Sunday, April 17, 2011

ரஜினிகாந்துக்கு வண்டு முருகன் கண்டனம்

தான் நடிக்கிற படத்தோட ஸ்டில்ஸ்  வெளியே வரக்கூடாது என்பதற்காக சூட்டிங் நடக்குற எடத்துல கேமரா போனையே நீங்களும், உங்க டைரக்டரும் அனுமதிக்கிறது இல்லை. இதுல எவ்வளவு கவனமா இருக்கிற நீங்க ஒட்டு போடும் போது மட்டும் ஏன் சார் கண்ட கண்ட ***** எல்லாம் போட்டோ எடுக்க உடுறீங்க.. நோகாம நொங்கு திங்கிற நீங்க உங்க படம் வெளியே வந்து கோடி கோடியா சம்பாதிக்கணும்னு நீங்க ஆசை படும்போது , கோடியா கோடியா செலவு (??) பண்ணி ஓட்டுக்கு நிக்கிறவனுக்கு நீங்க ஓட்டு போடும் போது கொஞ்சம் மறைவாக போட கூடாதா?? நீங்க ஒட்டுக்கு நிக்கிற நாதாரிங்க கூட்டத்துல ஒரு முடுச்சவிக்கு தான் நீங்க ஒட்டு போட முடியும்..  அட நீங்க ஓட்டுக்கு நிக்கிற எந்த நாதாரிக்கோ முடுச்சவிக்கிக்கோ ஒட்டு போடுங்க..ஏன்னா அது உங்க விருப்பம் அது உங்கள் அந்தரங்க விசயம் கூட. உங்கள் அந்தரங்கத்தை அடுத்தவன் எத்தி பார்க்கிறதை நீங்கள் அனுமதி அளிப்பீர்களா என்பது இந்த தான் வண்டு முருகனின் கேள்வி..

நீங்க ஓட்டு போடும் போது எடுக்கப்பட்ட படமோ அல்லது ஒட்டு போடுற மாதிரி போஸ் கொடுக்குற படமோ, உங்க விரலை கொஞ்சம் பாதுகாப்பா வச்சிருக்க கூடாதா? விரலை காட்டி காட்டி படம் நடிச்சு சம்பாதிச்ச நீங்க ,இப்போ அதே வெரலால கேவலப்பட்டு நிக்கிறீங்களே. இதுக்கு தான் அப்பவே சொன்னாங்களோ , வாள் எடுத்தவன் வாளால தான் சாவான்னு.

அது போக விலை வாசி ஏறிப்போச்சின்னு நீங்க உங்க சம்பளத்தை தான் கம்மியா வாங்குறீங்களா இல்லை பொது ஜனம் ஏற்கவனே விலைவாசியில கஷ்டபடுதுன்னு உங்க படத்தை ஓசியில காமிக்கிறீங்களா? எல்லாரும் நடிச்ச படத்தை விட உங்க படத்தோட டிக்கட் தான் காசு அதிகம் அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? ரசிகனுக்கு ஒரு வேளை சோறு கூட போட முடியல உங்களால..

நீங்கள் எல்லாம் நல்ல வேளை அரசியலுக்கு வர வில்லை, வந்திருந்தால் அந்த கேப்டனையே மிஞ்சி இருப்பீங்க போங்க (காமடியில)!!

Thursday, April 14, 2011

கிரிக்கெட் உலக கோப்பை: வண்டு முருகன் கண்டனம்!

ஏப்பிரல் 15 : இ.கு.க கட்சி வண்டு முருகன் கண்டன அறிக்கை.

எங்கள் இ.கு.க கட்சியின் விளையாட்டு அணியை சேர்ந்த அருமை தம்பி புள்ளட் பாண்டி அவர்கள் உழைத்து போராடி வென்று உலக கோப்பையை வாங்கிய படத்தை தோனி வாங்கிய மாதிரி எடிட்டிங் செய்து இணையங்களிலும், சமூக இணைப்பு வலையங்களிலும் விசமிகள்  வெளியிட்டுருக்கிறார்கள். ICC யிடமிருந்கு தோணி வாங்கியது அசல் உலக கோப்பையே இல்லை என்று ஏற்கனவே நடு நிலைவாதிகளும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். நமது கழக தம்பி புள்ளட் பாண்டி தான் அசல் கோப்பையை வாங்கியது என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்களுக்கு எங்கள் கட்சி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


(படத்தை ஜூம போட்டு பார்க்க படத்தை சொடுக்கவும்)

நீங்கள் மேலே உள்ள படத்தை சற்று  உற்றுநோக்கினாலே அவர்கள் செய்திருக்கும் கிராபிக்ஸ் வித்தை தெரிய வரும்.. தோணியின் தலையை மொட்டை அடித்தது போல் காண்பித்து நன்றாக பொருந்தும்படி செய்திருக்கிறார்கள். நாங்கள் புள்ளட் பாண்டி அவர்கள் கோப்பையுடன் இருக்கும் படத்தை ஏற்கனவே காபிரைட் செய்து விட்டோம். ஆனால் காபிரைட் கன்பார்ம் ஆகாமல் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதால் யாரும் இந்த படததை தவறாக பயன்படுத்த வேண்டாம். இதே படத்தை வைத்து சச்சின், யுவராஜ், காம்பிர், சிங்க் , பதான்  மற்றும் பலர் தங்கள் மூஞ்சிகளை  ஒட்டி வைத்து அழகு பார்பதாகவும் எங்கள் உளவுபிரிவு கண்டு பிடித்திருக்கிறது. இதன் மூலம் தோணி வாங்கியது டூப்ளிகேட் என்று தற்போது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

கிராபிக்ஸில் தகிடுத்தம் செய்யும் வேலையை இத்துடன் நிறுத்தி கொண்டு எங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கா விட்டால் எங்கள் கழக வழக்கறிஞர் அணி  மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படிக்கு
வண்டு முருகன்.
வட்ட செயலாள்ர்.
ங்கொய்யா சொரிவாலயம்
இ.கு.க தலைமை கழகம்


Wednesday, April 13, 2011

வட்ட செயலாளர் வண்டு முருகன் பதில்கள் : April 13

கலைஞர் கருணாநிதி கேள்வி பதில் அறிக்கை விடுவது போல நமது இ.கு.க கட்சி வட்ட செயலாளர் வண்டு முருகனும் பேட்டி எடுக்க யாரும் வராத காரணத்தால் சொந்தமாகவே கேள்வி பதில் அறிக்கை விடுவார் என்பதை கழக கண்மணிகளுக்கு தெரிய படுத்தி கொள்கிறோம்..


