வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Monday, April 11, 2011

ராகுல் காந்தியின் சுய நிறம் தெரியாத அச்சு!

தமிழ் நாட்டுக்கு வந்து 86 வயசான கருணாநிதிக்கும் , காங்கிரஸ் கூட்டணிக்கும் ஒட்டு கேட்டுட்டு கேரளா போன ராகுல் காந்தி , அங்கே போயி 87 வயசான அச்சுதானந்தன் திரும்பவும் ஆட்சிக்கு வந்தா அடுத்த அஞ்சு வருசத்துல அவருக்கு 93 வயசாயிரும்னு யாருக்கும் தெரியாத ரகசியத்தை சொல்லிட்டு போயிருக்காரு..30 கிலோ மீட்டர் தான் தாண்டி போயிருப்பாரு, அதுக்குள்ளே கருணாநிதியோட வயசு அவருக்கு மறந்து போச்சு.

விடுவாரா நம்ம அச்சு மாமா, "ராகுல் காந்தி ஒரு அமுல் பேபி, அமுல் பேபிக்களுக்கு பிரசாரம் செய்வதற்காக அவர் கேரளா வந்திருக்கிறார்'' என்று குறிப்பிட்ட அச்சுதானந்தன், தனது 16 வயதிலேயே பொதுவாழ்க்கையில் நுழைந்து ஊழலுக்கு எதிராக நிமிர்ந்து நின்றவன் என்றார்

ஆனால் நான் இங்கே சொல்ல வந்தது ராகுல் காந்தி ஒன்றும் அச்சுதானந்தன் சொன்னது போல அமுல் பேபி இல்லை, அவருக்கு எல்லாமே தெரியும்.. இல்லைன்னா அவரு 40 வயசானாலும் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பாரா?

பத்து வருசத்துக்கு முன்னாலேயே அமெரிக்காவில் உள்ள போஸ்டன் விமான நிலையத்தில் , தனது ஸ்பானிஷ் நாட்டு காதலி வெரோனிகா கார்டெல்லியுடன் இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்களுடன் ஒரு அமுல் பேபி FBI யிடம் மாட்டி இருக்குமா??

அந்த பணம் எங்கிருந்து வந்தது என்பதை FBI அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சரியான பதில் சொல்லாததால் அவரை போஸ்டன் விமான நிலையத்திலேயே சிறை பிடிக்க பட்டார்.. அப்புறம் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயி அவர்களின் முதன்மை செயலாளராக இருந்த பிர்ஜேஸ் மிஸ்ரா தலையிட்டு அவரை வெளியே கொண்டு வந்ததாக ஒரு தகவல்..இவரா அமுல் பேபி..

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய் , தேசிய நதிகளை இணைப்பது இயற்க்கைக்கு விரோதமானது என்று திருவாய் மலர்ந்திருக்குமா??

பிகாரில காங்கிரஸை தூக்கி நிறுத்த போறேன் பேர்வழின்னு தனியா போட்டியிட்டு மண்ணை கவ்வி இருக்குமா?

அதே மேதாவி தனத்துல தமிழ் நாட்டுல 30 சீட் கிடைக்கிறதே குதிரை கொம்பாக இருக்கும் போது , கலைஞரை மிரட்டி 63ம் வேணும்னு அடம் பிடிச்சி கேட்டு வாங்கி இருப்பாரா?

அச்சுதானந்தனின் அரசியல் வாழ்க்கை என்ன, அவர் சந்தித்த போராட்டங்கள் என்ன , அவர் இந்த இடத்தை அடைய சந்தித்த தோல்விகள் என்ன என்பதை இந்த அமுல் பேபி அறிந்திருக்குமா ?

இவருக்கென்ன மொத்த இந்தியாவுமே கொள்ளு தாத்தா நேருவோட சொத்து தானே. நேரு பரம்பரையிலே பிறந்து விட்டாலே இந்தியாவை ஆளும் தகுதி வந்து விடுகிறது.. அதை விட இவர்களுக்கு சிங்குசாங்க் அடிக்கும் காங்கிரஸ் தலைவர்கள் வேறு.. அச்சுவை ராகுல் காந்தி சொன்னது ஒண்ணும் தவறில்லையாம்.. அதற்கு ராகுலை அச்சு அமுல் பேபின்னு சொன்னது பெரிய குத்தமா போயிடிச்சான் நம்ம பிரணாப் முகர்ஜிக்கு..அந்த கருத்து அநாகரீகமானதாம்..

ராகுல் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் அவர்கள் கட்சியில் உள்ள தலைவர்கள், கூட்டணியில் உள்ள தலைவர்கள், அவர்களால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்கள் எல்லாருக்கும் எவ்வளவு வயசு ஆகுதுன்னு கொஞ்சம் எண்ணி பாத்தாங்கன்னா பரவாயில்லை..

ஆனால் இடதுக்கு இடம் பேச்சுகளை மாற்றும் ராகுல் காந்தி ஒண்ணும் அச்சு சொன்னது போல அமுல் பேபி மட்டும் கிடையவே கிடையாது