சேந்துருக்கும்.. எடுத்து கொடுக்குறது ஒண்ணும் தான் பாக்கி.. இவங்க என்னன்னா இப்ப தான் தூங்கி எழுச்சி வந்த மாதிரி செக்கப் பண்ணுறாங்க.
இவங்க தொந்தரவுனால பத்து கிலோ அரிசி மொத்தமா எடுத்து போக முடியல.. ஒரு லட்ச ரூபாய் எடுத்து போக முடியல.. லாண்ட்ரி கடையில மொத்தமா அஞ்சு புடவை துவைக்க கொடுத்தனுப்ப முடியல.பத்து பத்திரம் வாங்கி எடுத்துட்டு போக முடியல.. இந்த தேர்தல் ஆணைய பயபுள்ளைங்க கிட்ட யாராச்சும் உண்மை என்னான்னு சொன்னா பரவாயில்லை.


வாகன சோதனையில் பணம் பறிமுதல்: தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் வியாபாரிகள் பாதிப்பு; வெள்ளையன் அறிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தலில் பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகள் வேதனைக்குரியது. இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியிடமிருந்தும் பணம் கைப்பற்றப்பட வில்லை. தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வணிகர்களே! கொள்முதலுக்காக வணிகர்கள் எடுத்துச்செல்லும் பணம் கைப்பற்றப்படுவதும் உரிய ஆவணங்கள் கேட்பதும் அதனால் ஏற்படும் காலதாமதமும் வழக்கமான வியாபார நடவடிக்கைகளை முடக்கி விட்டது.
வியாபாரத்துக்காக கொள்முதல் செய்து ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படும் அரிசி மூட்டைகள், நகைகள், நெல் மூட்டைகள், ஜவுளி வகைகள் போன்றவற்றைக் கூட கைப்பற்றி தேவையில்லாத கெடுபிடிகளை செய்து வியாபாரிகளை தொல்லைக்கு உள்ளாக்குகின்றனர். பணம் அல்லது பொருட்கள் எடுத்துச்செல்லும் வணிகர்கள் என்ன விதி முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உடனடியாக தெளிவாக அறிவிக்க வேண்டும்.
இதுவரை கைப்பற்றப்பட்டிருக்கும் பணம் அல்லது பொருட்களை உரியவர்களிடம் உடனடியாகத் திருப்பி கொடுத்து விடவேண்டும். வாகன சோதனை அரசியல்வாதிகளை குறி வைத்து நடத்தப்பட வேண்டும். ஒரே கட்சியைச் சேர்ந்த பல வேட்பாளர்களிடம் ஓட்டுக்குப்பணம் கொடுப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யவேண்டும். இல்லையேல் தேர்தல் ஆணையத்தின் இதுபோன்ற நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு என்றாகி விடும்.
வணிகர்கள் மீதான இந்த நடவடிக்கை தொடர்ந்தால் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடுவதைத் தவிர வேறுவழி இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த தேர்தல் ஆணைய பயபுள்ளைங்க கிட்ட யாராச்சும் உண்மை என்னான்னு சொன்னா பரவாயில்லை.


கலைஞர் வந்து தருவாருன்னு அம்மா சொல்லுறாங்க!!


நான் பள்ளி கூடம் போறச்சே , ஆத்தாகிட்டே செருப்பு வாங்கி கேட்டேன், கிடைக்கல!

புது துணி வாங்கி கேட்டேன் , கிடைக்கல!

வாரத்துக்கு ஒரு தடவையாவது முட்டை கேட்டேன், கிடைக்கல!

புது நோட்டு புக்கு வாங்கி கேட்டேன், கிடைக்கல!

நான் சின்னபுள்ளையா இருக்கச்ச, எங்க ஆத்தாகிட்டே சைக்கிள் வாங்கி கேட்டேன், கிடைக்கல.!

வீடு ஒழுகுதுன்னு புது வீடு கட்டி கேட்டேன் கிடைக்கல!

படம் பாக்க  டீவி வாங்கி  கேட்டேன், கிடைக்கல.!

கடல போட மொபைல் போன் வாங்கி கேட்டேன், கிடைக்கல!

காலேஜுக்கு போக சீட் வாங்க காசு கேட்டேன், கிடைக்கல!

காலேஜுக்கு போறச்சே , கம்ப்யுட்டர் வாங்கி கேட்டேன் , கிடைக்கல!