கேள்வி: காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மனைவிக்கு ஓட்டு இல்லைங்கிறத பத்தி என்ன நினைக்கிறீங்க?

பதில்: ஹைய்யய்யோ, அவருக்கு விழ இருந்த அந்த ஒரு ஓட்டும் போச்சா ??

கேள்வி:  205 அ.தி.மு.க ஜெயிக்கும்னு சரத் குமாரும், 200  தி.மு.க ஜெயிக்கும்னு அழகிரியும் சொல்லிருக்காங்களே.

பதில்: மொத்தம் இருக்கிறதே 234 தொகுதி தான்..இவங்க சொல்லுற கணக்கை பாத்தா கேரளாவையும் ஆட்டத்துல சேக்கணுமே..அதுக்கு அந்த அச்சுவும், உம்மன் சாண்டியும் சம்மதிப்பாங்களா??


கேள்வி:  இந்த தேர்தல்ல நீங்களே அதிர்ச்சியாகுற மாதிரி ஏதாவது??

பதில் : லட்சிய தி.மு.க தலைவர் விஜய.T.ராஜேந்தர் தேர்தல் புறக்கணிப்பு செய்தது தான் எனக்கு அதிர்ச்சியான செய்தி.. அவரோட தொண்டர்கள் எல்லாம் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு தெரியாம தவிச்ச தவிப்பு  இருக்கே அதை இப்போ நெனச்சாலும் கண்ணுல தண்ணி வந்துரும்.. ம்ம்ம் யாரு பெத்த புள்ளயே!!

கேள்வி: ஸ்ரீரங்கதுல அம்மா வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தப்போ வாஸ்து முறைப்படி தேர்தல் அதிகாரி அறையை மாற்றியதை பத்தி ??

பதில் : நல்ல வேளை ஓட்டு போடுறதுக்கு முன்னாடி கேரள நம்பூதிரிய வச்சி ஓட்டு மெசினை பூஜை செஞ்சதுக்கு அப்புறம் தான் பட்டனை அமுக்குவேன்னு சொல்லல..

கேள்வி: 75 சதவீதமா ஓட்டு சதவீதம் அதிகரிச்சிருக்கே என்ன காரணம் ??

 பதில் : SMS  ல ஓட்டு போடலாம்னு ஒரு வசதிய கொண்டு வந்தா அது 100 சதவீதமா மாறும்.. சொன்னா யாரு கேக்குறா?

கேள்வி:முரசு சின்னம் பதிவாகவில்லைன்னு தேமுதிக புகார் பண்ணியிருக்கே?


பதில் : கேரள பார்டரை தாண்டி இருக்குற பூத்துல எல்லாம் போனா முரசு சின்னம் இருக்காதப்பு..மப்பு இன்னும் தெளியலியா?


கேள்வி:2G ஊழலை பத்தி என்ன நினைக்கிறீங்க??

பதில் : அந்த பஸ் இப்போ எந்த ரூட்டுல ஓடுது?? 21G ரூட்டுலயா??

கேள்வி: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள வாக்குச்சாவடி பெண் அலுவர் தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக கைது பண்ணி இருக்காங்களே?

பதில் : இது குடிமகனின் கழுத்தை நெரிக்கும் செயல்.. இதை எங்கள் கட்சி வண்மையாக கண்டிக்கிறது. தேர்தல்ல ஓட்டு போடுறது குடி மகனோட கடமை.. குடிமகனுக்கு தண்ணி பஞ்சம் வராம பாக்குறது தேர்தல் அதிகாரியோட கடமை .

கேள்வி: விலைவாசி உயர்வு மக்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது என்கிறாரே நடிகர் ரஜினிகாந்த்?

பதில் :உண்மைய சொல்லணும்னா அவரு நடிக்கிற படத்தோட டிக்கட் தான் விலை ரொம்ப அதிகம்.. 



கேள்வி:  49 ஓ போட என்ன செய்யணும்?

பதில் : முதல்ல 48 ஓ போடணும், இதை எல்லாம் ஓரு கேள்வியா கேட்டுகிட்டு.


கேள்வி:  அம்மாவோட ஆட்சியில சாதனைன்னா உங்களுக்கு நினைவுக்கு வருவது?


பதில் : தமிழ் நாட்டுல உள்ள எல்லா யானைகளையும் முதுமலை காட்டுக்கு  "உல்லாசம்" (நம்ம தினதந்தி செய்தி போடுறது மாதிரி)  அனுபவிக்க அனுப்பி வச்சது .








Tuesday, April 12, 2011

விஜயகாந்த் புலம்பலும், ஜெயலலிதா கதறலும்..


விஜயகாந்த் calling பண்ருட்டி Over..

யோவ் பன்னாட பண்ருட்டி உன் பேச்சை கேட்டு ஓட்டும் போச்சு, கத்தி கத்தி தொண்டையும் போச்சு..அந்த வடிவேலு காரை பார்க்கிங் பண்ணுற எடத்துல நம்ம ஆளுக பிரச்சினை பண்ணினதுனால இப்போ நம்ம டிக்கியை எங்கயேயும் பார்க் பண்ண முடியாத படி பண்ணிட்டாய்யா அந்த வடிவேலு பயபுள்ள.. தயவு செய்து நம்ம ஆபீஸ் முன்னாடி உள்ள "நோ பார்க்கிங்" போர்டை தூக்க சொல்லுயா.. யாரு வேணுமோ வரட்டும் வண்டிய விடட்டும்..

அண்ணாவோட ஆவி வந்து சொல்லிச்சுன்னு சொன்னத எந்த பாவி பயலும் நம்பாம போயிட்டாங்களே. தீவிரவாதிய புடிக்காலாம்னு பாகிஸ்தான் பார்டருக்கும் போக முடியாது.. ஏதோ ஒரு ப்ளோல சொன்னத எல்லாம் பெருசா நெனச்சு இந்த பயலுக நம்ம ராணுவத்தை கொச்சை படுத்துறேன்னு சொல்லி கேசை வேற போட்டுட்டானுங்களே..இன்னொரு சசிகலாவாக உருவாகி ஒரு உடாஸ் கம்பனி ஆரம்ப்ச்சி விட்ட காசையெல்லாம் புடிக்கணும்னு சொன்னாய்யா என் பொண்ட்டாட்டி அவ முகத்துல எப்புடி முழிப்பேன்.. நைனா நீ ஆட்சிக்கு வந்தா நான் தான் தளபதி, துணை முதலமைச்சருன்னு சொன்னாய்யா எம்புள்ள பிரபாகரன்.. நானாவது பயங்கர கறுப்பா இருப்பேன். அவன் கறுப்பா பயங்கரமா இருப்பானே , கிக் வேற என்னை விட ஓவரா பண்ணுவானே.. நான் என்ன செய்வேன்..

