Tuesday, February 15, 2011

DRDO-வின் கொசுவை கொல்லும் நவீன இயந்திரமும் , ISRO- வின் தொடரும் SORROW வும்.

தலைப்பை பார்த்து நான் ஏதோ வடிவேலு படத்துல வரக்கூடிய காமெடிய பண்ணுறேண்ணு தயவு செயிது நின்ச்சிராதிங்கப்பு.நம்ம வடிவேலு கொசுவை கொல்லும் நவீன இயந்திரத்தை , செய்முறை விளக்கங்களுடன் ரோட்டோரமா நின்னு வித்துக்கிட்டு இருப்பாரு,அதை சிங்கமுத்துவிடம் கேட்லாகை வச்சி செய்து காட்டி அடிவாங்குவது காமெடி.. ஆனா நான் இங்கே சொல்ல வந்தது அந்த நவீன இயந்திரத்தை பத்தி அல்ல.

நான் இஙகே சொல்ல வந்தது Defence Research and Development Organisation(DRDO) சமீபத்துல கண்டு பிடிச்சிருக்கிற நவீன கொசுவை கொல்லும் வெப்பனை பத்தி..

இது வரைக்கும் மிஸ்ஸைலையும் , ராணுவத் தளவாடங்களையும் மட்டுமே செஞ்சி செஞ்சி அலுத்து போன நம்ம DRDO ஒரு சேஞ்சுக்காக மக்களோட பழைய பரம எதிரியான மலேரியாவை பரப்பும் கொசுக்கிட்டேருந்து மக்களை காப்பாத்துறதுக்கு   ஒரு கிரீமை கண்டு பிடிச்சுருக்காங்க... இந்த கிரீமோட பேரு 'Maxo Military' and 'Maxo Safe & Soft Wipes'.

இந்த கிரீமை உடம்புல பூசிட்டீங்க அப்படின்னா இது பரப்பக்கூடிய மணம் , இந்த அரசியல்வியாதிங்க மக்களையும் , நீதியையும் ஏமாத்துற மாதிரி அந்த கொசுவையே ஏமாத்துறது மட்டுமில்லாம , கிரீமோட molecules அந்த கொசுவோட sensory mechanism துலேயே புகுந்து அந்த கொசுவை குழப்பி நம்மள அது கடிக்க விடாம பண்ணிருமாம்.. என்ன ஒரு ஏமாற்று வித்தை..பக்கத்துல இருக்கிற மனுசனோட இரத்த வாடையே தெரியாத படி இந்த ஜெல் அந்த கொசுவை அநியாயமா ஏமாத்திப்புடுமாம்..


இந்த ஜெல்லை நம்ம ஆர்மி காரங்க காட்டுக்குள்ளே போகும்போது  கொசுகிட்டேயிருந்து அவங்கள காப்பாத்திக்க தடவிக்க போறாங்களாம்.. எல்லாம் சரி, தப்பு செய்யுறவனும் , நாட்டுக்கு கேடு பண்ணுறவ்னும் ஊருக்குள்ளே Tortoise ,  ALL-OUT போட்டு சுத்திகிட்டு இருக்கும்போது இவனுங்க யார புடிக்க காட்டுக்கு போறானுங்க , அதுவும் இந்த கிரீம வேற தடவிக்கிட்டு  ??
DRDO ஆயுதம் ஆய்தமா செஞ்சி செஞ்சி வச்சிருந்தாலும் , அதை எப்போ பயன்படுதுவாங்கண்ணே தெரியாது.. அதுனால தொழிலை மாத்தி நாலு காசு சம்பாதிக்கலாம்ணு முடிவு செஞ்சுட்டாங்களோ என்னமோ. வெளி சந்தையில mosquito repellent ஜெல்   36 ரூபாயா இருந்தாலும் நம்ம DRDO  தயாரிக்கிற இந்த ஜெல் வெறும் 3 ரூபாயிக்கு கிடைக்குமாம்.

ஏதோ ஒரு வ்ழியா நம்ம DRDO தொழிலை மாத்தி அவங்களுக்கு தெரிஞ்ச குடிசை தொழில் செய்யிர லெவலுக்கு வந்துட்டாங்க நல்ல விசயம் தான்.. ஆனா இந்த ISRO?

அவங்க கடைசியா விட்ட 7 GSLV ராக்கெட்டுல ரெண்டு மட்டும் ஏதோ வெற்றி கிடைச்சிருக்கு, மூணு ராக்கெட் கிளம்புன வேகத்துலயே புஸ்வானம் ஆகிடிச்சு..  ரெண்டு தடவை அனுப்புனதுலே பாதி வெற்றிண்ணு சொல்லிக்கிறாங்க.

10 ஜூலை 2006ம் தேதி  GSLV-F02 வை  அனுப்பினா அது ஒரே நிமிடத்துல ராக்கெட்டும் சாட்டிலைட்டும் மொத்தமா வங்க கடலில விழுந்துடிச்சு.

02 செப்டம்பர் 2007 ஆம் தேதி  GSLV-F04 வை  அனுப்பினா அது அவிங்க சொல் பேச்சு கேட்காம அதிகபிறசங்கித்தனமா ஆர்பிட்டையும் தாண்டி போயிடிச்சு.

