வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Tuesday, April 12, 2011

விஜயகாந்த் புலம்பலும், ஜெயலலிதா கதறலும்..


விஜயகாந்த் calling பண்ருட்டி Over..

யோவ் பன்னாட பண்ருட்டி உன் பேச்சை கேட்டு ஓட்டும் போச்சு, கத்தி கத்தி தொண்டையும் போச்சு..அந்த வடிவேலு காரை பார்க்கிங் பண்ணுற எடத்துல நம்ம ஆளுக பிரச்சினை பண்ணினதுனால இப்போ நம்ம டிக்கியை எங்கயேயும் பார்க் பண்ண முடியாத படி பண்ணிட்டாய்யா அந்த வடிவேலு பயபுள்ள.. தயவு செய்து நம்ம ஆபீஸ் முன்னாடி உள்ள "நோ பார்க்கிங்" போர்டை தூக்க சொல்லுயா.. யாரு வேணுமோ வரட்டும் வண்டிய விடட்டும்..

அண்ணாவோட ஆவி வந்து சொல்லிச்சுன்னு சொன்னத எந்த பாவி பயலும் நம்பாம போயிட்டாங்களே. தீவிரவாதிய புடிக்காலாம்னு பாகிஸ்தான் பார்டருக்கும் போக முடியாது.. ஏதோ ஒரு ப்ளோல சொன்னத எல்லாம் பெருசா நெனச்சு இந்த பயலுக நம்ம ராணுவத்தை கொச்சை படுத்துறேன்னு சொல்லி கேசை வேற போட்டுட்டானுங்களே..இன்னொரு சசிகலாவாக உருவாகி ஒரு உடாஸ் கம்பனி ஆரம்ப்ச்சி விட்ட காசையெல்லாம் புடிக்கணும்னு சொன்னாய்யா என் பொண்ட்டாட்டி அவ முகத்துல எப்புடி முழிப்பேன்.. நைனா நீ ஆட்சிக்கு வந்தா நான் தான் தளபதி, துணை முதலமைச்சருன்னு சொன்னாய்யா எம்புள்ள பிரபாகரன்.. நானாவது பயங்கர கறுப்பா இருப்பேன். அவன் கறுப்பா பயங்கரமா இருப்பானே , கிக் வேற என்னை விட ஓவரா பண்ணுவானே.. நான் என்ன செய்வேன்..

அதை விடுய்யா, என் மச்சான் சுதீஸ் எப்புடி எப்புடி எல்லாம் கொள்ளை அடிக்கலாம்ணு , எந்தெந்த ஏரியாவுல எல்லாம் பிளாட்டு போட்டு விக்கலாம்ணு பிளானே போட்டு வச்சிருந்தானே.. எதை பண்ணினாலும் பிளான் பண்ணி பண்ணணும்னு அதுக்கும் அந்த வடிவேலு டயலாக் தான் ஞாபகம் வருது.. படத்துலயாவது நடிக்கலாம்ணு பாத்தா ஊரு எல்லாம் சுத்தி சுத்தி இருந்த கிளாமரும்(???) போச்சு.. சரி உடு,, முருகதாஸ் தம்பி இருந்தா அவருக்கு ஒரு போனை போடு...ஏதாவது சான்ஸ் கெடைக்குமான்னு கேப்போம்..எல்லாம் சரி.. டாஸ்மாக் ரெண்டு நாளைக்கு மூடிருவாங்களே. பாட்டிலாவது வாங்கி வச்சியா??

 ஜெயலலிதா Calling சோ  over:

யோவ் மொட்டை சோ நீ எல்லாம் ஒரு மனுசனாய்யா, உன் பேச்சு கேட்டு இப்புடி குட்டிசெவரு ஆகிட்டேனே ,,ஒரு பாப்பன் இப்புடி ஒரு பாப்பாத்திக்கு துரோகம் செய்யலாமா??? உன்னை ஒரு அதி மேதாவின்னு நெனச்சு நீ சொன்ன பேச்சை கேட்டு வைகோவை துரத்தி விட்டதுனால அவராவது இலவு காத்த கிளியாகிட்டாரு.. நான் தேடி வந்த சீதேவிய எட்டி உதச்ச **தேவியாயிட்டேனே.. என்னால இன்னும் அஞ்சு வருசம் கொடநாட்டுல உக்காந்து குப்பை கொட்ட முடியாது..அந்த கருணாநிதியும், ஸ்டாலினும் திரும்பவும் கோட்டைக்கு போவாங்க , என்னை திரும்பவும் கொடநாட்டுக்கு அனுப்பி வச்சிட்டியே படு பாவி.. ஏற்கனவே என் கஜானா காலியா இருக்கு, இன்னும் அஞ்சு வருசம் எப்புடியா சமாளிப்பேன்.. அதுவும் அந்த கருணாநிதி ஒவ்வொரு மாசமும் தாயா (அம்மா) புள்ளையா பழகுன ஒவ்வொரு அ.தி.மு.க எம்.எல்.ஏவையும் உருவிடுவாரே நான் அவங்களை எல்லாம் எப்புடி காப்பாத்துவேன். நான் இங்க்லீஸ் பேசுற அழகை பாத்து இந்த வட நாட்டு பத்திரிக்கை காரன் எல்லாம் என்னை ரொம்ப ஒவரா போன தேர்தலில்யே பேசி எனக்கு புள்டப்ப் கொடுத்ததை உண்மைன்னு நெனச்சி மோசம் போயிட்டேனே.. ஒரு லட்டுக்கு பதிலா ரெண்டு லட்டு தாரேன்னு நான் சொல்லியும் மக்கள் கேக்காம போயிட்டாங்களே..அதுலயும் உன் பேச்சை கேட்டு ஒரு குடிகாரனை கூட்டணியில சேத்ததுனால மொத்த பேரும் காலி ஆகிடிச்சே.