அதை விடுய்யா, என் மச்சான் சுதீஸ் எப்புடி எப்புடி எல்லாம் கொள்ளை அடிக்கலாம்ணு , எந்தெந்த ஏரியாவுல எல்லாம் பிளாட்டு போட்டு விக்கலாம்ணு பிளானே போட்டு வச்சிருந்தானே.. எதை பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணணும்னு அதுக்கும் அந்த வடிவேலு டயலாக் தான் ஞாபகம் வருது.. படத்துலயாவது நடிக்கலாம்ணு பாத்தா ஊரு எல்லாம் சுத்தி சுத்தி இருந்த கிளாமரும்(???) போச்சு.. சரி உடு,, முருகதாஸ் தம்பி இருந்தா அவருக்கு ஒரு போனை போடு...ஏதாவது சான்ஸ் கெடைக்குமான்னு கேப்போம்..எல்லாம் சரி.. டாஸ்மாக் ரெண்டு நாளைக்கு மூடிருவாங்களே. பாட்டிலாவது வாங்கி வச்சியா??

 ஜெயலலிதா Calling சோ  over:

யோவ் மொட்டை சோ நீ எல்லாம் ஒரு மனுசனாய்யா, உன் பேச்சு கேட்டு இப்புடி குட்டிசெவரு ஆகிட்டேனே ,,ஒரு பாப்பன் இப்புடி ஒரு பாப்பாத்திக்கு துரோகம் செய்யலாமா??? உன்னை ஒரு அதி மேதாவின்னு நெனச்சு நீ சொன்ன பேச்சை கேட்டு வைகோவை துரத்தி விட்டதுனால அவராவது இலவு காத்த கிளியாகிட்டாரு.. நான் தேடி வந்த சீதேவிய எட்டி உதச்ச **தேவியாயிட்டேனே.. என்னால இன்னும் அஞ்சு வருசம் கொடநாட்டுல உக்காந்து குப்பை கொட்ட முடியாது..அந்த கருணாநிதியும், ஸ்டாலினும் திரும்பவும் கோட்டைக்கு போவாங்க , என்னை திரும்பவும் கொடநாட்டுக்கு அனுப்பி வச்சிட்டியே படு பாவி.. ஏற்கனவே என் கஜானா காலியா இருக்கு, இன்னும் அஞ்சு வருசம் எப்புடியா சமாளிப்பேன்.. அதுவும் அந்த கருணாநிதி ஒவ்வொரு மாசமும் தாயா (அம்மா) புள்ளையா பழகுன ஒவ்வொரு அ.தி.மு.க எம்.எல்.ஏவையும் உருவிடுவாரே நான் அவங்களை எல்லாம் எப்புடி காப்பாத்துவேன். நான் இங்க்லீஸ் பேசுற அழகை பாத்து இந்த வட நாட்டு பத்திரிக்கை காரன் எல்லாம் என்னை ரொம்ப ஒவரா போன தேர்தலில்யே பேசி எனக்கு புள்டப்ப் கொடுத்ததை உண்மைன்னு நெனச்சி மோசம் போயிட்டேனே.. ஒரு லட்டுக்கு பதிலா ரெண்டு லட்டு தாரேன்னு நான் சொல்லியும் மக்கள் கேக்காம போயிட்டாங்களே..அதுலயும் உன் பேச்சை கேட்டு ஒரு குடிகாரனை கூட்டணியில சேத்ததுனால மொத்த பேரும் காலி ஆகிடிச்சே.

ஹெலிகாப்டருல பறந்து பறந்து பிரச்சாரம் செஞ்சேன்.. ஹெலிகாப்டர பாக்க வந்த கூட்டத்தை என்னை பாக்க வந்ததா நெனச்சுட்டேனே.. கருடா கருடா பூப்போடு கருடா கருடா பூப்போடுன்னு கீழ நின்னு வேடிக்கை பாத்தவங்க எல்லாம் சொன்னாங்க.. எனக்கு அப்பவே மைல்டா ஒரு டவுட்டு வந்துது.. இப்புடி கடைசியில ஏமாந்திட்டேனே..விஜய் அப்பா சந்திரசேகருக்கு மது ஆலை வைக்க அனுமதி வாங்கி தருவேன்னு அவர ஏமாத்த அவருக்கிட்ட சொன்னத உண்மையின்னு நெனச்சு சசிகலா வேற அவளுக்கு போட்டிய் தொழிலா அவரு வந்துருவாருன்னு நெனச்சு எனக்கு ஆப்பு வச்சிருச்சே. ஓட்டுக்கு நின்னவங்க கூட ஜாதகத்தை ஆல்டர் பண்ணி குடுத்து என் கழுத்தறுத்துட்டாங்களே..

ம்ம் என்ன செய்யுறது.. கொட நாட்டுக்கு பெட்டிய கட்ட வேண்டியது தான்.. இனிமே நீ என் முகத்திலேயே முழிக்காதே.. அறிவாளியா என் வென்ரு..எனக்கு ஒரு வெங்கல கிண்ணம் கூட கெடைக்காத படி பண்ணிட்டியே மொட்ட..





Monday, April 11, 2011

ராகுல் காந்தியின் சுய நிறம் தெரியாத அச்சு!

தமிழ் நாட்டுக்கு வந்து 86 வயசான கருணாநிதிக்கும் , காங்கிரஸ் கூட்டணிக்கும் ஒட்டு கேட்டுட்டு கேரளா போன ராகுல் காந்தி , அங்கே போயி 87 வயசான அச்சுதானந்தன் திரும்பவும் ஆட்சிக்கு வந்தா அடுத்த அஞ்சு வருசத்துல அவருக்கு 93 வயசாயிரும்னு யாருக்கும் தெரியாத ரகசியத்தை சொல்லிட்டு போயிருக்காரு..30 கிலோ மீட்டர் தான் தாண்டி போயிருப்பாரு, அதுக்குள்ளே கருணாநிதியோட வயசு அவருக்கு மறந்து போச்சு.

