வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Friday, February 18, 2011

"கவுரவ" விரிவுரையாளர்களை வைத்து "கேவல" அரசியல் நடத்தும் ஜெ

"அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை தொடர்ந்து, கருணாநிதி வஞ்சித்து வருவதை பார்க்கும் போது, "சொல்வது ஒன்று, செய்வது ஒன்று' என்ற பழமொழி நினைவிற்கு வருவதோடு, கருணாநிதியிடம் அரசியல் காழ்ப்புணர்ச்சி மேலோங்கி நிற்பதும் தெளிவாகிறது. அனுபவம் வாய்ந்த கவுரவ விரிவுரையாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிதாக ஆசிரியர்களை நியமிக்கபோவதாக தி.மு.க., அரசு அறிவித்துள்ளது மிகுந்த வேதனையளிக்கும் செயல். கவுரவ விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர், 35 வயதை கடந்தவர்கள். இந்த வருமானத்தை நம்பி, திருமணம் செய்து குடும்பத்துடன் வசிக்கின்றனர்"

இதை சொன்னது யாருன்னு ரொம்ப யுகிக்க வேண்டாம்.. இதை சொன்னது சாட்சாத் ஜெயலலிதாவே தான்.. அதாவது அந்த அம்மாவுக்கு வீட்டுக்கு அனுப்புறதுண்ணா என்னவென்றே தெரியாதாம்.. இது வரைக்கும் யாரு வயத்துலையும் அடிச்சதே இல்லையாம்.

இந்த அம்மா ஆட்சி செய்த லட்சணம் தான் ஊருக்கே தெரியுமே..இது ஆட்சியிலே யாரை எல்லாம் பணி நிரந்தரம் ஆக்கிசுண்ணு கொஞ்சம் கேட்டு சொன்னா பரவாயில்லை.

எல்லாரையும் வீட்டுக்கு அனுப்புறதும், அப்புறம் டெஸ்மா, எஸ்மா அப்புறம் வேறு ஏதேதோ மா மட்டுமே தெரியும் இந்த அம்மாவுக்கு.. இப்போ தேர்தல் வர போகுது அப்படிண்ணு ஒரே காரணத்திற்காக யாரு எல்லாம் போராட்டம் நடத்துறாங்களோ அவங்களுக்கு ஆட்சியில வந்தவுடன் அனைத்தையும் செயிது கிழித்து விடுவேன்னு சவுடால் உட்டுட்டு திரியுது இந்த அம்மா.

போன பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் அப்படின்னு ஒரே காரணத்திற்காக தனி ஈழம் வாங்கி தருவேண்ணு சொன்ன இந்த அம்மாவால ஒரு இழவும் வாங்க முடியாது என்பதே நிதர்சன உண்மை.  எப்படியாவது , பொய்யையும் பித்தலாட்டத்தையும் செய்து , யாராரு என்னென்ன போராட்டம் நடத்துறங்களோ அவங்களுக்கு வலிய சென்று ஆதரவு தெரிவிக்கிறதே பொழுது போக்காக நடக்குது.இந்த விரிவுரையாளர்களுக்கும் , அரசியல் காழ்புணர்ச்ச்கிக்கும் என்ன சம்மந்தம்.?

ஆனா நம்ம நாட்டு மக்களும் கில்லாடிங்க தான்.. நேரம் பாத்து ஒவ்வொருத்தரா கோரிக்கைகளை (உக்காந்து யோசிப்பாங்களோ?) வைத்து தேர்தல் நெருங்குற சமயம் பாத்து போராட்டம் நடத்துனா தான் கேக்குறது கிடைக்கும்ணு  கௌதாரி கோழி பண்ணை முதலாளி முதல் கௌரவ விரிவுரையாளர்கள் வரை ஆளாளுக்கு கொடியையும் பேனரையும் எடுத்துட்டு கிளம்பிட்டாயிங்க..

அது போக இந்த அம்மா புதிய சட்ட சபைக்குள்ளேயே காலடி எடுத்து வைக்க மாட்டாங்களாம் காரணம் அதை கலைஞர் கட்டி தொலைச்சிப்புட்டாராம்.. பதவி பறி போயிடுங்கிறதுனால ஆறு மாசத்துக்கு ஒரு தடவை பழைய சட்ட சபைக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டுட்டு அலவன்சை வாங்கிட்டு நடைய கட்டுறது தான் இந்த அம்மாவோட வாடிக்கை.ஆனா இப்போ அதுக்கும் போக மாட்டாங்களாம், இருந்தாலும் பதவியும் போகக் கூடாது.யோசிச்சி பாத்துட்டு அந்த அம்மா ஒரு லீவு லெட்டர் எழுதிச்சே பாருங்க.
"As im suffering from fever and head-ache. Im unable to attend the classes today.So kindly grant me two days leave only" அப்படின்னு சின்ன பசங்க ஸ்கூலுக்கு போகாம கட் அடிச்சி கல்யாண விட்டுக்கு போயிட்டு மறு நாளு இப்படி தான் லீவு லெட்டர் கொடுப்பாங்க.அதே மாதிரி லெட்டர் எழுதி பன்னீர் செல்வத்துக்கிட்டே கொடுத்து அனுப்பி புதிய சட்ட சபைக்கு போகாம எப்புடியோ பதவியையும் காப்பாத்திடிச்சு. அதை விட கொடுமை என்ன அப்படிண்ணா அந்த லீவு லெட்டரையே சாக்கா வச்சு தனி நீதி மன்றத்துக்கும் போகாம டிமிக்கி குடுத்துடிச்சி.

கலைஞர் கட்டிட்டாரு அப்படிண்ணு சட்டசபைக்கு போக மாட்டிங்கண்ணா , நீங்க சென்னையில இருக்குற மேம்பாலங்களையும் யூஸ் பண்ண கூடாது.. அண்ணா மேம்பாலம் உட்படசென்னையில இருக்குற அனேக பாலங்களும் கலைஞர் ஆட்சியில கட்டப்பட்டது தான். ஆனா நீங்க அது மேல போகாம கீழே இறங்கி நடந்தா போறீங்க?
"அப்புடி கீழே இறங்கி நடந்து போனா உடம்புல உள்ள கொழுப்பாவது கொஞ்சம் கொறயுமில்ல"