15 ஏப்பிரல் 2010 ஆம் தேதி  GSLV-D3 வை  அனுப்பினா அது சொங்கி ஆகி ஆர்பிட்டுக்கு பக்கத்துலே கூட போகாமா புஸ் ஆகிடிச்சு..

25 டிசம்பர் 2010 ஆம் தேதி  GSLV-F06  வை  அனுப்பினா அது சொல் பேச்சு கேட்காம கண்ட்ரோலும் போனதுனால நம்ம ஆளுங்களே அதை அழிச்சிட்டாங்க..இப்புடி போவுது நம்ம ஆளுங்க உடுற ராக்கட்டோட கதை.இவனுங்களை ஒழுங்கா டெஸ்ட் பண்ணாம அவசர கதியில யாரு ராக்கட் அனுப்ப சொன்னது..

எனக்கு ஒண்ணு மட்டும் புரியவே இல்லை.. அது எப்புடி ISRO சேர்மேன் மட்டும் 1994 ல இருந்தே மலையாளிகளா இருக்காங்க.கஸ்தூரி ரங்கனில் தொடங்கி இப்போது இருக்கிற ராதாகிருஷ்ணன் வரைக்கும் கேரளத்துலே பிறந்தவைங்க.
ISRO சேர்மேன் ஆகணும்ணா கேரளாவில் பிறந்திருக்க வேண்டுமென்பதும் எழுதப்படாத தகுதியா இருக்குமோ. ISROவை கேரளாவின் தறவாட்டு (அதாங்க குடும்ப சொத்து) சொத்தாகவே ஆக்கிட்டாங்களா? இதுக்கும் ராக்கட் புஸ்வானம் ஆகுறதுக்கும் ஒரு முடிச்சி போட நான் விரும்பல..ஆனா  இந்தியாவில இவங்கள விட்டா தகுதியான் ஆளே கிடையாதா ?

இது இப்புடி போகுதுண்ணா நம்ம நாட்டோட வெளி உறவு செயலாளராக இருக்கணும்ணாலும் மலையாளிங்கிற தகுதி தேவைப்படுது.MK நாராயணனில் தொடங்கி இப்போது உள்ள நிருபமா ராவ் வரைக்கும் கேரளவாசிகள். அவங்களை தான் இலங்கைக்கு அனுப்பி தமிழனுக்காக பேச சொல்லுவாங்க..

கேரளாவை சேர்ந்த வயலார் ரவி தான்  Minister of Overseas Indian Affairs and Minister of Civil Aviation.AK அந்தோணி தான் Minister of Defence.

இப்படியாக வெளிநாட்டு சமாச்சாரம் ஆனாலும் சரி, விண்வெளி சமாச்சாரம் ஆனாலும் சரி அதுல மலையாளிங்களை தான் உயர்பதவியிலே போடுறாங்களே அது ஏண்ணு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கப்பா. அவனுங்களோட முப்பாட்டனா இருப்பாரோ இந்த ஆரியபட்டா? 


இப்படியே போனா DRDO கொசு மருந்து கண்டுபிடிச்ச மாதிரி , ISRO வும் உடுற ராக்கட்டு தான் வேலைக்காகல அதுனால கெட்டு போகாத கப்பை கிழங்கும், தென்னங்கள்ளையும் கண்டு பிடிச்சி பாக்கட்டுல அடச்சி விக்க போறாங்க.

தவறேதேனும் இருந்தால் மன்னிக்கவும், நானும் மலையாள கரை வாசி தான்.. உங்கள் பொன்னான கமெண்டுகள் ப்ளீஸ்..

"செட்டன்மாரே கொரச்சி கொமென்ட அடிசிட்டு போகு"










6 comments:

சக்தி கல்வி மையம் said...

நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றிகள்...

சக்தி கல்வி மையம் said...

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
இனி தினமும் வருவேன்.
ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

Remove Word verification...

ramesh said...

சிவகாசியில இதுக்கு பதில் இருக்குமா. நாம் கேட்டு பாக்கலாம்.(ராக்கெட் தயாரிக்க)

Soundararajan G said...

என்ன இப்படி சொல்லீட்டீங்க, SWIZZ Army மாதிரி நாங்களும்... அப்படின்னு காட்டிக்க வேண்டாமா? அப்பறம் எப்படி வல்லரசு ஆகுறது?
மலையாளிஸ் ஒரு இடத்தில் வந்துட்டால், அப்பறம் வேற ஆள் வரவிடமாட்டார்கள். அது TEA கடையா இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவா இருந்தாலும்...

ஒன்னு மட்டும் நிச்சயம், இவனுங்கல்லாம் நல்ல கதிக்கு போக மாட்டனுங்கோ; முற்பகல் செய்யின்.....
எனக்கு இருக்கும் வருத்தமெல்லாம், தமிழ் நாட்டு மக்களைபத்திதான். எவ்வளவு அடிச்சாலும் தாங்கரானுக.

Jayadev Das said...

//மலையாளிஸ் ஒரு இடத்தில் வந்துட்டால், அப்பறம் வேற ஆள் வரவிடமாட்டார்கள். அது TEA கடையா இருந்தாலும் சரி, அல்லது வேறு எதுவா இருந்தாலும்...// 100% Correct. Examples: Avadi Beerangi Factory and KK Nagar Kendriya Vidyalaya [now they call it as Kerala Vidyalaya.. haa..ha...haa..]

Anonymous said...

Best example is chennai airport..most of them are keralites in capital of tamilnadu airport.