விடுவாரா நம்ம அச்சு மாமா, "ராகுல் காந்தி ஒரு அமுல் பேபி, அமுல் பேபிக்களுக்கு பிரசாரம் செய்வதற்காக அவர் கேரளா வந்திருக்கிறார்'' என்று குறிப்பிட்ட அச்சுதானந்தன், தனது 16 வயதிலேயே பொதுவாழ்க்கையில் நுழைந்து ஊழலுக்கு எதிராக நிமிர்ந்து நின்றவன் என்றார்

ஆனால் நான் இங்கே சொல்ல வந்தது ராகுல் காந்தி ஒன்றும் அச்சுதானந்தன் சொன்னது போல அமுல் பேபி இல்லை, அவருக்கு எல்லாமே தெரியும்.. இல்லைன்னா அவரு 40 வயசானாலும் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பாரா?

பத்து வருசத்துக்கு முன்னாலேயே அமெரிக்காவில் உள்ள போஸ்டன் விமான நிலையத்தில் , தனது ஸ்பானிஷ் நாட்டு காதலி வெரோனிகா கார்டெல்லியுடன் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களுடன் ஒரு அமுல் பேபி FBI யிடம் மாட்டி இருக்குமா??

அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை FBI அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லாததால் அவரை போஸ்டன் விமான நிலையத்திலேயே சிறை பிடிக்க பட்டார்.. அப்புறம் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயி அவர்களின் முதன்மை செயலாளராக இருந்த பிர்ஜேஸ் மிஸ்ரா தலையிட்டு அவரை வெளியே கொண்டு வந்ததாக ஒரு தகவல்..இவரா அமுல் பேபி..

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் , தேசிய நதிகளை இணைப்பது இயற்க்கைக்கு விரோதமானது என்று திருவாய் மலர்ந்திருக்குமா??

பிகாரில காங்கிரஸை தூக்கி நிறுத்த போறேன் பேர்வழின்னு தனியா போட்டியிட்டு மண்ணை கவ்வி இருக்குமா?

அதே மேதாவி தனத்துல தமிழ் நாட்டுல 30 சீட் கிடைக்கிறதே குதிரை கொம்பாக இருக்கும் போது , கலைஞரை மிரட்டி 63ம் வேணும்னு அடம் பிடிச்சி கேட்டு வாங்கி இருப்பாரா?

அச்சுதானந்தனின் அரசியல் வாழ்க்கை என்ன, அவர் சந்தித்த போராட்டங்கள் என்ன , அவர் இந்த இடத்தை அடைய சந்தித்த தோல்விகள் என்ன என்பதை இந்த அமுல் பேபி அறிந்திருக்குமா ?

இவருக்கென்ன மொத்த இந்தியாவுமே கொள்ளு தாத்தா நேருவோட சொத்து தானே. நேரு பரம்பரையிலே பிறந்து விட்டாலே இந்தியாவை ஆளும் தகுதி வந்து விடுகிறது.. அதை விட இவர்களுக்கு சிங்குசாங்க் அடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் வேறு.. அச்சுவை ராகுல் காந்தி சொன்னது ஒண்ணும் தவறில்லையாம்.. அதற்கு ராகுலை அச்சு அமுல் பேபின்னு சொன்னது பெரிய குத்தமா போயிடிச்சான் நம்ம பிரணாப் முகர்ஜிக்கு..அந்த கருத்து அநாகரீகமானதாம்..

ராகுல் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் அவர்கள் கட்சியில் உள்ள தலைவர்கள், கூட்டணியில் உள்ள தலைவர்கள், அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்கள் எல்லாருக்கும் எவ்வளவு வயசு ஆகுதுன்னு கொஞ்சம் எண்ணி பாத்தாங்கன்னா பரவாயில்லை..

ஆனால் இடதுக்கு இடம் பேச்சுகளை மாற்றும் ராகுல் காந்தி ஒண்ணும் அச்சு சொன்னது போல அமுல் பேபி மட்டும் கிடையவே கிடையாது

Sunday, April 10, 2011

கலைஞர் டிவியில் 'ஜெயலலிதா, சசிகலா' புலம்பல்!

சென்னை: அரசியல் கட்சிகளின் டிவிகளில் இடம் பெறும் விளம்பரங்களில் இன்று கலைஞர் டிவியில் வெளியான ஒரு விளம்பரம் அனைவரையும் கவருவதாக உள்ளது. காரணம், திமுக அரசின் திட்டங்கள் குறித்து ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் புகழ்ந்து கூறுவது போல அமைக்கப்பட்டுள்ளது அந்த விளம்பரம்.

தேர்தல் பிரசார சமயத்தில் ஏராளமான நூதனங்களைக் காணும் பாக்கியம் மக்களுக்குக் கிடைக்கும். காலில் விழுந்து ஓட்டு கேட்பார்கள். கும்பிடுவார்கள், உங்கள் வீட்டுப் பிள்ளையாக கருதி ஓட்டுப் போடுங்கள் என்று கெஞ்சுவார்கள். இன்னும் என்னவெல்லாமோ செய்வார்கள் ஓட்டைக் கேட்பதற்காக.

இப்போது எலக்ட்ரானிக் காலமாகி விட்டதால் நூதன விளம்பரங்களின் தாக்கமும் அதிகமாகியுள்ளது.

இந்த வகையில், தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் டிவிகளில் அவரவர் திறமைக்கேற்ப வித்தியாசமான விளம்பரங்களைப் புகுத்தி ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

இதில் திமுக சற்று ஒரு படி மேலே போய், ஜவுளிக்கடை விளம்பரங்களுக்கு எடுக்கப்படுவது போல தனது ஆட்சியின் திட்டங்களை விளக்கும் வகையில் விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறது.

இன்று ஒரு நூதன விளம்பரம் வெளியானது. அதில் ஜெயலலிதாவைப் போல ஒரு பெண்மணியும், சசிகலாவைப் போல ஒரு பெண்மணியும் தனி அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்பு ஒரு டேபிள் உள்ளது - மதுக் கடை பார்களில் இருப்பது போல.

அதில் ஜெயலலிதாவைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் பெண்மணி, திமுக அரசின் திட்டங்கள் மக்களை கவர்ந்து விட்டதாக கூறி புலம்புகிறார். அதற்கு சசிகலா போன்ற தோற்றத்தில் உள்ள பெண், நாம் ஆட்சிக்கு வந்தால் அதையெல்லாம் ரத்து செய்து விடலாம் அக்கா என்று ஆறுதல் கூறுகிறார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றிக் குறிப்படும் 'ஜெயலலிதா', இதன் மூலம் ஏழைகளையெல்லாம் மயக்கி விட்டாரே கருணாநிதி என்று புலம்புகிறார்.

வித்தியாசமான இந்த விளம்பரம் அனைவரையும் கவர ஆரம்பித்துள்ளது.

இது போதாதென்று முன்பு திரையுலகம் சார்பில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவின்போது ரஜினிகாந்த், சரத்குமார், ராகவா லாரண்ஸ் உள்ளிட்டோர் கருணாநிதி அரசின் திட்டங்களைப் பாராட்டிப் பேசியதையும் இப்போது தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தி வருகிறது திமுக. இதுவும் கலைஞர் டிவியில் இன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.




எப்புடி எல்லாம் யோசிக்கிராயிங்க..இந்த விசயத்தில் ஜெயா டிவிக்கு அனுபவம் இன்னும் பத்தலை.. அம்மாவை கண்டவுடன் கால விழுந்தும், கன்னத்துல போட்டும் அம்மாவை ஏமாத்துற கட்சிக்காரங்க மாதிரி ,  ஜெயா டிவில வேலை பாக்குறவங்களும் ஏதோ கடமைக்கு மாச சம்பளம் வாங்குறதுக்கு வேலை பாக்குறாங்களே.. அம்மாவுக்கு வாச்சதும் சரியில்லை , ஜெயா டிவில வாசிக்கிறதும் சரி இல்லை..

Friday, April 8, 2011

வைகோவிற்கு ஏன் இந்த நிலைமை ?

மார்ச் மாதம் சுனாமி ஜப்பானை புரட்டி போட்ட நேரம், அதே  நேரம் தான் ஜெயலலிதாவின் 160 வேட்பாளர் பட்டியல் சுனாமியும் கூட்டணி கட்சியினரையும் புரட்டி போட்டது.. விஜயகாந்த், தா பாண்டியன், கிருஷ்ணசாமி , ராமகிருஷ்ணன் மற்றும் பலர் தமது கூட்டணி தலைமை இப்படி ஏமாற்றி விட்டதே என்று தே மு தி க அலுவலகத்தில் கூடி அடுத்து என்ன செய்வது என்று கையை பிசைந்த நேரம், விஜயகாந்த்  கோபத்தால் பண்ருட்டியை நல்ல நல்ல வார்த்தைகளால் அர்ச்ச்சனை செய்ததை தடுத்ததால் மச்சான் சுதீஷும் அடி வாங்கிய நேரம் , கிட்டதட்ட என்ன இறுதியாகவே வைகோவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்ட நேரம்..

 கருணாநிதியால் காங்கிரஸுடன் உடன்பாடு காண முடியாததால் கட்சி எம்பிக்களை டெல்லிக்கு அனுப்பி ராஜினாமா பண்ண சொல்லி அனுப்பி  அடுத்த என்ன நடக்குமோ என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்த நேரம்.. இப்படி ஆளாளுக்கு அவங்களோட காரியத்துலேயே கண்ணாக இருந்த நேரம்..

ஜப்பானின் புக்குஷிமா மகாணத்தை பூகம்பமும், அதை தொடர்ந்து சுனாமியும் தாக்கியதில் பலத்த சேதம் அடைந்த அணு உலைகள் வெடிக்கும் ஆபத்தில் ஜப்பான் மக்கள் அனைவருமே பயத்தில் உச்சத்தில் உறைந்த நேரம் வைகோ வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி இதோ :


தொடர் பூகம்பம், எரிமலைச் சீற்றம், ஆழிப் பேரலை என இயற்கை சீற்றமும், அதனைத் தொடர்ந்து அணுஉலை வெடித்துச் சிதறி செயற்கைப் பேராபத்தும் ஜப்பானை முற்றுகை இட்டன. பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். லட்சக்கணக்கானோர், உயிர்களையும், உடமைகளையும் இழந்து, வெட்ட வெளியில் கடும் குளிரில் வாடி வதங்கிக் கொண்டு இருக்கின்றனர்.

நவீன விஞ்ஞான உலகில் எட்டிப் பிடிக்க முடியாத சிகரத்தில் இருந்த ஜப்பானுக்கே இந்த நிலை என்றால், இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு என்ன? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனெனில், இந்தியாவும் சுனாமித் தாக்குதலுக்கு உள்ளாகி, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து இருக்கிறது. எதிர்காலத்திலும், அத்தகைய ஆபத்து நிலவுகிறது.

எனவே, இந்தியாவில் உள்ள 20 அணு உலைகள் தமிழ்நாட்டில் உள்ள கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணு உலைககளின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பான அணு உலைகள் என்றால், அவ்வப்போது அணு உலை நிர்வாகமும், மாவட்ட ஆட்சித் தலைவர், காவல் துறை உயர் அதிகாரிகள், தீயணைப்புத் துறையினர், அபாயச்சங்கு ஒலிக்கச் செய்து மக்கள் பொதுமக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி ஓடித் தப்பிக்க பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி அளிப்பதன் மர்மம் என்ன?


ஜெயலலிதா தன்னை கூட்டணியில் இருந்து விரட்டி அடித்த அதே நேரம் வைகோ தன் கட்சியையோ , தன்னையோ பற்றி கவலை கொள்ளாமல் இந்தியாவின் அணு உலைகள் பாதுகாப்பானது தானா என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.. ஆனால் தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து கட்சிகளும் தி.மு.க , அ.தி.மு.க உட்பட அவரவர் கூட்டணியையும், சீட்டுகளையும் மட்டுமே சிந்தித்தார்களே தவிர இப்படி பட்ட பேராபத்து தமிழகத்துக்கு வந்தால் என்ன செய்வது பற்றி கவலைப்படவே இல்லை.

இதே போல தான் மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வைக்க தனி ஒரு மனிதனாக போராடியிருக்கிறார்.. இவர் இந்த ஆலையை மூட வைக்க காரணமாக இருந்ததால் தான் ஆதிக்க பண முதலைகளின் தூண்டுதலால் ஜெயலலிதாவால் வெளியே தள்ளப்பட்டிருக்கிறார் என்ற செய்தியையும் மறுத்து விட முடியாது.

