Saturday, March 26, 2011

விஜயகாந்தை துரத்திய அண்ணாவின் ஆவி!


செய்தி:

அண்ணாவின் ஆவி கூறியதால்தான் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக விஜயகாந்த் கூறினார்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே, திறந்த வேன் மூலம் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய விஜயகாந்த், நான் ஏற்கனவே கூறிவந்ததைப் போலவே, மக்களுடனும் தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்துள்ளேன் என்றார்.

பொன்னேரி தொகுதியில் பேசிய விஜயகாந்த், நான் சிறு வயது முதலே எம்.ஜி.ஆர். மீது பற்று உள்ளவன். அவர் ஒவ்வொரு படத்திலும் எந்தெந்த மாதிரி உடை உடுத்தி நடித்தார் .உடை உடுத்தி நடித்தார் என்பது கூடஎனக்குத் தெரியும். அ.தி.மு.க.வுடன் விஜயகாந்த் ஏன் கூட்டு சேர்ந்தார் என்று நீங்கள் நினைத்து இருக்கலாம்.பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றுதல் காரணமாக அண்ணா பெயர் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதால்தான், அவர் பெயரிலான கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளேன் என்றார்.

விசாரித்து அறிந்த உண்மை:

ஒரு நாள் நமது விஜய காந்த் அவர்கள் வழக்கம்போல தண்ணிய போட்டுகிட்டு படுத்திருக்காரு.. மணி சரியா ஒரு பனிரெண்டு இருக்கும் ஒரு குள்ளமான ஒரு உருவம் தோன்றி ரமணா, தம்பி ரமணா அப்படின்னு ரெண்டு தடவை கூப்பிட்டிருக்கு... நாம தான் அந்த படத்தை நடிச்சி முடிச்சிட்டோமே , முருகதாஸ் ஏதோ காமெடி பண்ணுராருன்னு நெனச்சி போர்வைய இழுத்தி போத்திகிட்டு தூங்கி இருக்காரு.. அந்த உருவத்துக்கு வந்தது பாருங்க கோபம், திரும்பவும் தம்பி விஜயராஜ், விஜயராஜ்ன்னு ரெண்டு தடவை கூப்பிட்டு இருக்கு.. நம்ம விசயகாந்துக்கு ஒரே ஆச்சர்யம்.. நம்ம ஒரிஜினல் பேரை வச்சி  கூப்பிடுறது யாருன்னு நெனச்சி யாரப்பு நீயின்னு கேட்டுருக்காரு..

அதுக்கு அந்த உருவம் நான் தாண்டா உங்களோட அண்ணா அப்படின்னு சொல்லி இருக்கு.. உடனே இவரு அப்புடி எல்லாம் இருக்க சான்ஸ் இல்லயேன்னு வடிவேலு ஸ்டைலுல யோசிச்சிருக்காரு.. நமக்கு கூட பொறந்த அண்ணா யாருமே இல்லையேன்னு நெனச்சவரு அவரோட நைனா  அழகர்சாமியையே ஒரு நிமிசம் சந்தேகபட்டுருக்காரு..உடனே சுதாரிச்ச அந்த உருவம் , அட மடையா நான் உனக்கு மட்டும் அண்ணா இல்லைடா இந்தா ஊருக்கே அண்ணா அப்படின்னு சொல்லிடிச்சி.

நான் நடிச்ச படம் தான் எங்கள் அண்ணா , நீ என்னையே கலாய்க்கிறியான்னு திருப்பி கேட்டுருக்காரு..அடே நான் நீ நடிச்ச படம் இல்லடா, நான் அண்ணாதுரை , பொறந்து வளந்தது காஞ்சி புரதுலேன்னு மொத்த பயோடேட்டாவும் அந்த உருவம் கொடுத்த பிறகு தான் ஓ அவரா நீங்கன்னு திருப்பி கேட்டுருக்காரு..