இப்புடி என்ன எங்க ஆத்தாகிட்டே கேட்டாலும், அவங்க  பேச்சே மாறாம அவங்க சொல்லுற ஒரே பதிலு , கலைஞர் ஐய்யா அடுத்த ஆட்சியில வந்ததும் இலவசமாவே தந்துருவார்னு,

 அதுனால எனக்கு எதுவுமே கேட்டதும் கெடைக்குறது இல்லை,

எப்புடியும் ஓசியில கெடச்சுரும், இப்பவே எதுக்கு காசு கொடுத்து வாங்கணும்னு நெனச்சு எங்க ஆத்தா எதையும் தேவை படும் போது வாங்கி தாறதுமில்லை..

கொறஞ்சது அஞ்சு வருசமாவது காத்து கெடந்து தான் வாங்க வேண்டி இருக்கு,, இப்போ சொல்லுங்க கலைஞர் நல்லவரா, கெட்டவரா ??

தெரியலெயேப்ப்பப்பா!!
Thursday, March 10, 2011

ஜெயலலிதா படிக்கும் இடுகைகள்(பிளாக்குகள்) - வலைப்பதிவாளர்களுக்கு ஒரு நற்செய்தி.

நேரம் போகாமல் வெட்டியாக இருப்பதால் என்ன செய்யுறதுன்னு தெரியாம , நம்ம விஜயகாந்த் பட சூட்டிங்க்  இல்லைன்னா அரசியலுக்காக அறிக்கை விடுற மாதிரி ஊருக்குள்ளே இருக்கும் மீதி உள்ள எல்லா அரசியல் வாதியும் நல்லவன் மாதிரி கருணாநிதியையே சதா சர்வகாலமும் திட்டி இடுகைகளை இடும் வலைப்பதிவாளர்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி.

உங்கள் அம்மையார் , புரட்சி தலைவி, சமூக நீதி காத்த வீரங்கணை பிளாக்குளை எல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டாராம்.இதோ அதற்க்கொரு சான்று.

காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிப்பது காங்கிரசுக்கு மிகப் பெரிய சங்கடம் ஆகும்.இந்த அளவுக்கு காங்கிரசுக்கும்,காங்கிரஸ் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய இவர்களுக்கு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டியவர்கள் இந்த மாநிலத்தில் உள்ள பாவப்பட்ட காங்கிரஸ் தொண்டர்களே.இந்த கபடநாடகங்களை எல்லாம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், நகரத்திலிருந்தும் எனக்கு வருகின்ற தகவல்கள் இதைத் தான் குறிப்பிடுகின்றன.தொழில்நுட்ப வல்லமையுடைய இளைய தலைமுறையினர் எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னணு அஞ்சல் மூலமாக பரிமாறிக் கொள்ளும் செய்திகளும் இதைத் தான் பிரதிபலிக்கின்றன.

இது தான் அவங்களோட லேட்டஸ்ட் அறி(ரி)க்கை ,யாரு எழுதி கொடுத்ததோ , இருந்தாலும் பரவாயில்லை. அம்மையார் உங்கள் இடுகைகளை படிக்கிறாங்க்க அப்படிங்கிறது தெரியிது.

அதுனால நான் என்ன சொல்ல வாறேன்னா, நீங்க இப்போ எப்புடி கருணாநிதியை கேவலப்படுத்தி கலாயிக்கிறீங்களோ அதை இன்னும் கொஞ்சம் அதிகமா உங்க அம்மா பூரிச்சி போகுற மாதிரி எழுதி அவங்க மனசை சந்தோச படுத்துனீங்கன்னா உங்களுக்கு நல்ல ஒரு எதிர் காலம் இருக்கு,, ஒண்ணுமே தெரியாத் ஜீரொ சாரி ஓ.பன்னீர் செல்வத்தை முதலமைச்சர் ஆக்கி விட்டு , ஜெயிலுக்கு போயி செக்கையே இழுத்து தியாகம் பண்ணி இருக்கிறாங்க.. அப்படிபட்டவங்க எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்களான உங்களை அதுவும் கருணாநிதியை திட்டுற உங்களை கை விட்டுட மாட்டாங்க.. உங்களுக்கு முதலமைச்சர் பதவி கெடைக்கலண்ணாலும் அட்லீஸ்ட் ஒரு வார்டு கவுன்சிலர் பதவியாவது கெடைக்கும்..

அதுனால அவரை திட்டுங்க, திட்டுங்க , திட்டி கொண்டே இருங்க.

இது அவரோட லஞ்ச் டைமு, இப்போ அன்னத்துல கை வைப்பாரே தவிர யாரு கன்னத்துலையும் கை வைக்க மாட்டாரு.

அதிமுக தலைமை கழக பின் குறிப்பு : உங்களை பற்றி தெளிவாக "About Me " Profile போட்டிங்கன்னா உங்களை பின்னாடி கான்டக்ட் பண்ணுறதுக்கு வசதியா இருக்கும்.


