வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Friday, April 30, 2010

இந்த சலுகை ஏன் நித்தியானந்தாவுக்கு மட்டும் ?

நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்தாராம்.. உடனே அவரை பெண்கள் சிறையில் அடைச்சிட்டாங்களாம்.தாங்க முடியலடா சாமி ..

ஆமா எனக்கு ஒரு சந்தேகம்.. சிறையில் இருக்கும் நித்தியானந்தாவுக்கும் , கற்பழிப்பு குற்றம் செஞ்சு ஜெயிலுக்கு போனவனுக்கும் என்ன வித்தியாசம்..ஒருத்தன் எல்லாரையும் கற்பழிச்சிட்டு போலீசுகிட்ட மாட்டினா உடனே தான் ஒரு ஆம்பள இல்லைன்னு சொன்னா உடனே அவனை பெண்கள் சிறையில் அடைச்சுருவாங்களா ?

அட ஒரு வேளை அவன் ஆம்பளையா இல்லைன்ன சரி.. ஆனா ஒரு வேளை அவன் ஆம்பளைன்னா என்ன செய்வாங்க ? அவனோட மருத்துவ பரிசோதனை முடிவு தெரியும் வரை அவனை பெண்கள் சிறையில் வைத்திருந்தால் அவன் அங்கே இருக்கும் பெண்க்களை கற்பழிக்க மாட்டாண்ணு என்ன நிச்சயம் ?

சாதாரணா ரவுடியா இருந்தா கூட பரவாயில்லை கற்பழிச்சுட்டு போயிருவான்..அதோட முடின்ச்சுது.. ஆனா இந்த நித்தியானந்தா ஒப்பந்தம் போட்டு இல்ல் கற்பழிப்பான்.. "ஆன்மா விடுதலை பெற நிர்வாணமும் , உடலுறவும் முக்கியம்ணு எழுதி வாங்கி கற்பழிச்சவன் சிறையில் இருப்பவர்களிடம் "சிறையில் இருந்து விடுதலை பெற அதே நிர்வாணமும் , உடலுறவும் முக்கியம்ணு எழுதி வாங்கி கற்பழிக்க மாட்டான்னு என்ன நிச்சயம்.

அதெல்லாம் சரி.. அந்த பெண்கள் சிறையில் இருப்பவர்களுக்கு இவன் அங்கே இருப்பதால் வடிவேலு சொன்ன மாதிரி "சங்கடமா இருக்காது?".. சிறையில் இருந்தாலும் சிலருக்காவது மானம் , வெட்க்கம் இல்லாமலா போயிருக்கும் ?

அவன் ஆம்பளையா இல்லையான்னு பாக்குறது எப்படின்னு ஒரு நிமிஷத்துலெ கண்டு பிடிக்க ரெண்டு வயசான குழந்தைக்கே தெரியும்... அப்படி இருக்க , அவனுக்கு மருத்துவ பரிசோதனை செஞ்சு முடிவு தெரியற வரைக்கும் அவனை பெண்கள் சிறையில் அடைக்கலாமா ? அவன் பெண்கள் சிறையிலேயே ஒரு ஞான பீட கிளை ஆரம்பிக்கிர வரைக்கும் அவனை அங்கேயே வச்சிருக்க போறாங்களா ?

அவன் தன்னை தண்டனையிலிருந்து தப்பிக்க கண்டு பிடிசச ஒரு வழி தான் இது.. இதை கூட தெரிஞ்சிக்காம அவன் சொல்லுறதை எல்லாம் எப்படி இந்தா போலீசுக்காரங்க நம்புராங்க ?

எனக்கு என்னமே அவன் மேலும் மேலும் தப்பு செய்ய இந்த காவல் துறையும் துணை போகுதோன்னு தோணுது..அவனுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை ? அதன் ரகசியம் தான் என்ன ?

மேல இருந்தா அது நெஞ்சு , கீழ இருந்தா அது ..ஞ்சுன்னு முடிவு பண்ணுறத விட்டுட்டு , பெருச்சாளிய உள்ளே வச்சு கட்டு சோத்த கட்டுன கதையால்ல இருக்கு..

நல்ல வேளை.. அது காலியான் சிறையாம்..

4 comments:

Babu said...

//நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்தாராம்.. உடனே அவரை பெண்கள் சிறையில் அடைச்சிட்டாங்களாம்.தாங்க முடியலடா சாமி ..
அவனுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை ? அதன் ரகசியம் தான் என்ன ? //
விவரம் தெரியாம உளறக் கூடாது. 15 நாள் போலீஸ் காவல் அனுமதி முடிஞ்சதுன்னா சிறைக்குத்தான் அனுப்புவாங்க. அப்புறம் தேவைப்பட்டா நீதிமன்றத்துல உததரவு வாங்கி திரும்ப போலீஸ் காவல்ல எடுத்து விசாரிக்கலாம்.

sammil said...

பாபு அண்ணே மன்னிக்கணும்.. எங்களுக்கும் தெரியும்.. நித்யானந்தாவை பெண்கள் சிறையில் அடைப்புன்னு பத்திரிக்கையில் செய்தி படிச்சீங்களா ?

Anonymous said...

Women cell was empty it seems. Anyhow, it is certainly stupid.

Soundararajan said...

தினமலர் செய்தி:
------
ராம்நகர் கிளைச் சிறையில் பெண்களுக்காக உருவாக் கப்பட்ட பகுதியில், நித்யானந்தா அடைக்கப்பட் டுள்ளார். ராம்நகர் கிளைச் சிறையில் இதுவரை பெண்கள் பகுதி எதுவும் கிடையாது. முதன் முறையாக குற்றம் செய்யும் பெண் களை சிறையில் அடைப்பதற் காக, தனி பகுதி உருவாக்கப் பட்டிருந்தது. இந்த தனி சிறையில் தான், நித்யானந்தா அடைக்கப்பட்டார். பாதுகாப்பு நலன் கருதி, ஆண்கள் அடைக்கப்பட்டிருக் கும் சிறை பகுதியில் அவர் அடைக்கப்படவில்லை. நித்யானந்தாவுக்கு சிறையில் வி.ஐ.பி., அந்தஸ்து எதுவும் வழங்கப்படவில்லை. சாதாரண நபர் போன்று தான் கையாளப்பட்டார்.
--------
//பாதுகாப்பு நலன் கருதி, ஆண்கள் அடைக்கப்பட்டிருக் கும் சிறை பகுதியில் அவர் அடைக்கப்படவில்லை.//
கேள்வி: யாருடைய பாதுகாப்பு கருதி?