வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Wednesday, March 23, 2011

கூட்டணி டென்ஷனை அடிதடியுடன் 'கொண்டாடிய' விஜய காந்த்

கூட்டணித் தலைமை கொடுத்த பெரும் டென்ஷனால் ஏகமாக பதறிப் போன விஜய காந்த் , அந்த டென்ஷனை தனது கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டியிடமும் , மச்சானிடமும் கடுமையாக காட்டியதால் கட்சியினர் ஆடிப் போய் விட்டனராம்.


சும்மாவே இந்த தலைவர் கடுமையான டென்ஷனானவர். சாதாரண விஷயத்திற்குக் கூட கடுமையாக கோபப்படுவார். இந்த நிலையில் முதல் முறையாக கூட்டணிக்குள் புகுந்த நேரமோ என்னவோ, கூட்டணியின் ஆரம்பத்திலேயே பெரும் பூகம்பம் வெடித்தது இவரை கடும் பதட்டத்தில் ஆழ்த்தி விட்டதாம்.

அதுவும் டிவியில் கூட்டணித் தலைமையின் வேட்பாளர் பட்டியலை பார்த்ததும் பதறிப் போய் விட்டாராம். கோபம் அதிகமாகியதால் அவர் கடும் பதட்டமடைந்து விட்டாராம்.

உடனே அருகில் இருந்த அந்த பன்ருட்டியாரை, இந்த வார்த்தைதான் என்று இல்லாமல் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி தாறுமாறாக திட்டித் தீர்த்து விட்டாராம். இத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த அத்தனை பெயரையும் கெடுத்து விட்டீர்களே என்று ஒருமையில் திட்டித் தீர்த்தாராம். அவர் பயன்படுத்திய வார்த்தைகளில் பல நல்ல வார்த்தைகளாம்.

அருகில் இருந்த மச்சான் சுதீஸ் சமாதானப்படுத்த முயன்றபோது பளாரென ஒரு அறை விட்டு ஓரமாப் போ என்று கத்தி விட்டாராம். இந்த கடும் கோபத்தால் பிளட் பிரஷர் அதிகமாகி டாக்டரைப் பார்த்து மருந்து வாங்கிக் கொடுத்துள்ளனராம் குடும்பத்தினர்.

கூட்டணிக்குக் கூட்டிப் போய் தனது பெயரை கெடுத்து விட்டாரே என்ற கோபத்தில்தான் அவர் எளிதாக வென்றிருக்கக் கூடிய தொகுதியைக் கொடுக்காமல், சென்னைக்கு அருகே படு கஷ்டமான தொகுதியைக் கொடுத்து விட்டாராம் விஜய காந்த் . மேலும் வேட்பாளர் பட்டியலில் கடைசிப் பெயராகத்தான் அந்த பன்ருட்டி  பெயரைப் போட்டும் டென்ஷனாக்கியுள்ளார்.

ஐ.நா. சபைக்கெல்லாம் போய் வந்தவராச்சே பன்ருட்டி . மிக மிகப் பெரிய தலைவர்களுடன் எல்லாம் பழகிய பழகி , எம். ஜி, ஆரையே ஏமாத்தியவராச்சே  அவரை இப்படியெல்லாமா திட்டுவார் இவர் என்று அரசியல் வட்டாரத்தில் பரிதாப கேள்விகள் எழுந்துள்ளன.

நன்றி : தட்ஸ்தமிழ்