Thursday, March 3, 2011

மானம் காக்கப் புறப்பட்டு மானமிழந்த கதை!

சமுதாயத்தின் மானத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு நாங்கள் தான் எடுத்து வைத்துள்ளோம் என பில்டப் கொடுத்த மானம் காக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள் அ.தி.மு.க போட்ட 3 தொகுதி பிச்சை சீட்டுக்களை வாங்கிக் கொண்டு மானமிழந்து வேறு வழயின்றி உலக ஆதாயத்திற்காக சில எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டிக் கொண்டு நிற்கின்றனர். இவர்கள் மானம் காக்க புறப்பட்ட வரலாற்றையும், இப்போது மானமிழந்து நிற்கும் அசிங்கத்தையும் தற்போது நாம் அசைபோட்டுப் பார்க்கலாம்.
ம.ம. கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கம்:
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற்காகத் தான் ம.ம.க.வே தொடங்கப்பட்டுள்ளது என்று தங்களது அதிகாரப்பூர்வ இதழில் அறிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிக்கத் தான் ம.ம. கட்சி தொடங்கப்பட்டது என்றால் தற்போது சட்டமன்ற தேர்தலில் வெறும் 3 தொகுதிகளைப் பெற்றுள்ளனர்.
அதாவது, ஒரு பாராளுமன்றத் தொகுதி என்பது ஆறு சட்டமன்ற தொகுதிகள். ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இணைந்தது தான் ஒரு பாராளுமன்றத் தொகுதி என்ற அடிப்படையில் குறைந்த பட்சம் ஒன்றுக்கு மேற்பட்ட பாராளுமன்ற தொகுதிகளைப் பெற்றாக வேண்டும் என்ற இவர்களது கட்சி துவங்கப்பட்ட நோக்கத்தின் அடிப்படையில் 12 தொகுதிகளையாவது பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் அரை எம்.பித் தொகுதிக்கு நிகரான 3சட்டமன்றத் தொகுதிகளை அ.தி.மு.க விடம் வாங்கி கேவலப்பட்டுள்ளனர்.
உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா:
தமிழில் ஒரு பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. ”உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா”
இவர்களை தற்போது நினைத்தால் இந்தப் பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகின்றது. தி.மு.க அணியில் தந்த ஒரு எம்.பி சீட்டை நாங்கள் வாங்க மாட்டோம். எங்களுக்கு சமுதாய மானம் காப்பது தான் முக்கியமே தவிர, இந்த சீட்டுக்கள் தேவையில்லை என வீராப்பு பேசியவர்கள் தற்போது அதை விடக் குறைவான சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்று கேவலப்பட்டுள்ளார்கள் என்றால் உள்ளதையும் இழந்து நிற்கும் இவர்களை என்னவென்பது?
இது தான் பயங்கரமான(?) ராஜ தந்திரமாம்:
“உள்ளதும் போச்சுடா நொல்லைக்கண்ணா” என்று கேவலப்பட்டு நின்றாலும் பிலடப்புகளுக்கு மட்டும் இவர்களிடத்தில் குறை இருக்காது.
தொகுதி குறைவாகத் தான் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு கண்ணில்லாத கலகக்கார கண்மணிகளுக்கு வாத்தியார் எழுதிய வரிகளைப் பாருங்கள்:
கண்மணிகளே…!
தேர்தலில் நாம் எத்தனைத் தொகுதிகளை பெறப் போகிறோம்? என அனைவரும் கேட்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக தலைமையுடன் பேசி வருகிறோம். தொகுதி எண்ணிக்கைகளில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம். நாம் நினைத்ததை விட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம். அரசியல் ராஜதந்திரத்துடன் நாம் அணுக வேண்டியுள்ளது.
3தொகுதிகளை வாங்கி கேவலப்படுவது எதற்கென்றால் அது தான் ராஜ(?)தந்திரமாம். உங்க பில்டப்புகளுக்கு ஒரு அளவில்லையா?
நாம் நினைத்ததை விட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம்
என்று கூறி தங்களது கேவலத்தனத்திற்குத் தங்களையே சாட்சிகளாக ஆக்கியுள்ளனர். இவர்கள் உண்மையான தைரியசாலிகளாக இருந்தால் எத்தனை தொகுதியை நாங்கள் அதிமுக விடம் கேட்டோம் என்பதை இவர்கள் அறிவிக்கத் தயாரா?
மேற்கண்ட வாசகங்களில்,
நாம் நினைத்ததை விட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாகவும் கிடைக்கலாம் என்று இவர்கள் குறிப்பிட்டதிலிருந்து இவர்கள் அதிமுக தலைமைக்கு பயந்து கொண்டு, எங்களுக்கு மொத்தம் 4தொகுதி, அல்லது 5தொகுதி வேண்டும் என்று வாய் திறந்து கேட்டால் எங்கே அதிமுக தரப்பு தங்களை கூட்டணியிலிருந்து கலைஞர் விரட்டியடித்தது போல விரட்டிவிட்டால் என்ன செய்வது என்று பயந்து கொண்டு நீங்கள் எத்தனை தொகுதி தருகின்றீர்களோ அத்தனை தொகுதியைத் தாருங்கள். நாங்கள் நினைத்த தொகுதியையும் தாருங்கள் அல்லது அதுக்கு மேலேயும் தாருங்கள் அல்லது அதுக்கு கீழேயும் தாருங்கள் என்று கேட்டதற்கு ஆதாரமாக மேற்கண்ட வாசகங்களை வெட்கமில்லாமல் கண்மணிகளுக்கு கடிதமாகவும் எழுதுகின்றார்கள் என்றால் இவர்கள் தான் மானம் காக்க புறப்பட்டவர்களா?
திரும்பவும் கேட்கின்றோம், இவர்களுக்கு உண்மையிலேயே மானம் இருக்குமேயானால், இவர்கள் உண்மையான தைரியசாலிகளாக இருந்தால் எத்தனை தொகுதியை நாங்கள் அதிமுக விடம் கேட்டோம் என்பதை இவர்கள் அறிவிக்கத் தயாரா? தாங்கள் இத்தனை தொகுதிகள் தான் கேட்டோம் என்பதைக் கூட வெளியே சொல்லத் திராணியற்றவர்கள் தான் சமுதாய மானம் காக்கப் போகிறார்களா?
தங்களது மானத்தையே காக்க வக்கில்லாத இவர்கள் சமுதாயத்தின் மானத்தை எப்படிக் காக்கப் போகிறார்கள் என்று மக்கள் கேட்கும் கேள்வி நம் காதில் விழுகிறது. இது இந்தத் தேர்தலில் இவர்களுக்கு எதிரான வாக்குகளாக மாற மானமுள்ள ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால் மானம் என்ற ஒரு சொல்லுக்கே எந்த அர்த்தமுமில்லாமல் போய்விடும்.