எல்லா அரசியல்வாதியும் பொய்களையும், புரட்டுகளையும் சொல்லி, அடுத்தவர்களை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தும், மற்றும் பல டகால்ல்டி வேலைகளையும்  செய்தும் ஓட்டு வேட்டையாடி கொண்டிருக்கும் சமயம், வைகோ சத்தமே இல்லாமல் நீரி நிறுவனத்துடன் சேர்ந்து  சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் கழிவுகள் குறித்து ஆய்வு செய்ய  நீரி நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் வைகோவும் சேர்ந்து ஸ்டெர்லைட்  ஆலைக்கு சென்றிருக்கிறார்.

இப்படி மக்களுக்காக ஏதாவது செய்யணும்னு நினைக்கிற வைகோ போன்றவர்களால் அரசியலில் ஏன் வெற்றி பெற முடியவில்லை. சினிமாவில் நடிக்கும் கழைக்கூத்தாடிகளையும், கொலை , கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளையும் நம்பும் தமிழ்நாட்டு மக்கள் ஏன் நேர்மையான அரசியல்வாதிகளை கண்டு கொள்வதில்லை? படத்தில் பஞ்சு டயலாக் பேசி ஹீரோவாக நடித்தாலே போதும் , அவருக்கு நாட்டை ஆளும் திறமை இருக்கிறது என்று அவர் பின்னால் போகும் கூட்டங்கள் ஏன் வைகோ போன்றவர்களை நம்புவதில்லை? இந்த விசயத்தில் தமிழன் அண்டை மாநிலமான கேரளாவை பார்த்து கற்று கொள்ள வேண்டியது ஏராளம்.. அங்கெல்லாம் மகா மெகா ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லாலால் ஒரு வார்ட் கவுன்சிலர் கூட ஆக முடியாது..அந்த மக்கள் அரசியலையும், சினிமா மாயையையும் எப்போதுமே ஒன்றாக கலப்பதில்லை.. என்ன செய்வது இந்த எம்.ஜி.ஆர் , என்.டி.ஆர்.. கே.கே ,ஜெ ஜெ போன்ற வியாதிகள் மக்களை பாதி நூற்றாண்டாகவே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. அந்த தொற்று நோய் இப்போது விஜயகாந்த், சரத் குமார், கார்த்திக், ராஜேந்தர் போன்ற புதிய நோய் கிருமிகளாக உருவெடுத்து ஆளாளுக்கு தமிழகத்தை தான் தான் சுமப்பேன் என்று போட்டி போட்டு கூவிக்கொண்டிருக்கிறாரகள்..

சற்று ஓய்வு நேரம் கிடைத்தால் மேடையில் யாரையாவது அழைத்து வைத்து தன் புகழை பாட வைத்து கேட்டு ரசித்தும், சினிமாவுக்கு கதை வசனம் எழுதியோ, சினிமாவை வெளியிட்டோ நேரத்தை வீணடிக்கும் கலைஞருக்கு மத்தியில், ஓய்வெடுத்து ஓய்வெடுத்தே களைத்து போனதால் திரும்பவும் ஓய்வெடுக்க கொடநாடு செல்லும் ஜெயலலிதாவுக்கு மத்தியில், சூட்டிங் இல்லைன்னா பண்ருட்டி எழுதி கொடுத்து அதை வாசித்ததோடு தன் கடமை முடிந்து விட்டதாகக் கருதி கொண்டு குவாட்டர் அடித்து விட்டு குப்புற படுத்து காலம் தள்ளும் விஜயகாந்த் மத்தியில் வைகோ எனும் ஒரு அரசியல்வாதி சற்று உயர்ந்தே நிற்க்கிறார்.. என்ன செய்வது அவருக்கு பிழைக்க தெரியவில்லை..






Thursday, April 7, 2011

கருணாநிதி ஏன் வெற்றி பெற கூடாது?

தமிழகத்தில் ஏதோ பாசிச ஆட்சி நடப்பதால் , தமிழகத்தை காப்பாத்த போறதா சொல்லி  ஜெயலலிதா ஓட்டு கேட்குறார். தமிழகத்துக்கு விடுதலை வாங்கி தர கேப்டன் ஊரு ஊரா போயி பொலம்புறாரு சாரி பேசுறாரு, அ தி மு க மகா சக்தி கூட்டணிங்கிறாரு தா பாண்டியன். இதுக்கெல்லாம் ஒரு படி மேலே போயி நம்ம ஜிலேபி புகழ் சந்திரபாபு நாயிடு வாங்கின பேட்டாவுக்கு வேலை செய்யணுமேன்னு தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்குதுன்னு வேற சொல்லுறாரு. ஊழல் கூட்டணியை ஒழித்து கட்டுங்கள்னு ஜெய்லலிதா கூட கூட்டணி வச்சிட்டு  பிரகாஷ் காரத் பிரச்சாரம் பண்ணுறாரு இப்புடி எல்லோரும் கலைஞரை  போட்டு தாக்கி பிரச்சாரம் செய்து வரும் வேளையில்..

கலைஞர் ஒன்றும் நல்லவரும் அல்ல முற்றும் துறந்த முனிவரும் அல்ல..தெய்வ திருமகனும் அல்ல. இவங்க எல்லாம் இப்படி பேசுறதுக்கு தகுதி ஆனவங்க தானா என்று சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்..பாசிசம் அப்படின்னா என்ன அர்த்தமென்று தெரியுமா அந்த அம்மையாருக்கு ? பாசிசம் என்ற வார்த்தையை வைகோ தான் ஜெயலலிதாவிற்காக கண்டு பிடித்தார், இப்போது அதை அந்த அம்மாவே உபயோகபடுத்துறது தான் ஹைலைட்..