Saturday, March 5, 2011

முஸ்லிம்களை நக்கலடித்தவர் ஜெயலலிதா'' -காதர் மொய்தீன்!,
சிறையில் அடைத்தார் கலைஞர்! -ஜவாஹிருல்லா

முஸ்லிம்களை நக்கலடித்தவர் ஜெயலலிதா'' -காதர் மொய்தீன்!
தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 3 சீட்டுகளை  தந்துள்ளார் கலைஞர். முஸ்லிம் லீக்கின் மாநி லத் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீனிடம், ""முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?'' என்று கேட்டபோது...

""தி.மு.க. ஆட்சியில்தான் முஸ்லிம்  சமூகம் பாதுகாப்பாக இருக்கும். கண்ணிய மாகவும் மரியாதையாகவும் இருக்கும். மேலும் முஸ்லிம்களின் முக்கிய கோரிக் கைகளான தனி இட ஒதுக்கீடு,  உலமாக்கள் நல வாரியம், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு (பள்ளிகள்) மானியம் உள்ளிட்ட பல கோரிக்கை களை உரிமையுடன் எழுப்ப முடிந்ததும் அது நிறை வேற்றப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான்.  முஸ்லிம் சமூகத்திற்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு தந்து அதற்கு சட்ட பாது காப்பும் ஏற்பாடு செய்து தந்தவர் கலைஞர்.  இன் றைக்கு  இந்த தனி இட ஒதுக்கீட்டால்...  கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில்  பயன்பெற்று வருகின்றனர்.

ஆனா, ஜெயலலிதா ஆட்சியில் எந்த கோரிக்கை யையும் உரிமையுடன் கேட்க வே முடியாது. அப்படியே கேட்டாலும் அதை நக்க லடித்துத்தான் பேசுவார். தனி இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து ஒருமுறை ஜெயலலிதாவிடம் வலியுறுத்திய போது, "முஸ் லிம்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு? நீங்கதான் வசதி வாய்ப்புகளில் ஓஹோன்னு இருக்கீங்களே என்று முஸ்லிம்களை நக்கலடித்துப் பேசி இட ஒதுக்கீடு பத்தியெல்லாம் இனி என்கிட்டே பேசாதீங்க. அது எனக்குப் பிடிக்காது' என்று கோபமாகச் சொன்னவர்தான் ஜெயலலிதா.

முஸ்லிம்களுக்கென்று மதச் சட்டம் இருக்கிறது. இதனை இந்திய அரசியலமைப்பு நிர்ணய  சட்டமே அங்கீகரித்திருக்கிறது.       ஆனா, இது கூடாது என்று  பொது சிவில் சட்டத்தை கொண்டு வர  பா.ஜ.க. முயற்சிக்கும் போதெல்லாம், அதற்கு பா.ஜ.க.வின் ஊது குழலாக நின்று, "இந்தியாவில் இருக்கும் முஸ்    லிம்கள் இந்திய சட்டத்தை ஏற்கவேண்டும். அவர்களுக்கென்று தனிச்சட்டம் கூடாது.         பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறேன்'        என்று  உரத்துச் சொல்பவர் ஜெயலலிதா. இப்படிப்பட்டவரா முஸ்லிம் சமூகத்திற்கு பாது காப்பானவர்?

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடந்தபோது, 600-க்கும் அதிகமான  பள்ளி வாசல்களும்  100-க்கும் மேற்பட்ட தர்காக்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனை நியாயப்படுத்தினார் மோடி. மோடியின் நியாயத்தை ஆர்.எஸ்.எஸ். மைண்ட் உள்ள பத்திரிகைகளே அப்போது கண்டித்தன. ஆனா இதனை கண்டிக்காத ஜெயலலிதா, நரேந்திர மோடியை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து, வாழையிலை விருந்து கொடுத்து மகிழ்ந்தார்.

இந்தச் சம்பவம் இன்னமும் முஸ்லிம் களிடம் ஆறாத வடுவாக இருக்கிறது. அதனால் மோடியின்  மறு உருவமான ஜெயலலிதா எப்போதுமே முஸ்லிம்களின் நலன்களுக்காக சிந்தித்தது கிடையாது.

மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்து சிறுபான்மையினரின் உணர்வுகளை மழுங் கடித்தவர் ஜெயலலிதா. பள்ளிவாசல்களில் விடியற்காலையில் ஒலிக்கும் பாங்கு நிகழ்ச்சி, இந்துக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, காவல்துறை மூலம் அதற்கு தடைபோட்டவரும் இவர்தான்.

