Saturday, March 5, 2011

முஸ்லிம்களை நக்கலடித்தவர் ஜெயலலிதா'' -காதர் மொய்தீன்!,
சிறையில் அடைத்தார் கலைஞர்! -ஜவாஹிருல்லா

முஸ்லிம்களை நக்கலடித்தவர் ஜெயலலிதா'' -காதர் மொய்தீன்!
தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 3 சீட்டுகளை  தந்துள்ளார் கலைஞர். முஸ்லிம் லீக்கின் மாநி லத் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீனிடம், ""முஸ்லிம் சமூகத்திற்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?'' என்று கேட்டபோது...

""தி.மு.க. ஆட்சியில்தான் முஸ்லிம்  சமூகம் பாதுகாப்பாக இருக்கும். கண்ணிய மாகவும் மரியாதையாகவும் இருக்கும். மேலும் முஸ்லிம்களின் முக்கிய கோரிக் கைகளான தனி இட ஒதுக்கீடு,  உலமாக்கள் நல வாரியம், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு (பள்ளிகள்) மானியம் உள்ளிட்ட பல கோரிக்கை களை உரிமையுடன் எழுப்ப முடிந்ததும் அது நிறை வேற்றப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான்.  முஸ்லிம் சமூகத்திற்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு தந்து அதற்கு சட்ட பாது காப்பும் ஏற்பாடு செய்து தந்தவர் கலைஞர்.  இன் றைக்கு  இந்த தனி இட ஒதுக்கீட்டால்...  கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில்  பயன்பெற்று வருகின்றனர்.

ஆனா, ஜெயலலிதா ஆட்சியில் எந்த கோரிக்கை யையும் உரிமையுடன் கேட்க வே முடியாது. அப்படியே கேட்டாலும் அதை நக்க லடித்துத்தான் பேசுவார். தனி இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து ஒருமுறை ஜெயலலிதாவிடம் வலியுறுத்திய போது, "முஸ் லிம்களுக்கு எதுக்கு இட ஒதுக்கீடு? நீங்கதான் வசதி வாய்ப்புகளில் ஓஹோன்னு இருக்கீங்களே என்று முஸ்லிம்களை நக்கலடித்துப் பேசி இட ஒதுக்கீடு பத்தியெல்லாம் இனி என்கிட்டே பேசாதீங்க. அது எனக்குப் பிடிக்காது' என்று கோபமாகச் சொன்னவர்தான் ஜெயலலிதா.

முஸ்லிம்களுக்கென்று மதச் சட்டம் இருக்கிறது. இதனை இந்திய அரசியலமைப்பு நிர்ணய  சட்டமே அங்கீகரித்திருக்கிறது.       ஆனா, இது கூடாது என்று  பொது சிவில் சட்டத்தை கொண்டு வர  பா.ஜ.க. முயற்சிக்கும் போதெல்லாம், அதற்கு பா.ஜ.க.வின் ஊது குழலாக நின்று, "இந்தியாவில் இருக்கும் முஸ்    லிம்கள் இந்திய சட்டத்தை ஏற்கவேண்டும். அவர்களுக்கென்று தனிச்சட்டம் கூடாது.         பொது சிவில் சட்டத்தை வரவேற்கிறேன்'        என்று  உரத்துச் சொல்பவர் ஜெயலலிதா. இப்படிப்பட்டவரா முஸ்லிம் சமூகத்திற்கு பாது காப்பானவர்?

நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசில் முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் நடந்தபோது, 600-க்கும் அதிகமான  பள்ளி வாசல்களும்  100-க்கும் மேற்பட்ட தர்காக்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதனை நியாயப்படுத்தினார் மோடி. மோடியின் நியாயத்தை ஆர்.எஸ்.எஸ். மைண்ட் உள்ள பத்திரிகைகளே அப்போது கண்டித்தன. ஆனா இதனை கண்டிக்காத ஜெயலலிதா, நரேந்திர மோடியை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து, வாழையிலை விருந்து கொடுத்து மகிழ்ந்தார்.

இந்தச் சம்பவம் இன்னமும் முஸ்லிம் களிடம் ஆறாத வடுவாக இருக்கிறது. அதனால் மோடியின்  மறு உருவமான ஜெயலலிதா எப்போதுமே முஸ்லிம்களின் நலன்களுக்காக சிந்தித்தது கிடையாது.

மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வந்து சிறுபான்மையினரின் உணர்வுகளை மழுங் கடித்தவர் ஜெயலலிதா. பள்ளிவாசல்களில் விடியற்காலையில் ஒலிக்கும் பாங்கு நிகழ்ச்சி, இந்துக்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, காவல்துறை மூலம் அதற்கு தடைபோட்டவரும் இவர்தான்.

இப்படி முஸ்லிம்களுக்கு எதிரான ஜெயலலிதாவின்  நடவடிக்கைகள் நிறைய சொல்ல முடியும்.  ஆக, எந்தச் சூழலிலும் ஜெய லலிதா முஸ்லிம்களுக்கு நன்மை செய்த     தில்லை'' என்கிறார் உரத்த குரலில் காதர் மொய்தீன்.

சிறையில் அடைத்தார் கலைஞர்! -ஜவாஹிருல்லா
அ.தி.மு.க  கூட்டணியில் இணைந்திருக்கும் த.மு.மு.க.வின்  அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்திருக்கிறது. த.மு.மு.க.தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விடம், ""முஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா?'' என்று கேட்டபோது,

""தி.மு.க.வின் தொடக்க காலத்திலிருந்து அதற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும்  இருந்தவர்கள் முஸ்லிம்கள். 1967-ல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு தி.மு.க. அரியணையில் ஏறியதற்குக் காரணம் முஸ்லிம்கள்தான். இது வரலாறு. முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது பல வருடங்களாக இருந்து வருகிறது. இதன் நியாயத்தை உணர்ந்து 70-களில் 12 சதவிகித இட ஒதுக்கீட்டை கேரள அரசு சட்டமாக்கியது. ஆனால்...  தமிழகத்தில் போராடிக்கொண்டேதான் இருந்தோம். தி.மு.க. அரசில் இது கண்டுகொள்ளப்படவேயில்லை. தற்போது 3.5 சதவிகிதம் கொடுத்திருக்கிறார் கலைஞர்.

இது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்ப அமையவில்லை. அதனால் இந்த இட ஒதுக்கீட்டால் பெரிய அளவில்  முஸ்லிம்களுக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த 3.5 சதவிகிதம் கூட முஸ்லிம்கள் மீதான அக்கறை யால் அல்ல. தேர்தலுக்காக கொடுக்கப்பட்டிருக் கிறது.

எங்கள்  போராட்டங்கள் அடக்கி ஒடுக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தானே தவிர அ.தி.மு.க. ஆட்சியில் அல்ல.

உதாரணத்திற்கு... பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ல்  ஒவ்வொரு வருடமும் பேரணி, போராட்டம்  நடத்து வது வழக்கம். ஆனா போராட் டத்திற்கு  இரண்டு நாட் களுக்கு முன்பிருந்தே "முன் னெச்சரிக்கை' என்று காரணம் காட்டி த.மு.மு.க. நிர்வாகிகள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடு வார் கலைஞர். இப்படி ஒரு அடக்குமுறை ஜெய லலிதா ஆட்சியில் ஒரு போதும் நடந்த தில்லை. 

தி.மு.க. ஆட்சி யில்தான் கோவை கலவரம் வெடித்தது. இதில் முஸ்லிம்களின் உயிர் களும் உடைமைகளும்  சூறை யாடப்பட்டன.

காவிகளும் காக்கிகளும்  கண்மூடித்தனமாக முஸ்லிம் களைத் தாக்கினர். இதனை தடுக்காத தி.மு.க. அரசு, "குண்டு வைத்தார்கள்' என்று அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்து மகிழ்ந்தது. இன்னமும் அப்பாவி முஸ்லிம் கள் சிறையில்தான் துன்பம் அனுபவித்து வருகிறார்கள்.

மோடிக்கு ஜெயலலிதா விருந்து கொடுத்தார்னுதான் தி.மு.க. குற்றம் சொல்லும். ஆனா, மோடியின் தலைவரான வாஜ்பாய் அரசில் அமைச்சரவை சுகம் கண்டவர்கள் யார்? தி.மு.க.தானே?
முஸ்லிம் கட்சிகளுக்கான தனித்தன்மையை தி.மு.க. எப்போதுமே தந்ததில்லை. தனது கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சியை, தி.மு.க.வின் சிறுபான்மை பிரிவாகத்தான்  கலைஞர் வைத்திருக்கிறார். அதனால்தான் முஸ்லிம் கட்சியை தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காமல் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி நிறைவேற்றிக் கொள்கிறார் கலைஞர்.  தனிச்சின்னம் வாய்ப்பு தரப்படாததால், முஸ்லிம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுகிறார்கள். இதுவா முஸ்லிம்களை பாதுகாக்கும் முறை? ஆனா, இந்த நிலை அ.தி.மு.க.வில் இல்லை.

கடந்த காலங்களிலும் சரி... தற்போதும் சரி...  முஸ்லிம் கட்சி களை தனி சின்னத்தில் போட்டியிட அனுமதித்தவர்... அனுமதிக்கிற வர் ஜெயலலிதாதான். இப்படி நிறைய சொல்ல முடியும்'' என்கிறார் வலிமையான குரலில் ஜவாஹி ருல்லா.