வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Tuesday, February 1, 2011

உலக கோப்பையும் , இந்தியாவை உசுப்பேத்தலும்.

கடந்த பத்து வருசமா எப்போ உலக கோப்பை கிரிக்கெட் நடந்தாலும் , இந்தியா தான் கோப்பையை வெல்லும்னு கோப்பைய செய்யிறதுக்கு முன்னாடியே எல்லாரும் சொல்லுறது தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கு..

இந்தியா தான் கோப்பையை வெல்லும்னு , தென் ஆப்ப்ரிக்கா கேப்டன் ஸ்மித் மட்டுமல்ல , துனுஷியா கால்பந்து கேப்டன் கரிம் ஹக்குயி வரைக்கும் சொல்லுறதுல இருந்து இதுலே ஏதோ உட்குத்து இருக்குமோண்ணு தோணுது..

நம்ம ஆளுங்க தெறமசாலிங்க தான்.. ஆனா புலிகேசி மாதிரி ஓவறா அவனுங்களை  புகழ்ந்தா கோட்டை விடுறதுலையும் நம்ம ஆளுங்க கெட்டிகார பயபுள்ளைங்க..

இவிங்க தான் Upper Dog (அதாங்க Under Dog க்கு opposite) ண்ணு ஓவரா சீன போடும் போதே இந்த பயலுக ஜாக்கிரதையா இருக்கணும்.இவங்கள இப்புடி உசுப்பேத்தினா , மெத்தனமா களத்துக்கு வருவயிங்க  ஈசியா அவனுங்கள அடிசிபுடலாம்ணு ஆப்பிரிக்கா கண்டத்துல மட்டுமில்லாம ஆஸ்திரேலியா கண்டத்துலயும் கூட கங்கணம் கட்டிடு கதய உட்டுட்டு திரியிராணுங்க இந்த சூனா பானாக்கள்..

சேவாக்கு புரட்டி புரட்டி அடிப்பாரு,
யுவராஜு அடிச்சு அடிச்சு புரட்டுவாரு,
சச்சின் நெறய சாதனைகளை செய்வாரு,அவர வீழ்த்துரது ரொம்ப குஸ்டமப்பா,
பதான் எதிரிங்கள பதம் பாப்பாரு...
ரையினா ரெயின் வந்தா கூட வின் பண்ண வச்சுருவாரு,
தோணி தான் இந்தியா உலக கப் வாங்குறதுக்கு உதவுற தோணி,
விராட் கோழிய கிரவுண்ட  விட்டு விரட்டுறதுல நெறய சிக்கல்

அப்ப்டி இப்படிண்ணு ஏகத்துக்கு புள்டப் மற்றும் ஓப்பணிங்  சாங் போடாத கொறயா புகழ்ந்துட்டு திரியுறானுங்க.. நாம தான் சாக்கிறதயா இருக்கோணும்..

நம்ம் ஆளுங்க போன உலக கோப்பை போட்டிக்கு West Indies போனப்ப , இவிங்க கோப்பயோட தான் வருவாயிங்கண்ணு எல்லாரும் உசுப்பேத்தினாயிங்க..அத நம்பி நான் கூட 100$ கொடுத்து StarHub Cricket Package Subscribe பண்ணி ,  காசையும் இழந்து , உறக்கத்தையும் இழந்தது வேறு கதை.

நம்ம ஆளுங்க முதல் ரவுண்டிலேயே பங்க்ளாதேஷிடம் மண்டி இட்ட பிறகும், ரெண்டாவது போட்டியிலே அடிச்சானுங்க பாருங்க 413 ரன்.. ஆனா அடி வாங்கினது யாரு தெரியுமா பெர்முடாஸ்..அவங்க நாட்டோட அளவே பத்து கிரிக்கெட் கிரவுன்டு அளவுக்கு தான் இருக்கும்.. தாயில்லா புள்ளய போட்டு இந்த அடி ஈவு இரக்கம் இல்ல்லாம அடிச்சிட்டு , அப்புறம் அவங்க இலங்கையை ஜெயிக்க மாட்டாங்களாண்ணு நப்பாசயோட ஊருக்கும் கிளம்பி வராமா , அடுத்த ரவுண்டுக்கு போக ஆசை பட்டு , அவிங்க ஆடுற மேட்சை வெட்கமே இல்லாம West Indies  ல் 5 ஸ்டார்  ஹோட்டலில் உட்காந்து பாத்த கதையும் உண்டு. 


இன்னுமாட நம்மள இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு.. பக்கி பயபுள்ளைங்க இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே கப்பை ஜெயிக்கிறதென்ன , அடுத்த ரவுண்டு தாண்ட விட மாட்றாங்கன்னு கைப்புள்ள லெவலுக்கு ஆங்க்க்க்க்க்க்க்க் வைக்கிறதும் காதுல விழுது.

நீங்க தீயா எறங்கி வேல செய்து , உலக கோப்பை வின்னரா ஆகணும்டா ஆகணும்னு நாங்களும் எதிர் பாக்குறோமுங்க.