வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Sunday, March 20, 2011

கலைஞர் வந்து தருவாருன்னு அம்மா சொல்லுறாங்க!!


நான் பள்ளி கூடம் போறச்சே , ஆத்தாகிட்டே செருப்பு வாங்கி கேட்டேன், கிடைக்கல!

புது துணி வாங்கி கேட்டேன் , கிடைக்கல!

வாரத்துக்கு ஒரு தடவையாவது முட்டை கேட்டேன், கிடைக்கல!

புது நோட்டு புக்கு வாங்கி கேட்டேன், கிடைக்கல!

நான் சின்னபுள்ளையா இருக்கச்ச, எங்க ஆத்தாகிட்டே சைக்கிள் வாங்கி கேட்டேன், கிடைக்கல.!

வீடு ஒழுகுதுன்னு புது வீடு கட்டி கேட்டேன் கிடைக்கல!

படம் பாக்க  டீவி வாங்கி  கேட்டேன், கிடைக்கல.!

கடல போட மொபைல் போன் வாங்கி கேட்டேன், கிடைக்கல!

காலேஜுக்கு போக சீட் வாங்க காசு கேட்டேன், கிடைக்கல!

காலேஜுக்கு போறச்சே , கம்ப்யுட்டர் வாங்கி கேட்டேன் , கிடைக்கல!

இப்புடி என்ன எங்க ஆத்தாகிட்டே கேட்டாலும், அவங்க  பேச்சே மாறாம அவங்க சொல்லுற ஒரே பதிலு , கலைஞர் ஐய்யா அடுத்த ஆட்சியில வந்ததும் இலவசமாவே தந்துருவார்னு,

 அதுனால எனக்கு எதுவுமே கேட்டதும் கெடைக்குறது இல்லை,

எப்புடியும் ஓசியில கெடச்சுரும், இப்பவே எதுக்கு காசு கொடுத்து வாங்கணும்னு நெனச்சு எங்க ஆத்தா எதையும் தேவை படும் போது வாங்கி தாறதுமில்லை..

கொறஞ்சது அஞ்சு வருசமாவது காத்து கெடந்து தான் வாங்க வேண்டி இருக்கு,, இப்போ சொல்லுங்க கலைஞர் நல்லவரா, கெட்டவரா ??

தெரியலெயேப்ப்பப்பா!!
1 comment:

பி.நந்தகுமார் said...

இப்ப நான் சொல்றேன் கலைஞர் மிகவும் நல்லவர். மக்களுடைய வரிப்பணத்தை மக்களுக்கே இலவசமா கொடுக்கிறாரு? மத்தவங்க வந்தா சுருட்டத்தான் பார்க்கிறாங்க! http://tamil444news.blogspot.com