கேட்டுட்டு என்னை எதுக்கு இப்போ கூப்பிட்டீங்கன்னு கேக்க அந்த உருவம் சொல்லிச்சாம்.. நீ தான் இனிமே இந்த தமிழ் நாட்டையே முடிஞ்சா உலகத்தையே காப்பாத்தணும்னு சொல்லிச்சாம்..இவருக்கு ஒரே குசி தான் போங்க..இருந்தாலும் உன்னால தனியா நின்னு தமிழகத்தை தூக்கி பிடிக்க முடியாது , கொஞ்சம் ஓவர் வெயிட்டா இருக்கும் , நீ வேற எந்நேரமும் தண்ணிய போட்டுட்டு இருக்குறதுனால நாடி நரம்பு கொஞ்சம் இல்ல ரொம்பவே வீக்கா இருக்கு, அதுனால ஒரு ஆள துணைக்கு கூப்பிட்டு தமிழகத்தை தூக்கி உன் முதுகுல வச்சிகோண்ணு சொல்லிச்சாம்..

நான் யாரை துணைக்கு கூப்பிடறதுன்னு இவர் திருப்பி கேக்க, நீ பண்ருட்டி எழுதி கொடுக்குறத வாசிச்சி வாசிச்சியே பழகிட்டதுனால உன்னால சுயமா சிந்திக்கவே முடியல,,அதுக்கும் நான் தான் உதவி செய்யணுமா அப்டின்னு அந்த ஆவி கேட்டுட்டு உனக்கு நான் ஒரு க்ளு தாரேன், அதை வச்சி கண்டு பிடின்னு சொல்லிச்சாம்.. நான் ஒரு சின்ன க்ளுவை வச்சி பாகிஸ்தான் தீவிரவாதியையே புடிச்சவன் சொல்லு அந்த க்ளுவைன்னு இவரு கேட்க.. என்னோட பேரு இருக்குற கட்சி காரங்கள துணைக்கு கூப்பிடுண்ணு சொல்ல இவருக்கு ஒரே கொயப்பம்..  

உடனே இவரு அடடே நம்ம எம்.ஜி.அர்.அண்ணா.தி.மு.க வான்னு கேட்க அது இல்லைன்னு சொல்லிடிச்சு.

அடடா இது ரொம்ம்ப கஸ்டமான க்ளூவா இருக்கே , வேறு ஏதாவது க்ளு சொல்லி கேக்க உடனே அந்த உருவம் சொல்லிச்சாம் அந்த கட்சி தலைவி எப்போதுமே ரெஸ்ட் எடுத்துட்டு மலை பிரதேசங்களில் தங்கி இருப்பாங்க நீ போயி கண்டு புடின்னு சொல்லிட்ட்டு மறஞ்சி போயிடிச்சு..

இவரு காலைல எழுந்து பல்லு கூட வெளக்காம பண்ருட்டிக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்துட்டு ஆழ்ந்த சிந்தனையில மூழ்கின சமயம் பண்ருட்டி திரும்ப போண் செய்ய இவரு முழு கதையும் சொல்லிட்டாரு.. அவர் உடனே நாம வேணும்ணா கழக கார்பரேட் அக்கவுண்ட்ல ரூம் போட்டு யோசிப்போமாண்ணு கேட்க அவரு கண்ணு இன்னும் செவந்திருச்சி.

அப்புடியே அந்த நாளும் ஓடிப்போக திரும்பவும் அதே பனிரெண்டு மணி, அதே கனவு, அதே உருவம், அதே குரல்.. என்ன அப்பு யாருன்னு கண்டுபுடிச்சியான்னு கேக்க இவரு மண்டைய ஆட்டி இல்லைன்னு சொல்ல , ஷ்ஷப்பான்னு சொல்லிட்டு, சரி இன்னொரு க்ளு சொல்லுறேங்கேளுன்னு , அவங்கள அரஸ்ட் பண்ணினப்ப மூனு பேர உயிரோட எரிச்சிருக்காங்கண்ணு சொல்ல நம்ம விஜயகாந்த் டக்குன்னு கரக்ட் எனக்கு தெரியும், இதே காட்சி ரமணா படத்துலேயும் வந்திருக்குன்னு யோசிச்சிட்டு ஓ அ.தி.மு.க வான்னு கேக்க அட கூறு கெட்ட கூபேன்னு சொல்லி ஆமாம் அவங்க தான் , அவங்க எத்தனை சீட் கொடுத்தாலும் வாங்கிருன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம்..இதுனால தான் அவரு போயஸ் கார்டன் போயி உடன்பாடு போட்டிருக்காரு..
ஒரு நாள் அன்னிக்கு அவர் தண்ணிய போடாம படுத்துருக்காரு, அதே உருவம் திரும்பவும் வந்துருக்கு... அதே குரல்.. இவர் முழிச்சி பாத்தப்போ பக்கத்து வீட்டு கார் டிரைவர் அண்ணாதுரை நின்னுகிட்டு இருந்திருக்கானாம்.. அவன் விஜயகாந்துகிட்டே மாட்டினதுனால ஊர விட்டே போயிட்டானாம்,, 