ஹெலிகாப்டருல பறந்து பறந்து பிரச்சாரம் செஞ்சேன்.. ஹெலிகாப்டர பாக்க வந்த கூட்டத்தை என்னை பாக்க வந்ததா நெனச்சுட்டேனே.. கருடா கருடா பூப்போடு கருடா கருடா பூப்போடுன்னு கீழ நின்னு வேடிக்கை பாத்தவங்க எல்லாம் சொன்னாங்க.. எனக்கு அப்பவே மைல்டா ஒரு டவுட்டு வந்துது.. இப்புடி கடைசியில ஏமாந்திட்டேனே..விஜய் அப்பா சந்திரசேகருக்கு மது ஆலை வைக்க அனுமதி வாங்கி தருவேன்னு அவர ஏமாத்த அவருக்கிட்ட சொன்னத உண்மையின்னு நெனச்சு சசிகலா வேற அவளுக்கு போட்டிய் தொழிலா அவரு வந்துருவாருன்னு நெனச்சு எனக்கு ஆப்பு வச்சிருச்சே. ஓட்டுக்கு நின்னவங்க கூட ஜாதகத்தை ஆல்டர் பண்ணி குடுத்து என் கழுத்தறுத்துட்டாங்களே..

ம்ம் என்ன செய்யுறது.. கொட நாட்டுக்கு பெட்டிய கட்ட வேண்டியது தான்.. இனிமே நீ என் முகத்திலேயே முழிக்காதே.. அறிவாளியா என் வென்ரு..எனக்கு ஒரு வெங்கல கிண்ணம் கூட கெடைக்காத படி பண்ணிட்டியே மொட்ட..

11 comments:

அருள் said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

கக்கு - மாணிக்கம் said...

சொல்லமுடியாது, நிஜத்தில் அந்தம்மாவும், விசயகாந்தும் இப்படி பேசினாலும் வியக்க ஒன்றுமில்லை.

கக்கு - மாணிக்கம் said...

ஆனா. பயங்கர நக்கல் தான் :)))))

Anonymous said...

சோ வுக்குத் தலைக்கு மேலேயும் ஒன்னுமில்லை, தலைக்கு உள்ளேயும் ஒன்னுமில்லேன்னு புரிஞ்சுடுச்சு !இந்த ஆளெல்லாம் சும்மா சிரிக்க வைக்கும் கோமாளி. மக்களைப் பத்தி இந்த ஜென்மத்துக்கு என்னாய்யா தெரியும்.

Jabar said...

@கக்கு - மாணிக்கம் said...
'''சொல்லமுடியாது, நிஜத்தில் அந்தம்மாவும், விசயகாந்தும் இப்படி பேசினாலும் வியக்க ஒன்றுமில்லை''''' - நண்பா.... நம்புங்க.... இதெல்லாம் உண்மை...

யப்பா பாண்டி..... சூப்பர்...

Soundararajan said...

அண்ணே,
அப்படியே continue பண்ணுங்கண்ணே, நீங்களும் பெரிய ரவுடியாகலாம்.

Anonymous said...

என்னால நீ கெட்டே! உன்னால நான் கெட்டேன் .... !!! இப்படியே புலம்ப வேண்டியது தானா?

sammil said...

நான் பெரிய ரவுடி ஆனதை இன்னும் நமபலயா நீயி??

sammil said...

இக்பால் அண்ணே, அது அவிங்க விதி

Denzil said...

நல்லா சிரிச்சேன்! மே-13க்கு அப்புறம் மேல உள்ளது மட்டுமில்ல அதுக்கு மேலயும் நடக்கப்போவுது.

aadavan said...

இந்த விசயகாந்து கலைஞரோட ஆளுங்கறது அந்த பாப்பாத்திக்கும் தெரியல,அந்த மொட்ட பாப்பானுக்கும் தெரியல.

ஹி! ஹி! செம காமடியா கீதுபா