வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Wednesday, April 13, 2011

வட்ட செயலாளர் வண்டு முருகன் பதில்கள் : April 13

கலைஞர் கருணாநிதி கேள்வி பதில் அறிக்கை விடுவது போல நமது இ.கு.க கட்சி வட்ட செயலாளர் வண்டு முருகனும் பேட்டி எடுக்க யாரும் வராத காரணத்தால் சொந்தமாகவே கேள்வி பதில் அறிக்கை விடுவார் என்பதை கழக கண்மணிகளுக்கு தெரிய படுத்தி கொள்கிறோம்..


கேள்வி: காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மனைவிக்கு ஓட்டு இல்லைங்கிறத பத்தி என்ன நினைக்கிறீங்க?

பதில்: ஹைய்யய்யோ, அவருக்கு விழ இருந்த அந்த ஒரு ஓட்டும் போச்சா ??

கேள்வி:  205 அ.தி.மு.க ஜெயிக்கும்னு சரத் குமாரும், 200  தி.மு.க ஜெயிக்கும்னு அழகிரியும் சொல்லிருக்காங்களே.

பதில்: மொத்தம் இருக்கிறதே 234 தொகுதி தான்..இவங்க சொல்லுற கணக்கை பாத்தா கேரளாவையும் ஆட்டத்துல சேக்கணுமே..அதுக்கு அந்த அச்சுவும், உம்மன் சாண்டியும் சம்மதிப்பாங்களா??


கேள்வி:  இந்த தேர்தல்ல நீங்களே அதிர்ச்சியாகுற மாதிரி ஏதாவது??

பதில் : லட்சிய தி.மு.க தலைவர் விஜய.T.ராஜேந்தர் தேர்தல் புறக்கணிப்பு செய்தது தான் எனக்கு அதிர்ச்சியான செய்தி.. அவரோட தொண்டர்கள் எல்லாம் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு தெரியாம தவிச்ச தவிப்பு  இருக்கே அதை இப்போ நெனச்சாலும் கண்ணுல தண்ணி வந்துரும்.. ம்ம்ம் யாரு பெத்த புள்ளயே!!

கேள்வி: ஸ்ரீரங்கதுல அம்மா வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தப்போ வாஸ்து முறைப்படி தேர்தல் அதிகாரி அறையை மாற்றியதை பத்தி ??

பதில் : நல்ல வேளை ஓட்டு போடுறதுக்கு முன்னாடி கேரள நம்பூதிரிய வச்சி ஓட்டு மெசினை பூஜை செஞ்சதுக்கு அப்புறம் தான் பட்டனை அமுக்குவேன்னு சொல்லல..

கேள்வி: 75 சதவீதமா ஓட்டு சதவீதம் அதிகரிச்சிருக்கே என்ன காரணம் ??

 பதில் : SMS  ல ஓட்டு போடலாம்னு ஒரு வசதிய கொண்டு வந்தா அது 100 சதவீதமா மாறும்.. சொன்னா யாரு கேக்குறா?

கேள்வி:முரசு சின்னம் பதிவாகவில்லைன்னு தேமுதிக புகார் பண்ணியிருக்கே?


பதில் : கேரள பார்டரை தாண்டி இருக்குற பூத்துல எல்லாம் போனா முரசு சின்னம் இருக்காதப்பு..மப்பு இன்னும் தெளியலியா?


கேள்வி:2G ஊழலை பத்தி என்ன நினைக்கிறீங்க??

பதில் : அந்த பஸ் இப்போ எந்த ரூட்டுல ஓடுது?? 21G ரூட்டுலயா??

கேள்வி: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள வாக்குச்சாவடி பெண் அலுவர் தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக கைது பண்ணி இருக்காங்களே?

பதில் : இது குடிமகனின் கழுத்தை நெரிக்கும் செயல்.. இதை எங்கள் கட்சி வண்மையாக கண்டிக்கிறது. தேர்தல்ல ஓட்டு போடுறது குடி மகனோட கடமை.. குடிமகனுக்கு தண்ணி பஞ்சம் வராம பாக்குறது தேர்தல் அதிகாரியோட கடமை .

கேள்வி: விலைவாசி உயர்வு மக்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது என்கிறாரே நடிகர் ரஜினிகாந்த்?

பதில் :உண்மைய சொல்லணும்னா அவரு நடிக்கிற படத்தோட டிக்கட் தான் விலை ரொம்ப அதிகம்.. கேள்வி:  49 ஓ போட என்ன செய்யணும்?

பதில் : முதல்ல 48 ஓ போடணும், இதை எல்லாம் ஓரு கேள்வியா கேட்டுகிட்டு.


கேள்வி:  அம்மாவோட ஆட்சியில சாதனைன்னா உங்களுக்கு நினைவுக்கு வருவது?


பதில் : தமிழ் நாட்டுல உள்ள எல்லா யானைகளையும் முதுமலை காட்டுக்கு  "உல்லாசம்" (நம்ம தினதந்தி செய்தி போடுறது மாதிரி)  அனுபவிக்க அனுப்பி வச்சது .