தற்போதைய செய்தி : பக்கத்து வீட்டு ஓணர் டிரைவர் வேலைக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருக்காரு  .






11 comments:

Anonymous said...

Nice Post!
Hope the story may be true!
particularly ANNA's dialogue's.

Anonymous said...

Fantastic creative, writing power!
Utilise it for vision of Tamil Nadu 2012!

கோவை செய்திகள் said...

சிறப்பு... தங்களின் வலைபூ! ஒரே செய்தி. தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்!

பொ.முருகன் said...

விஜயகாந்த் பேசினதப்பார்த்தா வடிவேலு சொன்னது சரிதான்போல [எந்நேரமும் தண்ணியில மிதக்குரவனுக்குப் பேரு கேப்டன்]

வருண் said...

புத்தி கழண்டு போச்சு! இந்த மூதேவிய பிடிச்சுப் போயி ஏர்வாடில கட்டிப்போடனும்!

Unknown said...

பான்டி அண்ணே, உஙக‌ தொகுப்புல‌ம் பாக்கும்போது நீங்க‌ ந‌ம்ம‌ குடும்ப‌ சுர‌ன்ட‌லுக்கு ஆத‌ரவாவே பேசுரீங‌க‌ளே.த‌ய‌வு செய்து ந‌டு நிலையாக‌ இருங‌க‌ண்ணே.... நீங‌க‌ தி மு க‌ ல‌ சீட் வாங‌லாம்னு இருக்கீங‌க‌ளா... ராம‌தாஸ் அய்யா என்று சொன்னா ஒன்னுமே சொல்ல‌ மாட்டீஙா,க‌ருணா வெ எல்லாம் பேர் சொல்லி கூப்பிட மாட்டீஙக‌ ஆனால் ஒரு க‌ட்சி ஆர‌ம்பிச்சு த‌லைவ‌னை கேப்டனு சொன்னா ஏனே இப்ப‌டி கோப‌ப‌டுரீங்க‌

படித்துறை பாண்டி said...

Ha அண்ணே , அவங்களை எல்லாம் திட்டுறதுக்கு ஏற்கனவே கியூவ்ல ஆளு நிக்கிறாங்கண்ணே!!

Soundararajan G said...

ஆவி வந்துச்சா, இல்லயா?
பக்கத்து வீட்டு ட்ரைவர் ஏன் வந்தாரு?
இவங்க எப்பவுமே இப்படித்தான், காரை பக்கத்து வீட்டுக்கு முன்னாடிதான் நிறுத்துவாங்களோ?

Soundararajan G said...

கட்சி ஆரம்பிச்சுட்டா, உடனே கேப்டனா? அப்பொ, தோனி என்ன பன்னுவாரு?
இது எப்படி இருக்குதுன்னா, straightஆ ஹீரோதான்னு...
முதல்ல அவர் நல்லா steadyஆ நிக்க சொல்லுங்கோ மக்களே.
அடுத்து, கனவுலகத்தை விட்டு, நிஜத்துக்கு வாங்க. அப்பத்தான் புள்ளங்களை படிக்கவைக்க முடியும்.

Anonymous said...

செம வெட்டு ! அண்மையில் நான் படித்த சூப்பர் பதிவுகளில் இதுவும் ஒன்று !!!

செங்கோவி said...

சும்மா பிரிச்சு மேஞ்சிருக்கீங்களே..நல்லாயிருக்கு.