இப்படி முஸ்லிம்களுக்கு எதிரான ஜெயலலிதாவின்  நடவடிக்கைகள் நிறைய சொல்ல முடியும்.  ஆக, எந்தச் சூழலிலும் ஜெய லலிதா முஸ்லிம்களுக்கு நன்மை செய்த     தில்லை'' என்கிறார் உரத்த குரலில் காதர் மொய்தீன்.

சிறையில் அடைத்தார் கலைஞர்! -ஜவாஹிருல்லா
அ.தி.மு.க  கூட்டணியில் இணைந்திருக்கும் த.மு.மு.க.வின்  அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்திருக்கிறது. த.மு.மு.க.தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விடம், ""முஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?'' என்று கேட்டபோது,

""தி.மு.க.வின் தொடக்க காலத்திலிருந்து அதற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும்  இருந்தவர்கள் முஸ்லிம்கள். 1967-ல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு தி.மு.க. அரியணையில் ஏறியதற்குக் காரணம் முஸ்லிம்கள்தான். இது வரலாறு. முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது பல வருடங்களாக இருந்து வருகிறது. இதன் நியாயத்தை உணர்ந்து 70-களில் 12 சதவிகித இட ஒதுக்கீட்டை கேரள அரசு சட்டமாக்கியது. ஆனால்...  தமிழகத்தில் போராடிக்கொண்டேதான் இருந்தோம். தி.மு.க. அரசில் இது கண்டுகொள்ளப்படவேயில்லை. தற்போது 3.5 சதவிகிதம் கொடுத்திருக்கிறார் கலைஞர்.

இது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப அமையவில்லை. அதனால் இந்த இட ஒதுக்கீட்டால் பெரிய அளவில்  முஸ்லிம்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த 3.5 சதவிகிதம் கூட முஸ்லிம்கள் மீதான அக்கறை யால் அல்ல. தேர்தலுக்காக கொடுக்கப்பட்டிருக் கிறது.

எங்கள்  போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தானே தவிர அ.தி.மு.க. ஆட்சியில் அல்ல.

உதாரணத்திற்கு... பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ல்  ஒவ்வொரு வருடமும் பேரணி, போராட்டம்  நடத்து வது வழக்கம். ஆனா போராட் டத்திற்கு  இரண்டு நாட் களுக்கு முன்பிருந்தே "முன் னெச்சரிக்கை' என்று காரணம் காட்டி த.மு.மு.க. நிர்வாகிகள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடு வார் கலைஞர். இப்படி ஒரு அடக்குமுறை ஜெய லலிதா ஆட்சியில் ஒரு போதும் நடந்த தில்லை. 

தி.மு.க. ஆட்சி யில்தான் கோவை கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் உயிர் களும் உடைமைகளும்  சூறை யாடப்பட்டன.

காவிகளும் காக்கிகளும்  கண்மூடித்தனமாக முஸ்லிம் களைத் தாக்கினர். இதனை தடுக்காத தி.மு.க. அரசு, "குண்டு வைத்தார்கள்' என்று அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்து மகிழ்ந்தது. இன்னமும் அப்பாவி முஸ்லிம் கள் சிறையில்தான் துன்பம் அனுபவித்து வருகிறார்கள்.

மோடிக்கு ஜெயலலிதா விருந்து கொடுத்தார்னுதான் தி.மு.க. குற்றம் சொல்லும். ஆனா, மோடியின் தலைவரான வாஜ்பாய் அரசில் அமைச்சரவை சுகம் கண்டவர்கள் யார்? தி.மு.க.தானே?
முஸ்லிம் கட்சிகளுக்கான தனித்தன்மையை தி.மு.க. எப்போதுமே தந்ததில்லை. தனது கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சியை, தி.மு.க.வின் சிறுபான்மை பிரிவாகத்தான்  கலைஞர் வைத்திருக்கிறார். அதனால்தான் முஸ்லிம் கட்சியை தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காமல் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி நிறைவேற்றிக் கொள்கிறார் கலைஞர்.  தனிச்சின்னம் வாய்ப்பு தரப்படாததால், முஸ்லிம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள். இதுவா முஸ்லிம்களை பாதுகாக்கும் முறை? ஆனா, இந்த நிலை அ.தி.மு.க.வில் இல்லை.

கடந்த காலங்களிலும் சரி... தற்போதும் சரி...  முஸ்லிம் கட்சி களை தனி சின்னத்தில் போட்டியிட அனுமதித்தவர்... அனுமதிக்கிற வர் ஜெயலலிதாதான். இப்படி நிறைய சொல்ல முடியும்'' என்கிறார் வலிமையான குரலில் ஜவாஹி ருல்லா. 

