Sunday, April 17, 2011

ரஜினிகாந்துக்கு வண்டு முருகன் கண்டனம்

தான் நடிக்கிற படத்தோட ஸ்டில்ஸ்  வெளியே வரக்கூடாது என்பதற்காக சூட்டிங் நடக்குற எடத்துல கேமரா போனையே நீங்களும், உங்க டைரக்டரும் அனுமதிக்கிறது இல்லை. இதுல எவ்வளவு கவனமா இருக்கிற நீங்க ஒட்டு போடும் போது மட்டும் ஏன் சார் கண்ட கண்ட ***** எல்லாம் போட்டோ எடுக்க உடுறீங்க.. நோகாம நொங்கு திங்கிற நீங்க உங்க படம் வெளியே வந்து கோடி கோடியா சம்பாதிக்கணும்னு நீங்க ஆசை படும்போது , கோடியா கோடியா செலவு (??) பண்ணி ஓட்டுக்கு நிக்கிறவனுக்கு நீங்க ஓட்டு போடும் போது கொஞ்சம் மறைவாக போட கூடாதா?? நீங்க ஒட்டுக்கு நிக்கிற நாதாரிங்க கூட்டத்துல ஒரு முடுச்சவிக்கு தான் நீங்க ஒட்டு போட முடியும்..  அட நீங்க ஓட்டுக்கு நிக்கிற எந்த நாதாரிக்கோ முடுச்சவிக்கிக்கோ ஒட்டு போடுங்க..ஏன்னா அது உங்க விருப்பம் அது உங்கள் அந்தரங்க விசயம் கூட. உங்கள் அந்தரங்கத்தை அடுத்தவன் எத்தி பார்க்கிறதை நீங்கள் அனுமதி அளிப்பீர்களா என்பது இந்த தான் வண்டு முருகனின் கேள்வி..

நீங்க ஓட்டு போடும் போது எடுக்கப்பட்ட படமோ அல்லது ஒட்டு போடுற மாதிரி போஸ் கொடுக்குற படமோ, உங்க விரலை கொஞ்சம் பாதுகாப்பா வச்சிருக்க கூடாதா? விரலை காட்டி காட்டி படம் நடிச்சு சம்பாதிச்ச நீங்க ,இப்போ அதே வெரலால கேவலப்பட்டு நிக்கிறீங்களே. இதுக்கு தான் அப்பவே சொன்னாங்களோ , வாள் எடுத்தவன் வாளால தான் சாவான்னு.

அது போக விலை வாசி ஏறிப்போச்சின்னு நீங்க உங்க சம்பளத்தை தான் கம்மியா வாங்குறீங்களா இல்லை பொது ஜனம் ஏற்கவனே விலைவாசியில கஷ்டபடுதுன்னு உங்க படத்தை ஓசியில காமிக்கிறீங்களா? எல்லாரும் நடிச்ச படத்தை விட உங்க படத்தோட டிக்கட் தான் காசு அதிகம் அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? ரசிகனுக்கு ஒரு வேளை சோறு கூட போட முடியல உங்களால..

நீங்கள் எல்லாம் நல்ல வேளை அரசியலுக்கு வர வில்லை, வந்திருந்தால் அந்த கேப்டனையே மிஞ்சி இருப்பீங்க போங்க (காமடியில)!!

8 comments:

பொன் மாலை பொழுது said...

//அது போக விலை வாசி ஏறிப்போச்சின்னு நீங்க உங்க சம்பளத்தை தான் கம்மியா வாங்குறீங்களா இல்லை பொது ஜனம் ஏற்கவனே விலைவாசியில கஷ்டபடுதுன்னு உங்க படத்தை ஓசியில காமிக்கிறீங்களா? எல்லாரும் நடிச்ச படத்தை விட உங்க படத்தோட டிக்கட் தான் காசு அதிகம் அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா? ரசிகனுக்கு ஒரு வேளை சோறு கூட போட முடியல உங்களால..//



இதனை ரஜினி போன்றோர்கள் , அவரை அரசியலுக்கு வரசொல்லும் அறிவிலிகள் படிக்கட்டும்.
இணையத்தில் எழுதுபவர்களில் கொஞ்சம் பேராவது உணர்வுடன் இருக்கின்றார்கள்.
நல்ல "சொரணை "உள்ள பதிவுதான்.

aadavan said...

ரஜினி ஓட்டு போட்டதை டீவில காட்டிய பொழுது எங்க ஆயா சொல்லுச்சு ''இவனொருத்தன் ஒவ்வொரு தேர்தலுக்கும் வந்து ஓட்டு போட்டுட்டு என்னோமோ அந்த கடவுளே வந்து ஓட்டு போடற மாதிரி பந்தா பண்றான்.இவன் பேச்சையெல்லாம் எவன்டா இப்போ கேக்குறானுங்க. இவன்தான் சொன்னான் ஜெயலலிதா ஆட்ச்சிக்கு வந்தா ஆண்டவனால கூட தமிழ்நாட்ட காப்பாத்தமுடியாதுன்னு. இப்ப என்னடானா ரெட்டலைக்கு ஒட்டுபோடரானாம்.இன்னுமாடா ஊரு இவன நம்பிக்கிட்டு இருக்குது". என்று.

Soundararajan G said...

அவர் ஒரு சிறந்த business man; அதற்கு அடுத்து (நன்றாக கவனியுங்கள், அடுத்துதான்) ஒரு மணிதாபிமானி. வேறு எதையும் எதிர்பார்ப்பது, நம்ம தப்புதான். சமயத்தில் குழப்பவாதிதான்; presence of mind கொஞ்சம் கம்மிதான்; அதன் வெளிப்பாடே, இந்த பேட்டி, etc.
நாம்தான் தெளிவாக இருந்து, தியேட்டரில் ரசிப்பதோடு நிறுத்திக்கொண்டு, நிஜத்தில் இந்த comedy எல்லாம் புறந்தள்ள வேண்டும். ரஜினி ரசிகர்கள் சிந்திப்பார்களா?

செல்வா said...

மொதல்ல அவர் ஓட்டுப் போடுறத படம் பிடிக்கிறது தப்பு ..
அவர்னு இல்ல , யாரா இருந்தாலும் தப்புதான். அது அவுங்க அவுங்க சொந்த விருப்பம். இந்த மீடியா காரங்களதான் சொல்லணும்.

அதே மாதிரி அவரும் தடுத்திருக்கணும்.!

Anonymous said...

Excellently written. Very funny. I have become your fan and will follow you.
amas32

படித்துறை பாண்டி said...

கருத்துக்களை வெளியிட்டு எங்களை மீண்டும் மீண்டும் உசுப்பேத்தும் அன்பு நெஞ்சங்களுக்கு வண்டு முருகனின் நன்றிகள்.

Anonymous said...

இதனை ரஜினி அரசியலுக்கு வரசொல்லும் அறிவிலிகள் படிக்கட்டும்.

Great one.

அன்புடன் நான் said...

உங்க ஆதங்கம் சரிதான்...