ஊழல் கூட்டணி ஊழல் கூட்டணி என்று தெருவுக்கு தெரு முழங்கும் பீச்சாங்கை சாரிகளே போன தேர்தலில் இதே முழக்கத்தை தானே முழங்கினீர்கள்.. இந்த ஐந்து வருடத்தில் அந்த அம்மா எந்த புண்ணிய நதியில் போயி மூழ்கி ஊழல் பாவங்களை கழுவி பரிசுத்தவதி ஆனார்.. ஆனா  ஒண்ணுங்க நாம எல்லாரும் ராமதாசை தான் குரங்கு குப்பன்னு சொல்லுவோம்.. ஆனா உண்மையிலேயே இடது சாரிகள் மட்டும் தான் ராமதாசை விட தமது கொள்கைகளுக்காக (??) அடிக்கடி தாவியிருக்காங்க.. எப்புடியாவது ஆளுங்கட்சியை தோற்க்கடிக்கணும்ணு எதிர்கட்சி கூட சேர்ந்து பிரச்சாரம் பண்ணுவாங்க, அதே கட்சி ஆளுங்கட்சி ஆகிட்ட திரும்பவும் யாரு எதிர்கட்சியே அவங்க கூட சேர்ந்து கவுக்குற வேலைய பாப்பாங்க.. ஆனா எல்லா தேர்தலிலும் அவங்க பண்ணுற ஊழலுக்கெதிரான பிரச்சாரம் மட்டும் மாறவே மாறாது. அவங்களுக்கு நாட்டை ஆளவும் தெரியாது, அடுத்தவங்கள ஆள விடவும் பிடிக்காது..

இப்போ எல்லாரும் முழங்குறது ஊழல் கூடி போச்சு, விலைவாசி ஏறி போச்சி, கரண்ட் கட் ஆகி போச்சி, கட்ட பஞ்சாயத்தும் ரவுடிசமும் கூடி போச்சி இத்யாதி இத்யாதி ஆயி போச்சி.. இதுக்கெல்லாம் தேவை அம்மா தலைமையிலான ஆட்சி..

இந்த எல்லா பிரச்சினைகளும் அம்மா வந்தால் சரி ஆகி விடுமா ? ஜெயலலிதா வந்தால் ஊழலை ஒழிக்க முடியுமா ?? அது அவ்வளவு சுலபமான விசயமா ? கலைஞர் ஆட்சியிலயாவது 100 ரூபாய் திட்டத்துக்கு 30 ரூபாய் அடிச்சுட்டு மீதி 70 ரூபாய்க்கு மக்களுக்கு ஏதாவது செய்வாங்க.. ஆனா அம்மா வந்தா எல்லாரும் சுரண்டிட்டு போக மீதி 30 ரூபாயாவது  மக்களுக்கு போயி சேருமாங்கிறதே சந்தேகம் தான்.

யாரு ஆண்டாலும் விலைவாசி என்பது இறங்குறதுக்கு வாய்ப்பே இல்லை. மீண்டும் அந்த காமராஜரே ஆட்சிக்கு வந்தாலும் கூட..

அப்புறம் அம்மா வந்தா மின்வெட்டு தீர்ந்துடுமாம்.. அம்மா எங்கேயிருந்து கரண்ட் எடுத்து கொடுக்க போறாங்கன்னு சொன்னா பரவாயில்லை.. கருணாநிதி 2006 ல் பொறுப்பேத்ததுலேயிருந்து  அ தி மு க ஆட்சியில மின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை பெருக்கலைன்னு குத்தம் சொல்லிக்கிட்டு இருக்காரு.. ஏதோ அவங்க வந்து தான் புதிய மின் திட்டங்களை எல்லாம் உருவாக்க ஆரம்பிசிருக்கோம் , இன்னும் மூணு வருசத்துல தமிழகம் மின்சார தன்னிறவை  அடைஞ்சிடும்னு சொல்லுறத பாத்தா அம்மா ஆட்சிக்கு வந்தாலும் கொறஞ்சது மூன்று வருடங்களுக்கு அதே மின்வெட்டு நிலைமை தான்..

கட்டபஞ்சாயத்துக்களும் , ரவுடிசமும் பண்ணுற ஆளுங்க வேணும்னா மாறுவாங்களே தவிர இந்த ரெண்டையும் அறவே ஒழித்து விட கலைஞராலும் முடியாது, புரட்சி தலைவியாலும் முடியாது.. மன்னார்குடி வகையறாக்கள் போயஸ் கார்டனிலேயே இருந்து வேட்பாளர் பட்டியல் மாத்தினதையே அம்மாவால கண்டு பிடிக்க முடியலயாம்(உபயம்: தினமலர்) .. அப்படின்னா வெளியே நடக்குற கட்டப்பஞ்சாயத்துக்களை எப்படி ஒழிக்க முடியும்.

இலவசம் கொடுத்து கொடுத்து கலைஞர் தமிழகத்தை கடனில் மூழ்கடிக்கிறாருன்னு சொல்லி தான் அந்த அம்மா கடந்த அஞ்சு வருசமா கொட நாட்டுல இருந்து அரசியல் நடத்திச்சி..இப்போ அவங்களே ஒரு லட்டுக்கு பதிலா ரெண்டு லட்டு தின்ன ஆசையான்னு தேர்தல் அறிக்கை விட்டுருக்காங்க.. ஆகையால இந்த விசயத்துலேயும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல.

அப்புறம் இந்த ஈழ தமிழர்கள் விசயம்.. கலைஞர் ஈழத்தமிழருக்காக எதையும் செய்ய வில்லை தான் , ஆனா அது தான் உண்மை.. அவரல் ஒண்ணுமே செய்ய முடியாதுங்கிற விசயத்தை ஏற்கனவே ராமதாசும், வைகோவும் இன்ன பிற ஈழ ஆதரவு தலைவர்களும் ஓப்பன் ஸ்டேட்மன்டே விட்டுருக்காங்க.. ஒண்ணும் பண்ண முடியாதவர் எதுவுமே செய்ய்லைன்னு சொல்லுறது சரியில்லை.. ஈழத்தமிழர்களுக்காக தியாகம் பண்ணுறேன் பேர்வழின்னு  மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்காம வெளியே வந்தா அடுத்த நொடியே அம்மா மத்திய அரசுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்.. இதுனால அவரோட பதவி போறது மட்டும் தான் மிச்சம்.. ஆனா கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஒண்ணுமே செய்ய முடியலயேன்னு கண்டிப்பா ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருப்பார்.. ஆனா அந்த ஒரு சொட்டு கண்ணீர் கூட அம்மையார் சிந்தி இருக்க மாட்டார்.