Thursday, March 3, 2011

மானம் காக்கப் புறப்பட்டு மானமிழந்த கதை!

சமுதாயத்தின் மானத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு நாங்கள் தான் எடுத்து வைத்துள்ளோம் என பில்டப் கொடுத்த மானம் காக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள் அ.தி.மு.க போட்ட 3 தொகுதி பிச்சை சீட்டுக்களை வாங்கிக் கொண்டு மானமிழந்து வேறு வழயின்றி உலக ஆதாயத்திற்காக சில எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக் கொண்டு நிற்கின்றனர். இவர்கள் மானம் காக்க புறப்பட்ட வரலாற்றையும், இப்போது மானமிழந்து நிற்கும் அசிங்கத்தையும் தற்போது நாம் அசைபோட்டுப் பார்க்கலாம்.
ம.ம. கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம்:
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற்காகத் தான் ம.ம.க.வே தொடங்கப்பட்டுள்ளது என்று தங்களது அதிகாரப்பூர்வ இதழில் அறிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிக்கத் தான் ம.ம. கட்சி தொடங்கப்பட்டது என்றால் தற்போது சட்டமன்ற தேர்தலில் வெறும் 3 தொகுதிகளைப் பெற்றுள்ளனர்.
அதாவது, ஒரு பாராளுமன்றத் தொகுதி என்பது ஆறு சட்டமன்ற தொகுதிகள். ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இணைந்தது தான் ஒரு பாராளுமன்றத் தொகுதி என்ற அடிப்படையில் குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளைப் பெற்றாக வேண்டும் என்ற இவர்களது கட்சி துவங்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் 12 தொகுதிகளையாவது பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அரை எம்.பித் தொகுதிக்கு நிகரான 3சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க விடம் வாங்கி கேவலப்பட்டுள்ளனர்.
உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா:
தமிழில் ஒரு பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. ”உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா”
இவர்களை தற்போது நினைத்தால் இந்தப் பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகின்றது. தி.மு.க அணியில் தந்த ஒரு எம்.பி சீட்டை நாங்கள் வாங்க மாட்டோம். எங்களுக்கு சமுதாய மானம் காப்பது தான் முக்கியமே தவிர, இந்த சீட்டுக்கள் தேவையில்லை என வீராப்பு பேசியவர்கள் தற்போது அதை விடக் குறைவான சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்று கேவலப்பட்டுள்ளார்கள் என்றால் உள்ளதையும் இழந்து நிற்கும் இவர்களை என்னவென்பது?
இது தான் பயங்கரமான(?) ராஜ தந்திரமாம்:
“உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா” என்று கேவலப்பட்டு நின்றாலும் பிலடப்புகளுக்கு மட்டும் இவர்களிடத்தில் குறை இருக்காது.
தொகுதி குறைவாகத் தான் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு கண்ணில்லாத கலகக்கார கண்மணிகளுக்கு வாத்தியார் எழுதிய வரிகளைப் பாருங்கள்:
கண்மணிகளே…!
தேர்தலில் நாம் எத்தனைத் தொகுதிகளை பெறப் போகிறோம்? என அனைவரும் கேட்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக தலைமையுடன் பேசி வருகிறோம். தொகுதி எண்ணிக்கைகளில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம். நாம் நினைத்ததை விட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம். அரசியல் ராஜதந்திரத்துடன் நாம் அணுக வேண்டியுள்ளது.
3தொகுதிகளை வாங்கி கேவலப்படுவது எதற்கென்றால் அது தான் ராஜ(?)தந்திரமாம். உங்க பில்டப்புகளுக்கு ஒரு அளவில்லையா?
நாம் நினைத்ததை விட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம்
என்று கூறி தங்களது கேவலத்தனத்திற்குத் தங்களையே சாட்சிகளாக ஆக்கியுள்ளனர். இவர்கள் உண்மையான தைரியசாலிகளாக இருந்தால் எத்தனை தொகுதியை நாங்கள் அதிமுக விடம் கேட்டோம் என்பதை இவர்கள் அறிவிக்கத் தயாரா?
மேற்கண்ட வாசகங்களில்,
நாம் நினைத்ததை விட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம் என்று இவர்கள் குறிப்பிட்டதிலிருந்து இவர்கள் அதிமுக தலைமைக்கு பயந்து கொண்டு, எங்களுக்கு மொத்தம் 4தொகுதி, அல்லது 5தொகுதி வேண்டும் என்று வாய் திறந்து கேட்டால் எங்கே அதிமுக தரப்பு தங்களை கூட்டணியிலிருந்து கலைஞர் விரட்டியடித்தது போல விரட்டிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டு நீங்கள் எத்தனை தொகுதி தருகின்றீர்களோ அத்தனை தொகுதியைத் தாருங்கள். நாங்கள் நினைத்த தொகுதியையும் தாருங்கள் அல்லது அதுக்கு மேலேயும் தாருங்கள் அல்லது அதுக்கு கீழேயும் தாருங்கள் என்று கேட்டதற்கு ஆதாரமாக மேற்கண்ட வாசகங்களை வெட்கமில்லாமல் கண்மணிகளுக்கு கடிதமாகவும் எழுதுகின்றார்கள் என்றால் இவர்கள் தான் மானம் காக்க புறப்பட்டவர்களா?
திரும்பவும் கேட்கின்றோம், இவர்களுக்கு உண்மையிலேயே மானம் இருக்குமேயானால், இவர்கள் உண்மையான தைரியசாலிகளாக இருந்தால் எத்தனை தொகுதியை நாங்கள் அதிமுக விடம் கேட்டோம் என்பதை இவர்கள் அறிவிக்கத் தயாரா? தாங்கள் இத்தனை தொகுதிகள் தான் கேட்டோம் என்பதைக் கூட வெளியே சொல்லத் திராணியற்றவர்கள் தான் சமுதாய மானம் காக்கப் போகிறார்களா?
தங்களது மானத்தையே காக்க வக்கில்லாத இவர்கள் சமுதாயத்தின் மானத்தை எப்படிக் காக்கப் போகிறார்கள் என்று மக்கள் கேட்கும் கேள்வி நம் காதில் விழுகிறது. இது இந்தத் தேர்தலில் இவர்களுக்கு எதிரான வாக்குகளாக மாற மானமுள்ள ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால் மானம் என்ற ஒரு சொல்லுக்கே எந்த அர்த்தமுமில்லாமல் போய்விடும்.

