வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Friday, April 1, 2011

வைகோவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் தினமலர்!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை, அ.தி.மு.க. தலைமையை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டு உள்ளது.
 
வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல்நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது.   அனல்வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க.வை பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.இவ்வாறு செய்தியை இட்டு தனது உள்ளகிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க தலைமை தன்னை ஏமாற்றி  விட்டதால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என வைகோ அறிவித்த உடனேயே அவரை "ஓட்டம்" என்று தலைப்பு செய்தியிட்டு புழங்காகிதம் அடைந்தது இந்த தினமலர்.. ஆனால் இப்போது ஏப்ரல் ஒன்றாம் தேதியை சாக்காக வைத்து தினமலரை படிக்கும் அத்தனை வாசகர்களும் முட்டாள்களே என்று சொல்லாத குறையாக இந்த செய்தியை இட்டு வாசகர்களை ஏமாற்றியது மட்டுமல்லாது வைகோவையும் அவமதித்திருக்கிறது.

 தினமலர் தனது முட்டாள் வாசகர்களை மேலும் முட்டாள் ஆக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் இதை விட நல்ல சூடான கட்டுகதைகளை தேர்வு செய்திருக்கலாம் அல்லது அதற்கு அந்த திறமை இல்லாவிட்டால் கீழ்கண்டவற்றில் ஏதாவது தேர்வு செய்து வெளியிட்டுருக்கலாம்.

 •  செல்வி ஜெயலலிதா கும்பகோணம் வழியாக ஓட்டு கேட்க சென்ற போது பழைய ஞாபகம் வந்ததால் அதே மகாமக குளத்தில் தொபுக்கடீர்னு விழுந்து ஸ்நானம் செய்தார்.. அம்மா குளிப்பதை ர.ரக்கள் அனைவரும் வேடிக்கை இட்டும் , கன்னத்தில் போட்டும் கொண்டனர்.
 • விஜயகாந்துடன் ஜெயலலிதா சமரசம். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராகவும், ப்ரேமலதாவை துணை முதலமைச்சராகவும் அறிவித்து விட்டு கோடநாட்டில் நிரந்தர  ஓய்வெடுக்கிறார் ஜெயலலிதா.
 •  விஜயகாந்த் குடிக்கும் போது ஊத்தி கொடுத்தது மட்டுமல்ல சைடிஸ்ஸும் தயார் செய்து கொடுத்தது நான் தான் என்று ஜெயா டிவியில் ஜெயலலிதா பேட்டி.
 • ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி மதுரைக்கு ஓட்டு வேட்டையாட வந்த போது அ.தி.மு.க மகளிர் அணியினர் சேலையை மீண்டும் தூக்கி காட்டி அமோக வரவேற்பு. 
 • சோ ராமசாமியும், விஜய் மல்லையாவும், மற்றும் ராஜபக்சேவும் சேர்ந்து கட்டாய படுத்தியதால் தான் வைகோவை வெளியேற்றியதாக ஜெயலலிதா ஒப்புதல்.
 •  ஜெயலலிதா அண்ணா நாமம் வாழ்க என்று சொல்லி அனைவருக்கும் பட்டை நாமம்.
 • தோழி சசிகலாவிற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று சொல்லி ஜெயலலிதா டூ விட்டார்.
 •  கஞ்சா புகழ் செரினாவை தனது வளர்ப்பு பேத்தியாக அறிவித்தார் ஜெ.
 • ஜெயலலிதா அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடையில் ஏற்றி பொதுக்கூட்டம்.
 • ஜெயலலிதா கருணாநிதியிடம் தோல்வியை ஒப்பு கொண்டு தேர்தலை விட்டே ஓட்டம்.
 • ஜெயலலிதா, ராஜபக்சே சந்திப்பு.. தமிழகத்திலும் மற்றும் இலங்கையில் மிச்சம் இருக்கும் தமிழர்களையும் ஒழிக்க கூட்டு சதி.
 • சோனியாவை பதி பக்தி இல்லாதவர் என்று சொன்னதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டார் ஜெயலலிதா.
 • நரேந்திர மோடியை வீட்டிற்கு அழைத்து விருந்து வைக்கவில்லை, வெறும் தயிர் சோறும், மாங்காய் ஊறுகாய் மட்டும் தான் கொடுத்ததாக இஸ்லாமியர்களிடம் ஜெ சத்தியம்.
 பதிவர்களே நீங்களும் இந்த போட்டியில் பங்கு பெற்று தினமலருக்கு மேலும் பல நல்ல ஐடியாக்களை கொடுக்கவும்..