இப்படி எந்த விசயத்தை எடுத்து பார்த்தாலும், கடைசியில்  எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவெடுக்காம பொறுப்பா நிதானமா முடிவு எடுப்பதாலும், எதிரியையும் மன்னிச்சு சரிக்கு சமமா உட்கார வச்சி பேசுறதினாலும், கூட்டணி கட்சியினரை மதிக்கிற தன்மையாலும் , ஏதோ ஒரு கட்சி கூட்டத்துல பேசினா ஒரு மாசம் சொகுசு பங்களாக்களில் ஓய்வெடுக்காமல், இந்த வயதிலும் (யாருக்காக உழைக்கிறாரோ அது வேற விசயம்) சுறுசுறுப்பா வேலை செய்யிறதினாலேயும், யாரும் எப்போதும் போயி அவரை சந்திக்கலாம்கிறதுனாலேயும், நான் , எனது ஆட்சி என்ற திமிர் இல்லாததுனாலும், கூட்டணி கட்சியினரை கேட்டுக்கு வெளியே நிக்க விடாமல் உட்கார வச்சி பேசுறதினாலும் கலைஞரே இந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார். ஏதோ சில நல்ல திட்டங்களான காப்பீட்டு திட்டம், 108 ஆம்புலன்ஸ் திட்டம் எல்லாம் போட்டு நகரவாசிகளை விட கிராமவாசிகள் மனதிலும் இடம் பிடிச்சிருக்கிறாரு.. அதுனால் மீண்டும் கலைஞர் ஆட்சி வந்தால் எதிர் கட்சிகள் கொக்கரிப்பது போல குடி ஒண்ணும் மூழ்கி போயிடாது...

நம்மக்கிட்டே சொந்தமா இருக்குற ரெண்டு சட்டையுமே அழுக்கா இருக்கும்போது , புதிய சட்டை வாங்க கடையும் பக்கத்துல இல்லைங்கிற நிலைமை வரும்போது எந்த சட்டை கொஞ்சமா அழுக்கா இருக்கோ அதை எடுத்து போடுறதுல ஒண்ணும் தப்பில்ல.. நம்ம நாயக்கர் சொன்னது மாதிரி  நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை..








Friday, April 1, 2011

வைகோவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் தினமலர்!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உள்ளது.
 
வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல்நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது.   அனல்வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க.வை பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.



இவ்வாறு செய்தியை இட்டு தனது உள்ளகிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க தலைமை தன்னை ஏமாற்றி  விட்டதால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என வைகோ அறிவித்த உடனேயே அவரை "ஓட்டம்" என்று தலைப்பு செய்தியிட்டு புழங்காகிதம் அடைந்தது இந்த தினமலர்.. ஆனால் இப்போது ஏப்ரல் ஒன்றாம் தேதியை சாக்காக வைத்து தினமலரை படிக்கும் அத்தனை வாசகர்களும் முட்டாள்களே என்று சொல்லாத குறையாக இந்த செய்தியை இட்டு வாசகர்களை ஏமாற்றியது மட்டுமல்லாது வைகோவையும் அவமதித்திருக்கிறது.

 தினமலர் தனது முட்டாள் வாசகர்களை மேலும் முட்டாள் ஆக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் இதை விட நல்ல சூடான கட்டுகதைகளை தேர்வு செய்திருக்கலாம் அல்லது அதற்கு அந்த திறமை இல்லாவிட்டால் கீழ்கண்டவற்றில் ஏதாவது தேர்வு செய்து வெளியிட்டுருக்கலாம்.

  •  செல்வி ஜெயலலிதா கும்பகோணம் வழியாக ஓட்டு கேட்க சென்ற போது பழைய ஞாபகம் வந்ததால் அதே மகாமக குளத்தில் தொபுக்கடீர்னு விழுந்து ஸ்நானம் செய்தார்.. அம்மா குளிப்பதை ர.ரக்கள் அனைவரும் வேடிக்கை இட்டும் , கன்னத்தில் போட்டும் கொண்டனர்.
  • விஜயகாந்துடன் ஜெயலலிதா சமரசம். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராகவும், ப்ரேமலதாவை துணை முதலமைச்சராகவும் அறிவித்து விட்டு கோடநாட்டில் நிரந்தர  ஓய்வெடுக்கிறார் ஜெயலலிதா.
  •  விஜயகாந்த் குடிக்கும் போது ஊத்தி கொடுத்தது மட்டுமல்ல சைடிஸ்ஸும் தயார் செய்து கொடுத்தது நான் தான் என்று ஜெயா டிவியில் ஜெயலலிதா பேட்டி.
  • ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி மதுரைக்கு ஓட்டு வேட்டையாட வந்த போது அ.தி.மு.க மகளிர் அணியினர் சேலையை மீண்டும் தூக்கி காட்டி அமோக வரவேற்பு. 
  • சோ ராமசாமியும், விஜய் மல்லையாவும், மற்றும் ராஜபக்சேவும் சேர்ந்து கட்டாய படுத்தியதால் தான் வைகோவை வெளியேற்றியதாக ஜெயலலிதா ஒப்புதல்.
  •  ஜெயலலிதா அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லி அனைவருக்கும் பட்டை நாமம்.
  • தோழி சசிகலாவிற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று சொல்லி ஜெயலலிதா டூ விட்டார்.
  •  கஞ்சா புகழ் செரினாவை தனது வளர்ப்பு பேத்தியாக அறிவித்தார் ஜெ.
  • ஜெயலலிதா அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையில் ஏற்றி பொதுக்கூட்டம்.
  • ஜெயலலிதா கருணாநிதியிடம் தோல்வியை ஒப்பு கொண்டு தேர்தலை விட்டே ஓட்டம்.
  • ஜெயலலிதா, ராஜபக்சே சந்திப்பு.. தமிழகத்திலும் மற்றும் இலங்கையில் மிச்சம் இருக்கும் தமிழர்களையும் ஒழிக்க கூட்டு சதி.
  • சோனியாவை பதி பக்தி இல்லாதவர் என்று சொன்னதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டார் ஜெயலலிதா.
  • நரேந்திர மோடியை வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்கவில்லை, வெறும் தயிர் சோறும், மாங்காய் ஊறுகாய் மட்டும் தான் கொடுத்ததாக இஸ்லாமியர்களிடம் ஜெ சத்தியம்.
 பதிவர்களே நீங்களும் இந்த போட்டியில் பங்கு பெற்று தினமலருக்கு மேலும் பல நல்ல ஐடியாக்களை கொடுக்கவும்..