Tuesday, March 1, 2011

கூட்டணி ஆட்சி : காங்கிரஸ் தரும் நிர்பந்தம்! -சோலை!

தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.கழகத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. நல்ல முடிவு ஏற்படுமா?

ஆனால் இல்லாத ஊருக்கு காங்கிரஸ் கட்சி சக்கரமில்லாத வண்டியில் பயணம் செய்வதாகவே தோன்றுகிறது. சத்தியமூர்த்தி பவனைத் தேடி தி.மு.கழகம் வந்தால் நிபந்தனைகள் விதிக்கலாம். ஆனால் அறிவாலயத்தைத் தேடிப்போய்விட்டு வானத்து நிலவில் குடியேற வழி சொல் என்பன போன்ற நிபந்தனைகளை விதிப்பதாகச் செய்திகள் வருகின்றன.

தேர்தலுக்கு முன்னரே கூட்டணி ஆட்சி என்று அறிவிக்க வேண்டும்.

கூட்டணி ஒரு குறைந்தபட்சத் திட்டத்தை வகுக்க வேண்டும். அந்தத் திட்டம் செயல்படு வதைக் கண்காணிக்க ஓர் ஒருங் கிணைப்புக்குழு வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு முன்னர் 90  தொகுதிகளைக் கேட்கும் காங்கிரஸ் கட்சியின்  வலிமை என்ன என்பதனைப் பார்க்க வேண்டும். சோனியா பங்குகொண்ட திருச்சி பேரணிக்குத் திருநாவுக்கரசர் திரட்டிய கூட்டத்தையும், மாவட்ட அமைச்சர் திரட்டி அனுப்பிய கூட்டத்தையும் கோடிட்டுக் காட்டி காங்கிரஸ் கட்சியின் பலத்தைப் பாரீர் என்று பறைசாற்றினர்.

அந்தப் பேரணிக்குத் தொண்டர்களைத் திரட்ட மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மாவட்டம் தோறும் பயணம் செய்தார்.  ஊழியர்கள் கூட்டங்களை அவர் எப்படிச் சமாளித்தார் என்பதனை  ஏடுகளில் பார்த்தோம். ஆனால் எல்லாக் கூட்டங்களிலுமே தி.மு.க. உறவு வேண்டாம் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அண்மையில் ராகுல் காந்தி கலந்துகொண்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டங்களிலும் தி.மு.க. உறவு  வேண்டாம் என்று திட்டமிட்டுத் தெரி விக்கப்பட்டன.  இதே கருத்தை மாநில காங்கிரஸ்  கட்சியின் குழு தலைவர்கள் சிலர் கடந்த பல ஆண்டுகளாகவே விதைத்து வந்தனர். இதன்  விளைவுகளை தி.மு.கழகம் காலத்தோடு கணித்திருக்க வேண்டும்.

