வண்டு முருகன்,இ.கு.க கட்சி,வட்ட செயலாளர்

Loading...

Monday, March 21, 2011

குடித்தவருக்கும், ஊத்தி கொடுத்தவருக்கும் உள்ள ஒற்றுமை.


 • ரெண்டு பேருக்கும் சொந்தமா பேச தெரியாது.
 • யாராவது எழுதி கொடுக்கிற அறிக்கையை வெளியிடுவாங்க.. சில நேரங்களில் அதை படிச்சும் பாப்பாங்க.
 • அவர்களை அழிப்போம்னு ஒரு வார்த்தையாவது அவங்களோட  அறிக்கைல இல்லாம இருக்காது.
 • அறிக்கை மட்டும் விடுவாங்க, போராட்டம் பண்ணுறது கட்சி காரன் மட்டும் தான், அதுவும் வீடியோ எடுத உடன் கலைஞ்சி போயிருவாங்க.
 • இவருக்கு தோழன் இப்ராகிம் ராவுத்தர் (இப்போ எங்கே இருக்காரோ) , அம்மாவுக்கு தோழி சசிகலா..
 • இவரு சூட்டிங் இல்லாம ப்ரீயா இருந்தா அறிக்கை விடுவாரு, அவங்க கோட நாடுல ஓய்வு எடுத்துட்டு இருந்தா அறிக்கை விடுவாங்க.
 • ரெண்டு பேரு பேருலையும் புரட்சி இருக்கு (என்ன புரட்சி செய்தாங்கண்ணு கேககாதீங்க ப்ளீஸ்)
 • MGR பேரு சொல்லாம கட்சி நடத்த முடியாது.
 • ரெண்டு பேரோட கட்சியிலையும் எம்.ஜி.யாரை ஏமாத்தினவங்க இருக்காங்க , பண்ட்ருட்டி இங்கே , அம்மா அங்கே.
 • பக்கத்து மாநிலத்துல பொறந்து , தமிழ் நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் உயிரயே(??) கொடுப்பாங்க.ரெண்டு பேருக்கும் தாய் மொழி தமிழ் கிடையாது.
 • அரசியல் வியாதியா நடிக்காம , நடிச்சு அரசியல்வியாதி ஆனாவங்க.
 • இவரு 2001 ல கலைமாமணி , அவங்க 1972 லேயே கலைமாமணி .
 • இவரு 2011 லேயும் , அவங்க 1991 லேயும் படிக்காமலேயே ரெண்டு பேரும் டாக்டர் பட்டம் வாங்கி இருக்காங்க.
 • ரெண்டு பேரும் சந்தன கடத்தல் மன்னனை புடிச்சி அழிச்சிருக்காங்க.. அவரு அழிச்சது வீரபத்திரனை, இவங்க அழிச்சது வீரப்பனை.
 • இவருக்கு கண்ணு மட்டும் சிவப்பு, அவங்களோ அப்படி ஒரு சிவப்பு.
 • மண்டபத்தை இடிச்சதுனால இவருக்கு கோபம், சட்டசபையில இவரை இடுச்சதுனால இவங்களுக்கு கோபம்.
 • இவர் பிரேமலதாவுக்கு அடங்கி போவாரு, இவங்க சசிகலாவுக்கு அடங்கி போவாங்க.
 • இவரு கட்சி காரங்களை  பச்சை பச்சையா தான் பேசுவாரு..இவங்க எப்ப்வுமே பசசை (கலரு கலரு) தான்.
 • இவருக்கு பேருல விஜயம் இருக்கு, அவங்களுக்கு பேருல ஜெயம் இருக்கு.
மொத்ததில இவங்க ரெண்டு பேரு கைல தான் தமிழ் நாட்டோட தலை விதியே இருக்கு.


5 comments:

.:::Senthilkumar:::. said...

இவருக்கு கண்ணு மட்டும் சிவப்பு, அவங்களோ அப்படி ஒரு சிவப்பு. -- சூப்பர் மச்சி!!

ஆனா விஜயகாந்த் மதுரை காரர்...அப்படின்னு தான் wikipedia-ல போட்டிருக்கு..

Anonymous said...

பட்டதுக்கு வால் இருக்குறதுனால சிங்கத்தால பறக்க முடியுமா ?

பாலா said...

நீங்க சொல்றதும் சரிதான். அதுக்காக 35 கிலோ இலவச அரிசிய வாங்கி, இலவச கிரைண்டரில் மாவரைத்து (மின்சாரம் இருந்தா), இட்லி சுட்டு இலவச டீவியில் மானாட மயிலாட பாத்துக்கிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்றீங்களா?

sammil said...

பாலா , நான் அப்படி சொல்லவே இல்லையே

Farzana said...

எங்கள் அண்ணன் வண்டு முருகன், சிந்தனை சிற்பி,, சயனைடு குப்பி

Anyway You tell the true story. I dont have interest in politics . When i started reading padithuraipandi really it create interest. thanks for valuable information.. sammil machan super da!