வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Thursday, January 6, 2011

கல் நெஞ்சக்கார விஜய்யும், கண் கலங்கிய சென்சார் போர்டும் !

விஜய் - அசின் நடிப்பில் சித்திக் இயக்கியிருக்கும் காவலன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை குறைந்தது 600 தியேட்டர்களிலாவது திரையிட வேண்டும் என்பது தயாரிப்பாளரின் ஆசை. ஆனால் முக்கிய தயாரிப்பாளர்கள் சிலர் முன்கூட்டியே தியேட்டர்களை புக் செய்து விட்டதால் இதுவரை 100 தியேட்டர்கள்தான் உறுதியாகி இருக்கிறது. மேலும் 100 தியேட்டர்களுக்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் ரொம்பவே டென்ஷனாக இருக்கும் படக்குழுவினர் காவலனை சென்சார் போர்டுக்கு அனுப்பினார்கள்.

காவலன் படத்தினை பார்த்து சென்சார் போர்டு அதிகாரிகள் கண் கலங்கியிருக்கிறார்கள்.  

இந்த  விஜய் யால் மக்கள் பட போகும் அவதியை பார்த்து , எப்போது தமிழ் மக்களுக்கு இவரோட நடிப்பை பார்த்து துயர படுவதிலிருந்து விடுதலை கிடைக்க போகிறது என்று நினைத்து மக்களுக்காக சென்சார் போர்டே கண் கலங்கியிருக்கு.. ஆனாலும் விஜய் விடுவாரா தமிழர்களை ? அவருக்கும் மனசாட்சி இருந்தா , கண் கலங்கி ஒதுங்கி விடலாம்.. என்ன செய்ய..

வடிவேலு சொன்ன மாதிரி:

கல் நெஞ்ச காரன். கரையிறானா ? சென்சார் போர்டு மாதிரி விஜய் யும் நல்லவரா இருப்பாருண்ணு நெனச்சது எவ்வளவு  பெரிய முட்டாள் தனம். ரசிகனையும் , மக்களையும் அழ வைக்கிறதிலே அவ்வளவு பெரிய சந்தோசம் உனக்கு.. சர்வாதிகாரி..