யார் என்ன சொன்னாலும் சோனியா என்ற சுப்ரீம் கோர்ட்டில் முறையிடலாம் என்று கருதியது.

இப்போது அவர்கள் அடுத்த  எல்லை யைத் தொட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தாய் காங்கிரஸ்  எட்டடி வேகத்தில் பாய்ந்தால்  இளைஞர் காங்கிரஸ் பதினாறு அடி வேகத்தில் பாய்வதாக சோனியாவையே நம்ப வைத்திருக்கிறார்கள். ஆம்... தினம் தினம் ஆயிரமாயிரம் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருவதாகவும் தற்போது அந்த காங்கிரஸ் கரை காண முடியாத  அளவிற்கு  கடல்போல் பெருகி வளர்ந்து இமயத்தின் முகட்டை எட்டிப் பிடித்திருப்பதாகவும் கூறியிருக் கின்றார்கள். நல்ல வர்ணனைதான். 

தற்போது உறுப்பினர்களாகப் பதிவு செய்த இளைஞர் காங்கிரஸ் கட்சியினருக்கு கட்சி அடையாள அட்டைகள் டெல்லியிலிருந்து அனுப்பப்படுகின்றன.  கள்ளக்குறிச்சியில் தி.மு.க., ம.தி.மு.க., அ.தி.மு.க.காரர்களுக்கெல்லாம் அத்தகைய கார்டுகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. தமிழகம் முழுமையும் இதே நிலைதான்.

தமிழகத்தில் முதியோர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 லட்சமாம். இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 14 லட்சமாம். இப்படி டெல்லியில் போய் சொல் கிறார்கள். அதனையும் அவர்கள் நம்புகிறார்கள். மத்திய உளவுத்துறை அவர்களிடம்தானே இருக்கிறது. உண்மை என்னவென்று அவர்கள் அறிய முடியாதா? அதேபோல் இன்னொரு பக்கம் மாணவர் காங்கிரஸ் மளமளவென்று வளர்ந்திருப்பதாகவும் சொல்லி வைத்திருக் கிறார்கள்.

எனவே தி.மு.க.விடம் 90 இடங்களைப் பெறவேண்டும் என்றும் தேர்தலுக்கு முன்னரே கூட்டணி ஆட்சி பற்றி அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். சகித்துக் கொள்ள முடியாத நிபந்தனைகளையெல்லாம் தி.மு.கழகம் இன்றைய சூழ்நிலையில்  ஏற்கும் என்று கருதுபவர்கள் ஏமாந்து போவார்கள். அறிவாலயத்தின் அடக்கத்தை சோதித்துப் பார்க்கிறார்கள்.

ஒருமாத காலத்திற்கு முன்னர் அவர்கள் மூன்றாவது அணி அமைக்க முயன்றனர். தே.மு.தி.க.வின் இளையதலைவரை டெல்லிக்கு அழைத்து அகமதுபடேலுடன் ஆலோசனை நடத்தினர்.  பா.ம.க.விற்கு அவர்கள் வலை விரித்தபோதுதான் தி.மு.கழகம் விழித்துக் கொண்டது.  விடுதலைச் சிறுத்தைகளுக்குத் தூண்டில் போட்டனர். "காங்கிரஸ் உறவை தி.மு.கழகமே கத்தரித்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். அப்படியிருக்க உங்களோடு  எப்படி ஒரு அணி காண முடியும்' என்று சிறுத்தை சீறியது.

அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? "இரண்டொரு நாட்களில் கலைஞர் டி.வி. அலுவலகத்தில் ரெய்டு நடைபெறும். அதன் பின்னர் இருவர் விசாரிக்கப்படுவர். இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் உறவை கலைஞரே கத்தரித்துக்கொள்வார்' என்று  சொன்னார்கள்.

ஆனால் அந்த வாதத்தை  எந்தக் கட்சியும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கட்சிகள் தி.மு.க. அணியில் இருக்கும், இல்லையேல் அ.தி.மு.க. அணியில் இருக்கும். அதனை விடுத்து ஏகாந்த நிலையில் இருக்கும் எந்தக் கட்சி அணி அமைத்தாலும் அதில் இணையமாட்டார்கள்.

