வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Thursday, April 14, 2011

கிரிக்கெட் உலக கோப்பை: வண்டு முருகன் கண்டனம்!

ஏப்பிரல் 15 : இ.கு.க கட்சி வண்டு முருகன் கண்டன அறிக்கை.

எங்கள் இ.கு.க கட்சியின் விளையாட்டு அணியை சேர்ந்த அருமை தம்பி புள்ளட் பாண்டி அவர்கள் உழைத்து போராடி வென்று உலக கோப்பையை வாங்கிய படத்தை தோனி வாங்கிய மாதிரி எடிட்டிங் செய்து இணையங்களிலும், சமூக இணைப்பு வலையங்களிலும் விசமிகள்  வெளியிட்டுருக்கிறார்கள். ICC யிடமிருந்கு தோணி வாங்கியது அசல் உலக கோப்பையே இல்லை என்று ஏற்கனவே நடு நிலைவாதிகளும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். நமது கழக தம்பி புள்ளட் பாண்டி தான் அசல் கோப்பையை வாங்கியது என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்களுக்கு எங்கள் கட்சி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


(படத்தை ஜூம போட்டு பார்க்க படத்தை சொடுக்கவும்)

நீங்கள் மேலே உள்ள படத்தை சற்று  உற்றுநோக்கினாலே அவர்கள் செய்திருக்கும் கிராபிக்ஸ் வித்தை தெரிய வரும்.. தோணியின் தலையை மொட்டை அடித்தது போல் காண்பித்து நன்றாக பொருந்தும்படி செய்திருக்கிறார்கள். நாங்கள் புள்ளட் பாண்டி அவர்கள் கோப்பையுடன் இருக்கும் படத்தை ஏற்கனவே காபிரைட் செய்து விட்டோம். ஆனால் காபிரைட் கன்பார்ம் ஆகாமல் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதால் யாரும் இந்த படததை தவறாக பயன்படுத்த வேண்டாம். இதே படத்தை வைத்து சச்சின், யுவராஜ், காம்பிர், சிங்க் , பதான்  மற்றும் பலர் தங்கள் மூஞ்சிகளை  ஒட்டி வைத்து அழகு பார்பதாகவும் எங்கள் உளவுபிரிவு கண்டு பிடித்திருக்கிறது. இதன் மூலம் தோணி வாங்கியது டூப்ளிகேட் என்று தற்போது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

கிராபிக்ஸில் தகிடுத்தம் செய்யும் வேலையை இத்துடன் நிறுத்தி கொண்டு எங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கா விட்டால் எங்கள் கழக வழக்கறிஞர் அணி  மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்படிக்கு
வண்டு முருகன்.
வட்ட செயலாள்ர்.
ங்கொய்யா சொரிவாலயம்
இ.கு.க தலைமை கழகம்


6 comments:

Soundararajan said...

//நடு நிலைவாதிகளும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்//
நடுநிலை நாளேடுகள் என்பதை மறந்துட்டிங்களே...

Soundararajan said...

//காபிரைட் கன்பார்ம் ஆகாமல் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதால் யாரும் இந்த படததை தவறாக பயன்படுத்த வேண்டாம். //
அண்ணே, எதாவது செய்து உடனே காபி வாங்கி கொடுங்கண்ணே... நான் காபி குடிச்சு ரொம்ப நாளாச்சு...

Soundararajan said...

இதே படத்தை வைத்து சச்சின், யுவராஜ், காம்பிர், சிங்க் , பதான் மற்றும் பலர் தங்கள் மூஞ்சிகளை ஒட்டி வைத்து அழகு பார்பதாகவும் எங்கள் உளவுபிரிவு கண்டு பிடித்திருக்கிறது.
If you don't mind, can i have one snap please... ya, it is me...

@gpradeesh said...

வ.செ.வண்டுமுருகனின் கண்டனங்கள்! ரசிக்க, சிரிக்க நல்ல தளம்! http://padithuraipandi.blogspot.com

I have recommended it to my Twitter friends.

@gpradeesh (Twitter id)

படித்துறை பாண்டி said...

Thank you gpradeesh

படித்துறை பாண்டி said...

சௌந்தர் அவர்கள் எங்களின் கழக கணினி அணியினரை தொடர்பு கொண்டு காபி பெற்று கொள்ளலாம்