ஆனால் கூட்டணி ஆட்சி என்று இந்த முறை யாவது  பிள்ளைகளை அமைச்சர்களாகப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். மத்தியில்  மன்மோகன்சிங் அரசில் தி.மு.கழகம் அங்கம் பெற்றிருக்கிறது. அதேபோல் தி.மு.க. ஆட்சியிலும் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்பது அவர்களது வாதம்.  2004-ம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையில் அமைந்த கூட்டணி அரசிற்கும் இப்போது தொடரும் அதே கூட்டணி அரசிற்கும் தி.மு.கழகம்தான் அச்சாணி.

2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் டெல்லி, தமிழக அரசின் இல்லத்தில் தங்கியிருந்த  கலைஞரை சோனியாவே வந்து சந்தித்தார். ஆனால் 2009-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலம் சற்று கூடியதால் சோனியாவை சந்திக்க கலைஞர் செல்ல வேண்டியிருந்தது. இது தான் காங்கிரஸ் கட்சி யின் கலாச்சாரம்.

2004-ம் ஆண்டு அமைந்த மன்மோகன்சிங் அமைச்சரவையில் சிதம்பரம் நிதியமைச்சராக  இருந்தார். அவர் நெய் வேலியையும் சேலத்தையும் ஏலம்போட்டார். அதனைத் தடுத்து நிறுத்தியது தி.மு. கழகம்தான். உழைக்கும் மக்கள்தான். இங்கே காங்கிரஸ் ஆட்சி  செயல்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? நெய் வேலியையும், சேலத்தையும் சிதம்பரம் தவணை தவணையாக விற்பனை செய்திருப்பார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அம்பானி சென்னை வந்தார். முதல்வர் கலைஞரை  சந்தித்தார். சோழ மண்ட லத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வேண்டும் என்றார். தனியாரை அனு மதித்தால் அது தமிழகத்திற்குப் பாதகம் என்று கலைஞர் சொல்லிவிட்டார். அனுமதி தரவில்லை.

ஆனால் இங்கே காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும். தஞ்சையிலும்  திருவாரூரிலும் சுதந்திரமாக கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்திருப்பார் அம்பானி.

எனவே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறியதற்கு திராவிட கட்சிகளின் ஆட்சிதான் காரணம். தமிழகத்தின்  நலன்கள் காக்கப்பட்டதற்கும் அந்த ஆட்சிகள்தான் காரணம்.

நாற்பது ஆண்டுகள் உத்திரப்பிரதேசத்திலும், பீகாரிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெற்றது. ஆனால் இன்றைக்குக் காணாமல் போய்விட்டன. என்ன காரணம்? எந்த வளர்ச்சியும் இல்லை.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியாம், அதனை வழிநடத்த ஒருங்கிணைப்புக் குழுவாம். இது சிதம்பரங்களின் சித்தாந்தம். புலி சைவமாகிறதாம். இன்றைக்கு ராஜஸ்தானிலும், அரியானாவிலும், டெல்லியிலும் காங்கிரஸ் ஆட்சிதான். தமிழகம் கற்றுக்கொள்கின்ற அளவில் அங்கே ஏதாவது திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா? இல்லை.

எந்தத் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தவில்லை? "ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குகிறோம்.

தமிழக வழியில் நாங் களும் ஒருகிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று  கொ டுக்கப் போகிறோம்' என்கிறார் கேரளத்து மார்க்சிஸ்ட் முதல்வர்.

நூறு நாள் வேலைத் திட்டம்  தமிழகத்தில்தான் சிறப்பாக செயல்படுத்தப் படுகிறது என்று உச்சநீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் செயல்பாட்டில் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டி யாக இருக்கிறது.

இப்படிச் சொல்வதால் குறைந்தபட்சம் ஒருங்கிணைப் புக் குழு என்பதனையெல்லாம் நாம் வேண்டாம் என்று சொல்ல வில்லை. அத்தகைய ஏற் பாட்டில்தான் இன்றைக்கு மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடதுசாரி அரசுகள் செயல்படு கின்றன.

மக்களுக்கான நலத்திட்டங்கள்தான் அங்கே குறைந்தபட்சத் திட்டங்கள். ஆனால் சிதம்பரங் கள் கூறும் குறைந்தபட்சத் திட்டங்கள் யாருக்காக வகுக்கப்படும்? அம்பானிகளுக்காகவா? டாடாக்களுக்காகவா?  வேதாந்திகளுக்காகவா? ஸ்டெர்லைட்டுகளுக்காகவா?

மீண்டும் சொல்கிறோம். பொதுவாக தேர்தலுக்கு முன்னரே கூட்டணி ஆட்சியென்றால் அதனைத் தமிழகம் ஏற்காது.

தேர்தலுக்குப் பின்னர்  நிலைமைகளைப் பொறுத்துத்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் கசக்கிப் பிழிந்து குதிரை ஏறுவதில்தான் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது.